பெங்களூர்: சர்வதேச சிரிப்பு யோகா அறக்கட்டளை பெங்களூரில் சிரிப்பு பல்கலைக்கழகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகம் பெங்களூர் மைசூர் சாலையில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கிறது. இதை பிரபல மருத்துவர் மதன் கட்டாரியா நிறுவுகிறார். அவர் கூறுகையில்,
உயரினங்களில் மனிதனால் மட்டும் தான் சிரிக்க முடியும். ஆனால், இன்றைய ெயந்திர வாழ்க்கையில் மக்கள் சிரிக்க மறந்து விடுகின்றனர். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்று சொல்வார்கள். இந்த கருத்தை வலியுறுத்தி நான் பல அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாடம் நடத்தியிருக்கிறேன்.
தற்போது அந்த சிரிப்பு பாடத்தை இந்தியாவில் நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளேன். மருந்தை விட சிரிப்பு தான் சிறந்தது என்று என்னிடம் வரும் நோயாளிகளிடம் கூறி வருகிறேன்.
இந்த பல்கலைக்கழகத்தில் மகிழ்ச்சி, இயற்கை மருத்துவம், யோகா அறிவியல், ஆயுர்வேதம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஆன்மீகம் ஆகிய துறைகள் அமைக்கப்படும்.
குறைந்த கட்டணத்தில் ஒரு மாதம் முதல் இரண்டு மாத கால பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment