கான்கன்: மெக்சிகோவின் கான்கன் நகரில் நடந்த ஐ.நா. புவிவெப்ப தடுப்பு மாநாட்டில், வளரும் நாடுகளுக்கு உதவ பசுமை நிதியை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு பொலிவியா கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், இந்த உடன்பாடு ஏற்பட்டது.
புவிவெப்ப தடுப்பு தொடர்பான மாநாடுகளில் இப்போதுதான் முதல் முறையாக இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோபன்ஹேகனில் கடந்த ஆண்டு நடந்த தோல்வி மாநாட்டுக்குப் பின்னர் தற்போது கான்கனில் ஏற்பட்டுள்ள இந்த உடன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து பேசிய மெக்சிகோ அதிபர் பெலிப்பி கால்டிரான், இந்த மாநாடு வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்தார். முன்னதாக மாநாட்டின் இறுதியில் இரண்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன
No comments:
Post a Comment