சிந்திக்கத் தூண்டும் ஒரு சிறு முயற்சி. இதை விடவும் மிகத் தெளிவாக யாராலும் புரிய வைக்க முடியாது. மரங்களை விடவும் வேகமாகக் கட்டடங்கள் தான் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. வீடில்லாத் திண்டாட்டமும் குறைந்தபாடில்லை. இயந்திரத்தனமான வாழ்க்கைக்குள் நாம் எப்போதோ மாட்டிக்கொண்டு விட்டோம். இப்போதே, குடிநீரைப் பணம் கொடுத்துத் தானே வாங்க வேண்டியிருக்கின்றது?
இப்படியே போனால், மெயிலில் உள்ளது போல 2070 கூட அதிகம் தான். உடனடியாக மக்கள் தங்களைத்திருத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டளை போட முடியாது. ஆனாலும், முதல் படியில் ஏற முயற்சிக்க வேண்டும். ஆங்காங்கே மரம் வளர்ப்புத் திட்டங்கள், நிலத்தடி நீர் சேமிப்புத் திட்டங்கள் என செயல் பட்டுக்கொண்டிருந்தாலும், வேகமாக மாறிக்கொண்டு வரும் அபாயமான மாற்றங்களின் முன், அவையெல்லாம்
ஒன்றுமே இல்லை தான். ஊரே பற்றி எரியும்போது, ஒரு குடத்தை மட்டும் வைத்துக் கொண்டு நெருப்பை அணைக்கும் நிலை தான் இன்று.
முதல்கட்டமாக, சினிமாக்களில், தண்ணீரை வாரியிறைத்து டூயட், மற்றும் சண்டைக்காட்சிகளை நிறுத்துமாறு கோரி, மனு ஒன்று போட வேண்டும்.
அடுத்து, குழாயடி சண்டைகளில், கலந்து கொண்டவர்கள், பார்த்துக் கொண்டு நின்றவர்கள் என எல்லோருக்கும் அபராதம் வசூலிக்க வேண்டும்.
கிராமங்களிலும், நகரங்களை அண்டியுள்ள பகுதிகளில் தூர்ந்து போய்க் கிடக்கும் பழைய கிணறுகள்,கால்வாய்கள், குளங்கள் என அனைத்தையும் புதுப்பிக்க வேண்டும். இலவச கலர் டிவிக்குப் பதிலாக தேர்தல் சமயங்களில், இவற்றைச் செய்து தரும்படி கோரிக்கை வைக்க வேண்டும். இதெல்லாம் மக்கள் நினைத்தால், முடியக் கூடியவை தான். சமுதாயத்தின் நன்மைகளைச் சிறிது சிந்தித்தோமானால், நம் நாடு கூட வெளிநாடுகளுக்கு இணையானதாக மாறிவிடும் என்பது எனது கருத்து.
No comments:
Post a Comment