அன்பார்ந்த சகோதரர்கள் அனைவருக்கும் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும்
கூத்தாநல்லூர் பெரியதெருவை பூர்விகமாககொண்ட போயிலக்கட்டை P.S.அமானுல்லாஹ் அவர்கள்அஜ்மான் முனிசிபாலிடியில் வேலை செய்து வருவது .இவருக்கு ஒருமகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இவரது மகன் ஷேக் ஹம்தான்(வயது 22) ஆகிய இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு தஞ்சையில் உள்ள ரோகினி மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். 2,3 நாட்கள் ஆகியும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சென்னையில் உள்ள விஜயா ஹெல்த் சென்டர்-க்கு அழைத்து சென்றனர்.
அங்கு சென்ற பிறகு தான் அவரது மகனின் இரண்டு கிட்னியும் செயல் இழந்து போனது தெரிய வந்துள்ளது. என்ன செய்வது என்று தெரியாத நிலையில் டாக்டர்களின் ஆலோசனையின்பேரில் இரண்டு முறை டயாலிசிஸ் செய்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு தாய்,தந்தை
ஆகிய இருவரில் ஒருவரோ அல்லது வெளிநபர் ஒருவரோ கிட்னி தானம் செய்ய முன் வரவேண்டும் என்று டாக்டர்கள் உறுதியாக கூறிவிட்டனர். இதற்கு அதிகபட்சமாக 8 லட்சம் வரை செலவாகும் என்று கூறுகின்றனர்.கலைஞர் காப்பிட்டு திட்டத்தின் மூலம் 1.5 லட்சம் வரும்
என்றும் தெரிகிறது.பாக்கி உள்ள பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.
சொற்ப சம்பளத்தில் பணிபுரியும் அமானுல்லாஹ் அவர்களின் மகனின் சிகிச்சைக்கு
நிதி உதவி செய்து சிறுவனின் உயிர் காக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
இவ்வாறாக அமானுல்லாஹ் அண்ணன் அவர்கள் கேட்டு கொள்கிறார்.
தங்களின் நிதி உதவிகளை கீழ்கண்ட வங்கி முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
v.m.jainab nachiya
a/c no.10173
indian overseas bank
koothanallur branch
koothanallur.
P.S.AMANULLAH
cell no. 9994629584
No comments:
Post a Comment