19 February 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் 2011-வீரர்கள்

ஆஸ்திரேலியா:

ரிக்கி பான்டிங் (கேப்டன்)

Ricky Ponting Australia Captainகலம் பெர்குசன், கேமரூன் ஒயிட், மைக்கேல் கிளார்க், பிரெட் லீ, டோக் பொலிஞ்சர், ஜேசன் கிரெஜா, ஜான் ஹேஸ்டிங்ஸ், மிட்சல் ஜான்சன், ஷான் டெய்ட், டேவிட் ஹஸ்ஸி, ஷான் வாட்சன், ஸ்டீவன் ஸ்மித், பிராட் ஹாதின், டிம் பெய்ன்.


பயிற்சியாளர்- டிம் நீல்சன்

கேப்டனின் சிறப்புகள்- 2003, 2007 ஆகிய உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தவர் ரிக்கி பான்டிங். தற்போது 3வது முறையாக தனது தலைமையில் கோப்பையை வெல்லும் கனவுடன் தெற்காசியாவுக்கு வந்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் பான்டிங். மேலும், உலகக் கோப்பைப் போட்டிகளில் நான்கு முறை சதம் அடித்த நான்கு வீரர்களில் இவரும் ஒருவர்.

152 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12,363 ரன்கள் குவித்துள்ளார். இதில் 39 சதங்கள், 56 அரை சதங்கள் அடக்கம்.
352 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 13,082 ரன்கள் குவித்துள்ளார். இதில் சதங்களின் எண்ணிக்கை 29, அரை சதங்கள் 79.
17 டுவென்டி 20 போட்டிகளில் ஆடி 401 ரன்கள் எடுத்துள்ளார்.இதில் அரை சதங்களின் எண்ணிக்கை 2.

ஒரு நாள் போட்டிகளில் ஐசிசி தர வரிசைப் பட்டியலில் 13வது இடத்தில் இருக்கிறார் பான்டிங்.

வங்கதேசம்:

ஷகீப் அல் ஹசன் (கேப்டன்)

Shakib Al Hasan (Bangladesh)இம்ருல் கயஸ், முகம்மது அஷ்ரபுல், ரகீபுல் ஹசன், ஷஹாரியர் நபீஸ், தமீம் இக்பால், ஜூனாயத் சித்திக், அப்துல் ரஸ்ஸாக், முகம்மது சோரவார்டி, நயீம் இஸ்லாம், நஸ்முல் ஹூசைன், ரூபல் ஹூசைன், ஷபியுல் இஸ்லாம், மகமதுல்லா முஷ்பிகர் ரஹீம்.


பயிற்சியாளர்-ஜேமி சிட்டன்ஸ்

கேப்டனின் சிறப்புகள் - ஒரு நாள் போட்டிக்கான ரிலையன்ஸ் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் சிறந்த ஆல் ரவுண்டராக அறிவிக்கப்பட்டவர். ஒரு நாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் பந்து வீச்சில் 5வது இடத்திலும், பேட்டிங்கில் 20வது இடத்திலும் இருக்கிறார். 2009ம் ஆண்டு வங்கதேசத்தை, வெளிநாடு ஒன்றில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் பெருமையைத் தேடிக் கொடுத்தவர். 2010ல் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரை 4-0 என்ற கணக்கில் இவரது தலைமையில் வங்கதேசம் வென்றது. அதில் 11 விக்கெட்களை வீழ்த்திய ஹசன், ஒரு செஞ்சுரியும் போட்டார்.

21 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1179 ரன்களும், 102 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 2834 ரன்களும், 14 டுவென்டி 20 போட்டிகளில் ஆடி 207 ரன்களும் எடுத்துள்ளார்.

கனடா:

ஆசிஷ் பகாய் (கேப்டன்)

Ashish  Bagai (Canada)ஹிரால் படேல், ஜிம்மு ஹன்ஸ்ரா, கார்ல் வேதம், நிதீஷ் குமார், ரிஸ்வான் சீமா, ருவிந்து குணசேகரா, டைசன் கார்டன், ஜுபின் சுர்காரி, பாலாஜி ராவ், ஹென்றி ஓஷிண்டே, குர்ரம் சோஹன், பார்த் தேசாய், ஹர்வீர் பைத்வான், ஜான் டேவிசன்.


பயிற்சியாளர்-புபுடு தசநாயகே

கேப்டனின் சிறப்புகள் - 17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். 2000, 2002ல் நடந்த ஐசிசி இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கனடா சார்பில் பங்கேற்றார். 2003 உலகக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாதனை படைத்த கனடா அணியில் இவரும் இடம் பெற்றிருந்தார். 2007ல் நடந்த ஐசிசி உலகக் கிரிக்கெட் லீக் டிவிஷன் தொடரில் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரிக்கெட் வாழ்க்கைக்காக தனது வங்கிப் பணியை துறந்தவர்.

ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் 53 வது இடத்தில் இருப்பவர்.

54 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 1736 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள், 14 அரை சதங்கள் அடக்கம். 7 டுவென்டி 20 போட்டிகளில் ஆடி 169 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு அரை சதம் அடக்கம்.

இங்கிலாந்து:

ஆண்ட்ரூ ஸ்டிராஸ் (கேப்டன்)

Andrew Strauss (Eng)இயான் பெல்,ஜோனதன் டிராட், கெவின் பீட்டர்சன், அஜ்மல் சஷாத், கிரீம் ஸ்வான், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேம்ஸ் டிரெட்வெல், மைக்கேல் யார்டி, பால் காலிங்வுட், ஸ்டுவர்ட் பிராட், லூக் ரைட், ரவி போபரா, டிம் பிரஸ்னன், மாட் பிரியர்.


பயிற்சியாளர்-ஆண்டி பிளவர்.

கேப்டனின் சிறப்புகள் - 2003ல் ஒரு நாள் போட்டிகளில் ஆட ஆரம்பித்தார். 2007 கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடிய அனுபவம் படைத்தவர். 2வது முறையாக உலகக் கோப்பைப் போட்டிக்கு வந்துள்ளார். 2009ம் ஆண்டு மார்ச் மாதம், 2 வருட கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் கேப்டன் பதவிக்கு திரும்பினார். 2010ல் 2 செஞ்சுரிகளுடன் சிறந்த முறையில் தனது விளையாட்டுத் திறனை நிரூபித்துள்ளார்.

ஐசிசி தரவரிசையில் பேட்டிங்கில் 21வது இடத்திலும், பவுலிங்கில் 297வது இடத்திலும் உள்ளார்.

82 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 6084 ரன்களை எடுத்துள்ளார். 19 சதங்கள், 24 அரை சதங்கள் இதில் அடக்கம்.
120 ஒரு நாள் போட்டிகளில் ஆடி, 3871 ரன்கள் குவித்துள்ளார். இதில் சதங்கள் 5, அரை சதங்கள் 26.
4 டுவென்டி 20 போட்டிகளில் ஆடி, 73 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்தியா:

மகேந்திர சிங் டோணி (கேப்டன்)

MS Dhoni (India)கெளதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக், சுரேஷ் ரெய்னா, விராத் கோலி, ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், முனாப் படேல், பியூஷ் சாவ்லா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரீசாந்த், ஜாகிர் கான், யூசுப் பதான், யுவராஜ் சிங்.


பயிற்சியாளர்-கேரி கிர்ஸ்டன்

கேப்டனின் சிறப்புகள் - ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் சிறப்பாக ஆடக் கூடியவர். அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் மாயாஜாலம் தெரி்ந்தவர், சிறந்த கேப்டன் என்று சகல தரப்பினராலும் புகழப்பட்டவர் டோணி. 2003ல் இவர் வங்கதேசத்திற்கு எதிராக தனது ஒரு நாள் போட்டி வாழ்க்கையை தொடங்கினார். முதல் போட்டியில் இவர் எடுத்து ரன்கள் - முட்டை. அதிலும் ரன் அவுட் ஆனவர். ஆனால் அதன் பின்னர் இவரது நான் ஸ்டாப் வெற்றிகளால் புகழேணியின் உச்சியில் உட்கார்ந்திருப்பவர்.

2005ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 183 ரன்களைக் குவித்தார். இதுவரே இவரது ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ரன்னாகும். மேலும், சேஸ் செய்து விளையாடிய அணியின் வீரர் ஒருவர் போட்ட அதிகபட்ச ஸ்கோரும் இதுவேயாகும்.

சென்னையில் 2007ல் நடந்த ஆசிய- ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆட்டமிழக்காமல் 139 ரன்களைக் குவித்தார்.

2007, செப்டம்பர் மாதம் இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஐசிசி தர வரிசைப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார் டோணி.

இந்திய அணியின் சிறப்புகள் - 1983ம் ஆண்டு லண்டனில் நடந்த உலகக் கோப்பபைப் போட்டியில் கோப்பையை வென்றது இந்தியா. அதன் பிறகு இதுவரை கோப்பைக் கனவு கை கூடாமலேயே உள்ளது.

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை எடுத்துள்ள பெருமையை சச்சின் வைத்துள்ளார். மொத்தம் 1796 ரன்களை அவர் எடுத்துள்ளார்.

ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்களைக் குவித்துள்ள வீரரும் சச்சின்தான். 2003 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் அவர் 673 ரன்களைக் குவித்தார்.

உலகக் கோப்பைப் போட்டிகளில் 3 முறை 90 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழந்த ஒரே வீரரும் சச்சின்தான்.

உலகக் கோப்பை போட்டி ஒன்றில் அதிக ரன்களைக் குவித்த அணி இந்தியா. 2007ல் பெர்முடாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்களைக் குவித்தது.

உலகக் கோப்பைப் போட்டி வரலாற்றில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியும் இந்தியாதான். பெர்முடாவை 257 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்ததே அந்த சாதனை.

2, 3 மற்றும் 9 விக்கெட் ஜோடிக்கு அதிக ரன்களைக் குவித்த சாதனையும் இந்தியாவிடமே உள்ளது. 2வது விக்கெட் சாதனையை கங்குலி, டிராவிடும், 3வது விக்கெட் சாதனையை டிராவிட், சச்சினும், 9வது விக்கெட் சாதனையை கபில் தேவ், கிர்மானியும் வைத்துள்ளனர்.

அயர்லாந்து:

வில்லியம் பாட்டர்பீல்ட் (கேப்டன்)

William Porterfield (Ireland)ஆண்ட்ரூ ஒயிட், எட் ஜாய்ஸ், பால் ஸ்டிர்லிங், ஆல்பர்ட் வான் டெர் மெர்வ், பாயிட் ரான்கின், ஜார்ஜ் டாக்ரெல், ஜான் மூனி, நிகல் ஜோன்ஸ், அலெக்ஸ் குசாக், ஆண்ட்ரே போத்தா, கெவின் ஓ பிரையன், டிரென்ட் ஜான்ஸ்டன், கேரி வில்சன், நியால் ஓ பிரையன்.


பயிற்சியாளர்-பில் சிம்மன்ஸ்

கேப்டனின் சிறப்புகள் - பிரையன் லாராவின் தீவிர ரசிகர் பாட்டர்பீல்ட். 2007 உலகக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்தை 74 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வீழ்த்தியது. அப்போது பாட்டர்பீல்ட் 85 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.2009ல் நடந்த எல்ஜி ஐசிசி விருதுகள் நிகழ்ச்சியில், சிறந்த (அசோசியேட் அணிகளில்) வீரராக தேர்வானார். 2011ல் வார்விக்ஷயர் அணிக்கு ஆட தேர்வானார். ஏற்கனவே கிளவ்செஸ்டர்ஷயருக்காக ஆடியுள்ளார்.

ஐசிசி தர வரிசைப் பட்டியலில் 61வது இடத்தில் இருக்கும் பாட்டர்பீல்ட், 44 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 1371 ரன்களும், 17 டுவென்டி 20 போட்டிகளில் ஆடி 263 ரன்களும் எடுத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 5 சதங்களையும், 4 அரை சதங்களையும் விளாசியுள்ளார்.

கென்யா:

ஜிம்மி கமண்டே (கேப்டன்)

Jimmy Kamande (Kenya)அலெக்ஸ் ஒபாண்டா, ராகேப் படேல், செரன் வாட்டர்ஸ், ஸ்டீவ் டிக்கோலா, தன்மய் மிஷ்ரா, எலிஜா ஒடியானோ, ஜேம்ஸ் கோச்சே, நெஹமயா ஒடிஹம்போ, பீட்டர் ஓங்கோண்டோ, ஷெம் கோச்சே, காலின்ஸ் ஒபுயா, தாமஸ் ஒடாயோ, டேவிட் ஒபுயா, மாரிஸ் ஔமா.


பயிற்சியாளர்-எல்டின் பாப்டிஸ்ட்

நெதர்லாந்து:

பீட்டர் போரன் (கேப்டன்)

Peter Borren (Netherlands)அலெக்ஸி கெர்வீஸ், பாஸ் ஜூடெரன்ட், எரிக் ஸ்வார்சின்ஸ்கி, டாம் கூப்பர், டாம் டி க்ரூத், அதீல் ராஜா, பெரென்ட் வெஸ்டிக், பெர்னார்ட் லூட்ஸ், பிராட்லி கிரெஜர், பீட்டர் சீலர், முடாஸர் புகாரி, ரியான் டென் டஸ்சாட், அட்சே புர்மான், வெஸ்லி பெரசி,


பயிற்சியாளர்-பீட்டர் டிரின்னன்

கேப்டனின் சிறப்புகள் - 2002ல் நடந்த ஐசிசி 19 வயதுக்கோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்று ஆடியவர் போரன். ஆல்ரவுண்டரான இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கேப்டனாகப் பொறுப்பேற்றார்.

நியூசிலாந்து:

டேணியல் வெட்டோரி (கேப்டன்)

Daniel Vettori (New Zealand)ஜேமி ஹவ், ஜெஸ்ஸி ரைடர், கேன் வில்லியம்சன், மார்டின் குப்தில், ராஸ் டெய்லர், ஹமீஷ் பென்னட், கைல் மில்ஸ், லூக் உட்குக், டிம் செளதி, ஜேக்கப் ஓரம், ஜேம்ஸ் பிராங்க்ளின், நாதன் மெக்கல்லம், ஸ்காட் ஸ்டைரிஸ், பிரென்டன் மெக்கல்லம்.


பயிற்சியாளர்-ஜான் ரைட்

கேப்டனின் சிறப்புகள் - நியூசிலாந்து டெஸ்ட் வரலாற்றில் மிகவும் இளைய வயதில் ஆட வந்தவர் என்ற பெருமை வெட்டோரிக்கு உண்டு. டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களையும், 300 விக்கெட்களையும் வீழ்த்திய பெருமைக்குரியவர். உலக அளவில் இந்த சாதனையைச் செய்தவர்கள் 8 பேர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய நியூசிலாந்து வீரரும் இவரே.

நியூசிலாந்துக்காரராக இருநந்தாலும் இவர் இத்தாலிய வம்சவாளியைச் சேர்ந்தவர்.

ஐசிசி தர வரிசைப் பட்டியலில் பந்து வீச்சில் முதலிடத்தில் இருக்கிறார் வெட்டோரி.

பாகிஸ்தான்:

ஷாஹித் அப்ரிடி (கேப்டன்)

Shahid Afridi (Pakistan)அகமது சஷாத், ஆசாத் ஷபீக், மிஸ்பா உல் ஹக், உமர் அக்மல், யூனிஸ் கான், அப்துர் ரஹ்மான், ஜூனைத் கான், சயீத் அஜ்மல், சோயப் அக்தர், உமர் குல், வஹாப் ரியாஸ், அப்துல் ரஸ்ஸாக், முகம்மது ஹபீஸ், கம்ரன் அக்மல்.


பயிற்சியாளர்-வக்கார் யூனிஸ்

கேப்டனின் சிறப்புகள் - சிறந்த அதிரடி வீரர்களில் ஒருவர் அப்ரிடி. ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் உயர்ந்தபட்ச ஸ்டிரைக்கிங் ரேட்டை வைத்திருப்பவர். ஒரு நாள் போட்டிகளில் விளாசப்பட்ட அதி வேக 6 சதங்களில் மூன்று இவர் போட்டது.

1996ல் 37 பந்துகளில் சதம் போட்டு அதி வேக சதம் என்ற சாதனையைப் படைத்தவர்.

ஒரு நாள் போட்டிகளில் அதிக அளவில் சிக்ஸர்கள் விளாசியவர். 300 ஒரு நாள் போட்டிகளுக்கும் மேல் ஆடிய 3வது பாகிஸ்தான் வீரர்.

தென் ஆப்பிரிக்கா:

கிரீம் ஸ்மித் (கேப்டன்)

Graeme Smith (South Africa)காலின் இங்க்ராம், ஹசீம் அம்லா, டுமினி, டேல் ஸ்டெயின், இம்ரான் தஹீர், ஜோஹன் போத்தா, லோன்வேபோ சோத்சோபே, மார்னி மார்க்கல், ராபின் பீட்டர்சன், வேயன் பர்னல், பாப் டு பிளஸ்ஸிஸ், ஜேக்கஸ் காலிஸ், அப் டி வில்லியர்ஸ், மார்னி வான்விக்.


பயிற்சியாளர்-காரி வேன் ஜில்

கேப்டனின் சிறப்புகள் - 22வது வயதில் 2003ம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார் ஸ்மித். அன்று முதல் இவரே தொடர்ந்து இப்பதவியில் வகித்து வருகிறார்.

லார்ட்ஸ் மைதானத்தில், டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரு வெளிநாட்டு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இவரது 259 ரன்கள் உள்ளன.

2007 உலகக் கோப்பைப் போட்டியில் 443 ரன்களைக் குவித்தார். இதில் ஐந்து அரை சதங்களும் அடக்கம்.

இலங்கை:

குமார சங்கக்காரா (கேப்டன்)

Kumar Sangakkara (Sri Lanka)சமர கபுகதேரா, சமர சில்வா, மஹளா ஜெயவர்த்தனே, திலன் சமரவீரா, திலகரத்னே தில்ஷன், உபுல் தரங்கா, அஜந்தா மெண்டிஸ், தில்ஹாரா பெர்னாண்டஸ், லசித் மலிங்கா, முத்தையா முரளீதரன், நுவான் குலசேகரா, ரங்கனா ஹெராத், ஏஞ்சலோ மாத்யூஸ், திசரா பெரேரா.


பயிற்சியாளர்-டிரெவர் பேலிஸ்

கேப்டனின் சிறப்புகள் - 2000மாவது ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமானார். 2009ல் நடந்த ஐசிசி உலகக் கோப்பை டுவென்டி 20 தொடருக்கு முன்பு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

2003, 2007 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆடியுள்ளார். இது இவருக்கு 3வது உலகக் கோப்பைப் போட்டியாகும்.

மேற்கு இந்தியத் தீவுகள்:

டேரன் சமி (கேப்டன்)

Darren Sammy (West Indies)அட்ரியன் பரத், டேரன் பிரேவோ, தேவான் ஸ்மித், ராம்நரேஷ் சர்வான், ஷிவ்நரைன் சந்தர்பால், ஆண்ட்ரி ருஸ்ஸல், கெமர் ரோச், நிகிதா மில்லர், ரவி ராம்பால், சுலைமான் பென், கிறிஸ் கெய்ல், திவாயன் பிரேவோ, கிரன் போலார்ட், கார்ல்டன் பாக்


பயிற்சியாளர்-ஓட்டிஸ் கிப்சன்.

கேப்டனின் சிறப்புகள் - 2010ம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார். செயின்ட் லூசியாவிலிருந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் இணைந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை உடையவர். இவர் அறிமுகமான முதல் போட்டியே, ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

2007ல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சமி, அப்போட்டியில் 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

ஜிம்பாப்வே:

எல்டன் சிகும்பரா (கேப்டன்)

Elton Chigumbura (Zimbabwe)பிரன்டன் டெய்லர், சார்லஸ் கோவன்ட்ரி, கிரேக் எர்வின், சீன் வில்லியம்ஸ், டெர்ரி டப்பின், கிறிஸ் போஃபு, கிரீம் கிரெமர், கிரேக் லாம்ப், பிராஸ்பர் உத்சயா, ரே பிரைஸ், ஷிங்கிராய் மஸ்கத்ஸா, தினாஷே பன்யங்கரா, ரெஜிஸ் சக்பவா, தாடென்டா தைபு.


பயிற்சியாளர்-ஆலன் பட்சர்.

19 வயதுக்குட்பட்டோருக்கான 2002, 2004 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆடியுள்ளார். 2010 மே முதல் கேப்டனாக இருக்கிறார். 2010ல் சிறந்த ஜிம்பாப்வே வீரராக அறிவிக்கப்பட்டார்.

ஜிம்பாப்வேக்காக அதிக அளவிலான சிக்ஸர்கள் அடித்த பெருமைக்குரியவர்

No comments: