05 February 2011

தமிழக அரசின் 2011-12ம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை.


சென்னை: தமிழக அரசின் 2011-12ம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் அன்பழகன் இன்று தாக்கல் செய்தார். இதில் புதிய சலுகை அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

கலைஞர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ. 375 கோடி ஒதுக்கீடு.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ. 750 கோடி ஒதுக்கீடு
காவல் துறையை நவீனத்திற்கு ரூ.3,239 கோடி ஒதுக்கீடு
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு
கர்ப்பிணி பெண்களுக்கு உதவி வழங்கும் திட்டத்திற்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு
திருமண உதவித் திட்டத்திற்கு ரூ. 337 கோடி ஒதுக்கீடு
10 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிகள் வாங்க ரூ. 249 கோடி ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சிக்கு ரூ. 8812 கோடி ஒதுக்கீடு.
குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ. 845 கோடியாக நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 12,674 கோடி ஒதுக்கீடு
உயர் கல்வித்துறைக்கு ரூ. 2135 கோடி ஒதுக்கீடு.
தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை பட்டதாரிக்கு ரூ.277 கோடி
ஏழை பெண்கள் திட்டத்திற்கு ரூ.337 கோடி ஒதுக்கீடு.
உணவு மானியத்திற்கு ரூ. 4,000 கோடி ஒதுக்கீடு
நீதி நிர்வாகத்திற்கு ரூ. 633 கோடி ஒதுக்கீடு
ஆதி திராவிடர் கல்வி உதவிநிதிக்கு ரூ. 360 கோடி ஒதுக்கீடு
சிறைத்துறைக் ரூ.140 கோடி ஒதுக்கீடு
நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ. 5,143 கோடி ஒதுக்கீடு
மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 4554 கோடி ஒதுக்கீடு
நகராட்சி வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.2,198 கோடி ஒதுக்கீடு.
மீன்வளத்துறைக்கு ரூ.222 கோடி ஒதுக்கீடு.
1000 திருக்கோவில்களில் ரூ. 100 கோடியில் திருப்பணிகள்
சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.1,421 கோடி ஒதுக்கீடு.
பொது விநியோகத் திட்டத்தில் ரூ. 4000 கோடி ஒதுக்கீடு
நீதிமன்றங்கள் கட்டவும், மேம்படுத்தவும் ரூ. 633 கோடி ஒதுக்கீடு
மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களில் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு ரூ. 845 கோடி ஒதுக்கீடு
சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ. 61 கோடி ஒதுக்கீடு
சிறுபான்மை கல்வி ஒதுக்கீடு திட்டத்திற்கு 40.68 கோடி ஒதுக்கீடு
புதிய சட்டசபைக் கட்டடப் பணிகளுக்கு ரூ. 244 கோடி ஒதுக்கீடு
பயிர்கடன் வழங்குதலில் ஏற்படும் இழப்பீட்டை சரி செய்ய ரூ.140 கோடி ஒதுக்கீடு
வனவளம், சுற்றுச்சூழல், உயிர்ப்பண்மைப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டத்திற்கு ரூ. 38.14 கோடி ஒதுக்கீடு.
மீன்வளத்துறைக்கு ரூ. 222 கோடி ஒதுக்கீடு
கூட்டுறவுத்துறைக்கு ரூ. 140 கோடி ஒதுக்கீடு
தொழில்வளர்ச்சி வரி சலுகை ரூ. 1,525 கோடி ஒதுக்கீடு
திறன் வளர் பயிற்சிக்காக ரூ. 77 கோடி ஒதுக்கீடு
2011-12ம் ஆண்டு காவல்துறைக்கு ரூ. 3239 கோடி ஒதுக்கீடு
சிறைத்துறைக்கு ரூ. 140 கோடி ஒதுக்கீடு
தீயணைப்புத்துறைக்கு ரூ. 169 கோடி ஒதுக்கீடு
சாலைப் பாதுகாப்புக்கு ரூ. 40 கோடி
2010-11ல் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 3129 கோடி.
2011-12ல் ரூ. 430 கோடி உபரி வருவாய் இருக்கும்

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

'கவர்ச்சி' அறிவிப்புகள் இடம்பெறாதது ஏன்?:

சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால் இன்றைய இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. புதிய அறிவிப்புகள் இல்லை என்பதை நிதியமைச்சர் அன்பழகன் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டுத்தான் பட்ஜெட்டை வாசிக்க ஆரம்பித்தார்.

கவர்ச்சிகரமான அறிவிப்புகளை பட்ஜெட்டில் சொல்லாமல், தேர்தல் அறிக்கையில் சொல்லிக் கொள்ளலாம் என்று திமுக முடிவு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இன்றைய பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக நேற்று சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. இந்த தொடரே நடப்பு சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடராக இருக்கும். இந்த தொடர் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. 7, 8, 9 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். அதன் பின்னர் 10ம் பதிலுரை இடம் பெறும். மேலும் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதமின்றி நிறைவேற்றப்படும் என சபாநயாகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.

No comments: