வெளியூர்கள் மற்றும் மாநிலங்களுக்கு பேச உதவும் எஸ்டிடி கட்டண முறையை அடியோடு ஒழிக்கிறது அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்.
இனி தரைவழி தொலைபேசி மற்றும் செல்போன்களில் உள்ளூர் கட்டணத்திலேயே பேசிக் கொள்ளலாம்.
உதாரணத்துக்கு சென்னையிலிருந்து டெல்லிக்கு ரூ 1 கட்டணத்தில் 3 நிமிடங்கள் பேசிக் கொள்ள முடியும்.
முதல் கட்டமாக கம்பியில்லா தரைவழி இணைப்புகளில் இதனை இன்று முதல் அமல்படுத்துகிறது பிஎஸ்என்எல். இனி இவற்றுக்கு எஸ்டிடி அழைப்புகள் என்ற பெயரை நீக்கிவிட்டு, இன்டர் ஸ்டேட் கால்கள் என்ற புதிய பெயரை சூட்டியுள்ளனர்.
அதே நேரம் லேண்ட்லைனிலிருந்து செல்போனுக்கு அழைத்தால் 1 நிமிடத்துக்கு ரூ 1 கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.ஞ
இதுவரை லேண்ட்லைன் இணைப்பு பெறுவோர், எஸ்டிடிக்கென்று தனியாக எழுதிக் கொடுக்க வேண்டும். இனி அதற்கான அவசியம் இல்லை. இனி அனைத்து லேண்ட்லைன்களுக்கும், இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளும் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
பிஎஸ்என்எல் இந்த அதிரடி முடிவுக்கு வர முக்கியக் காரணம், தரைவழி இணைப்பில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதுதான். தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தில் மட்டும் ஒரே ஆண்டில் 35000 இணைப்புகளை துண்டித்துக் கொண்டுள்ளனர் வாடிக்கையாளர்கள்.
இந்த புதிய அறிவிப்பு மூலம் லேண்ட்லைன் துண்டிக்கப்படுவது பெருமளவு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல்லின் இந்த முடிவு மற்ற தனியார் துறை தொலைபேசி நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பல தனியார் தொலைபேசி நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டுவதே எஸ்டிடி கட்டணத்தின் அடிப்படையில்தான். தற்போது அவை கட்டாயமாக இந்தக் கட்டணத்தைக் குறைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை பிஎஸ்என்எல் ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment