லண்டன்: அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் புதிதாக 2000 பேர் வேலைக்கு அமர்த்தப்பட இருப்பதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பிரிட்டனை சேர்ந்த பழமைவாய்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவரை,டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது.ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் பங்குகளை டாடா மோட்டார்ஸ் வாங்கியது.
இதையடுத்து,நலிந்த நிலையில் இருந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தில்,டாடா மோட்டார்ஸ் சி்க்கன நடவடிக்கைகளை துவங்கியது.நிதி நெருக்கடியை சமாளிக்க தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க டாடா ஜாகுவார் நிறுவனம் முடிவு செய்தது.ஆனால்,இதற்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும்,அதிருப்தியும் எழுந்ததால்,தனது நிலையில் இருந்து டாடா மோட்டார்ஸ் பின்வாங்கியது.
இந்தநிலையில்,ஜாகுவார் லேண்ட் ரோவரின் நிலைமை மாறி,அந்த நிறுவனம் தற்போது எழுச்சிப் பாதையில் செல்ல துவங்கியுள்ளது.மேலும்,மார்க்கெட்டில் நிலைக்க புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும்,தொழிலாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஜாகுவார் லேண்ட் ரோவர் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் இயக்குனர் கூறியதாவது:
"ஜாகுவார் லேண்ட் ரோவர் சீரமைப்பு பணிகளுக்காக ரூ.6,000கோடியை டாடா மோட்டார்ஸ் செலவிட உள்ளது. இதில்,பெரும்பான்மையான தொகை புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு பணிகளுக்கு செலவிடப்படும்.
தவிர,வரும் 2013ம் ஆண்டுக்குள் புதிதாக 2,000பேர் வேலைக்கு அமர்த்தப்படுவர்.இதன்மூலம்,நிறுவனத்தின் தொழிலாளர் எண்ணிக்கை 18,000லிருந்து 20,000 ஆக உயரும்.தொழிலாளர் எண்ணி்க்கை அதிகரிப்பதன் மூலம்,புதிய மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்த ஏதுவாகும்.
மேலும்,ஒரு முறை சார்ஜ் செய்தால் 900கி.மீ.,செல்லும் எலக்ட்ரிக் காரை வரும் 2013ம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இது டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட காராக இருக்கும்,"என்று கூறினார்
No comments:
Post a Comment