12 December 2010

விஞ்ஞானிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் : ஈரான் கண்டனம்


ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகள் மீது நடத்தப் படும் பயங்கரவாதத் தாக்கு தல்களுக்கு அந்நாட்டின் ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிதி முகமது காஸி கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.


கடந்த வாரம் நடத்தப் பட்ட தாக்குதலில் ஈரானின் அணுவிஞ்ஞானிகள் கொல் லப்பட்டனர். இதைச் சுட் டிக்காட்டி ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன், பொதுச்சபை தலை வர் ஜோசப் டெய்ஸ், ஐ.நா. வுக்கான அமெரிக்கப் பிரதி நிதி சூசன் ரைஸ் ஆகியோ ருக்கு அவர் கடிதமும் எழுதி யுள்ளார். 


அக்கடிதத்தில், ஈரா னின் அணுசக்தித்திட்டம் என்பது அமைதிப் பணிகளுக்கா கவே நடத்தப்படுகிறது. 


இந்தத்திட்டத்தை எந்தவித நிர்ப்பந்தத்திற்கா கவும் நாங்கள் கைவிட மாட்டோம். அரசியல் மற் றும் பொருளாதார நிர்ப்பந் தங்கள் மற்றும் எங்கள் விஞ்ஞானிகளைக் கொலை செய்வது போன்ற வற்றை மீறி அமைதிப் பணிக்கான அணுசக்தி யைத் தயாரிப் பதைத் தொடர்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


ஏற்கெனவே, ஐ.நா.பாது காப்பு சபையின் ஐந்து நிரந் தர உறுப்பினர்கள் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுக ளோடு அண்மையில் பேச்சுவார்த்தை நடந்துள் ளது. அடுத்த மாதம் மீண் டும் கூடிப்பேசுவது என்று முடிவெடுத்துள்ளார்கள். இந்த நிலையில் ஈரான் விஞ் ஞானிகள் மீதான பயங்கர வாதத் தாக்குதல்களை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் கண் டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


நவம்பர் 29 அன்று ஈரான் தலைநகர் டெஹ்ரா னில் நடைபெற்ற தாக்குத லில் ஈரானின் மஜித் ஷாஹ் ரியாரி மற்றும் அப்பாசி தவானி ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். ஜன வரி மாதத்தில் பேராசிரியர் மசூத் அலி முகம்மதி என்ற ஈரானிய விஞ்ஞானி கொலை செய்யப்பட்டார். விசாரணைகள் மேற்கொள் ளப்பட்டதில், அமைதிப் பணிகளுக்காக ஈரான் அணு சக்தி தயாரிப்பதை விரும்பாத சக்திகள்தான் இதன் பின்னணியில் இருக் கின்றன என்பது தெரிய வந் துள் ளதாகவும் முகமது காஸி குற்றம் சாட்டியுள்ளார்.

No comments: