பீஜிங்: சீனாவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை செய்னா சாம்பியன் பட்டம் வென்றார். இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் சீன வீராங்கனை வாங் ஷிக்சியானை எதிர்கொண்டார். போட்டியில் 15-21, 21-16,21-27 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். இவர் பட்டம் வெல்வது இது நான்காவது முறையாகும். இறுதிப்போட்டியில் முதல்செட்டை சீன வீராங்கனை வென்றார் இதனையடுத்து சுதாகரித்து கொண்ட
சாய்னா நேஹ்வால் இரண்டுமற்றும் மூன்றாம் செட்களை வென்று பட்டத்தை கைப்பற்றினார்.நடந்து முடிந்த ஆசிய விளையாட்டில் இதே பிரிவில் செய்னா சீனாவிடம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்தியன் ஓபன் கிரான்ட்ப்ரி, சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ், இந்தோனேசியன் சூப்பர் சீரிஸ் ஆகிய பட்டங்களை வென்ற சாய்னா, சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கம் தட்டிச் சென்றது நினைவிருக்கலாம்.
தற்போதைய வெற்றியின் மூலம் சாய்னா விரைவில் நம்பர் ஒன் ரேங்க்கைப் பெற வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
No comments:
Post a Comment