அமெரிக்காவை உலக அதிகார மையமாக உலகமே பார்க்கிறது. அமெரிக்காவைவிட ஒரு பெரிய அதிகார மையம் உருவாகி இருப்பது நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாது.
உலகிலேயே பணக்கார நாடாக இருக்கும் அமெரிக்காவின் ஒட்டு மொத்த உற்பத்தி (GDP) மதிப்பு 15 ட்ரில்லியன் டாலர்கள். ஆனால் 700 ட்ரில்லியன் டாலர் பெருமான வர்த்தகங்களை உலகின் டாப் 9 வங்கிகள் மட்டும், வெளி உலகத்துக்குத் தெரியாதபடி செய்கின்றன என்றால் அந்த வங்கிகள் எவ்வளவு வலிமையானவை என்பதை யூகித்து கொள்ளுங்கள்.
தற்போது உலகிலேயே அதிக லாபம் கொழிக்கும் தொழிலாக இருப்பது வங்கித் துறை தான் (பொருளாதார சரிவின்போது பெரிய வீழ்ச்சி ஏற்பட இருந்தாலும் அரசாங்கத்தை மிரட்டி தங்களைக் காப்பாற்றிக் கொள்வது தொடர்கதையாகத் தான் இருந்து வருகிறது). கடன் கொடுப்பது, கடன் அட்டை கொடுப்பது, பெரிய அளவில் பணத்தை பல வகையில் முதலீடு செய்து பணம் சம்பாதிப்பது போன்ற வழி முறை தான் அதிக பணம் சம்பாதிக்கும் முறையாக நாம் நினைத்துக் கொண்டுள்ளோம்.ஆனால் அதை விட அதிகமாக பணம் சம்பாதிக்கும் முறை ஒன்று உண்டு. அது தான் பங்குகளைச் சார்ந்த வர்த்தகம். ஆங்கிலத்தில் derivatives என்று கூறுவார்கள்.எந்தத் தொழிலிலும் ஏற்படக்கூடிய அபாயத்தை குறைக்க காப்பீடு எடுப்பது போல், இதுவும் ஒரு அபாயத்தைக் குறைக்க ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வழி முறை தான். நாம் தற்போது அதிகம் கேள்விப்படும் Commodity Tradingம் இதில் ஒரு வகையில் அடக்கம்.
கடந்த பத்தாண்டுகளில் இந்த derivative வர்த்தகத்தின் மதிப்பு $700 டிரில்லியனைத் தாண்டி விட்டது. இது ஒட்டு மொத்த உலக GDP மதிப்பை விட ($59 டிரில்லியன்) பல மடங்கு அதிகம்!.
உதாரணமாக அரிசி சார்ந்த உணவுப் பொருளை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம், உலகில் அரிசி ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டில் ஏற்படும் இயற்கை சீரழிவு காரணமாக 6 மாதம் கழித்து கடுமையான விலை ஏற்றம் ஏற்படும் என்று அனுமானித்து அந்த விலை ஏற்றத்திலிருந்து தன்னை காத்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார் என்று வைத்து கொள்வோம்.
மறுபுறம் பெரிய அளவில் நெல் விளைவிக்கும் நிறுவனம் அல்லது அரிசி கொள்முதல் செய்து விற்கும் நிறுவனம் 6 மாதத்திற்குப் பிறகு ஓரளவு லாபம் தரகூடிய விலையில் அரிசியை விற்றால் லாபகரமானதாக இருக்கும் என நினைக்கிறது என்று கொள்வோம்.உணவுப் பொருளை விற்கும் நிறுவனம் 6 மாதத்திற்குப் பிறகு சந்தை நிலவரத்தின் போக்கு எப்படி இருக்கும் என்பதைக் கணித்து குறிப்பிட்ட விலைக்கு வாங்க பத்திரம் கொடுப்பார். அதே போல் நெல்லை விளைவிக்கும் நிறுவனம் 6 மாதம் கழித்து அரிசியை குறிபிட்ட விலைக்கு விற்க பத்திரம் கொடுக்கும்.
இந்தப் பத்திரத்தை உற்பத்தியாளர், வங்கிகள் மூலம் வாங்குபவர்களுக்கு விற்பார்.
ஆறு மாதத்துக்குப் பின் அரிசியின் விலை, பத்திரத்தை விற்ற விலைக்குக் குறைவாக வந்தால் விற்பவருக்கு லாபம். வாங்கியவருக்கும் அவரால் தாக்குப் பிடிக்க முடிந்த விலையில் வாங்கி இருப்பதால் நஷ்டம் ஏற்று கொள்ளக் கூடிய அளவில் தான் இருக்கும்.அதே நேரம் 6 மாதத்துக்குப் பின் அரிசியின் விலை பத்திரத்தை விற்ற விலையை விட அதிகமானால் வாங்கியவருக்கு லாபம். விற்பவரும் கட்டுப்படியாகும் விலையில் விற்றதால் அவருக்கு நஷ்டம் அதிகமில்லை.உற்பத்தியாளர் மற்றும் வாங்கியவர் இருவருக்குமே இந்த ஏற்பாடு நல்லதுதானே என்று உங்களுக்குத் தோன்றும். இந்த வியாபாரத்தில் விற்பவர் மற்றும் வாங்குபவர் மட்டும் இருந்தால் பரவாயில்லை.ஆனால் இடையில் தரகர்களாக வரும் பெரிய வங்கிகளால் தான் பிரச்சனையே!
விவசாயப் பொருட்கள், பெட்ரோல் என்றில்லை, அமெரிக்க வீட்டுக் கடன்கள் கூட இம்முறையில் தான் பெருமளவில் நடை பெருகிறது.
உலக அளவில் உணவு பொருட்கள், பெட்ரோல், அமெரிக்க வீட்டு கடன் பத்திர வர்த்தகம் போன்றவற்றின் derivative வர்த்தகத்தின் பெரும்பான்மையான பகுதி நடைபெறுவது Inter Continental Exchange (ICE) என்ற அமைப்பின் மூலம் தான். இந்த வர்த்தகத்தை முழுமையாகக் கட்டுபடுத்துவது JPMorgan Chase, Goldman Sachs, Morgan Stanley, Citigroup, UBS, Barclays, Credit Suisse, Bank of America போன்ற வங்கிகள் மட்டும் தான்.பங்குச் சந்தையில் நடக்கும் வர்த்தகம் அனைத்தும் மையப்படுத்தப்பட்ட கணிணிமயமாக்கப்பட்டு விட்டதால் பங்கு வர்த்தகத்தில் அந்த நிமிடத்தில் நடக்கும் வர்த்தகம் அனைவருக்கும் தெரியும். ஆனால் derivativeல் நடக்கும் வர்த்தகம் அனைத்தும் ரகசியமாகவே நடக்கிறது.அதாவது தற்போது அரிசிக்கு 6 மாதத்துக்குப் பின் derivative மூலம் விற்கும் விலை வெளி உலகத்துக்கு சரியாக தெரியாது. அது போல் இந்த வர்த்தகத்தில் வங்கிகள் வாங்கும் கட்டணமும் யாருக்கும் தெரியாது.
அதன் விளைவு வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் சந்தையின் உண்மை நிலவரம் தெரியாது.
வாங்குபவர்களின் விலைக்கும் விற்பவர்களின் விலைக்கும் இடையில் உள்ள வித்தியாசம் வங்கிகள் கைக்கு லாபமாக சென்றடையும்.இதன் மொத்த மதிப்பு மாபெரும் அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு சில கணக்குகள்படி பெரிய வங்கிகள் வாங்கும் கட்டணம் மட்டும் $700 பில்லியன் தாண்டக்கூடும் என்று கருதப்படுகிறது.இத்தகைய வர்த்தகத்தை கணிணிமயமாக்கி பங்கு வர்த்தகம் போல் திறந்த நிலையில் செயல்படவும், பிற வங்கிகளை இந்த வர்த்தகத்தின் உள் நுழைய அனுமதிக்கவோ அல்லது கூடுதல் அரசு கட்டுப்பாட்டை கொண்டு வரவோ இந்த வங்கிகள் அனுமதிப்பதில்லை.அதற்கு சர்வதேச அளவில் பல நாடுகளும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இன்னொரு முக்கிய செய்தி: இது போன்ற வர்த்தகத்தில் derivativeயை வாங்குபவர்கள் கட்டாயம் அந்தப் பொருளை வாங்க வேண்டும் என்று இல்லை. அவர்கள் அந்தப் பொருளை கையில் எடுத்துக் கொள்ளாமல் அடுத்தவர்களுக்கு derivative ஆகவே விற்று விடலாம். அதன் விளைவு, யூக வர்த்தகர்கள் (Speculative Traders) பொருளின் விலையைத் தாறுமாறாக ஏற்றிவிடலாம் (அது தான் இப்போது நடந்து கொண்டுள்ளது. இதனால் தான் உணவுப் பொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் காது கிழிய கத்தி வருகின்றனர்).
அது மட்டுமல்ல ஒரு வங்கி ஒரு derivativeயை மற்றொரு வங்கிக்கு ஒரு குறிபிட்ட விலைக்கு விற்கும். மீண்டும் அதே வங்கி விற்ற வங்கியிடமிருந்து அதே derivativeயை வாங்கிக் கொள்ளும். இதனால் ஒட்டு மொத்த வர்த்தக மதிப்பு அதிகரித்துக் காட்டப்படும். (வங்கியின் வருமானமும் அதிமாக காட்டப்படும்). இந்த அளவை வைத்தும் பொருளின் விலையை உயர்த்தலாம்.இந்த வர்த்தகத்துக்கு கட்டணத்தையும் வங்கிகள் வசூலித்துக் கொள்ளும். அதனால் ஏற்படும் விலை ஏற்றத்தை பொருளை கடைசியாக வாங்கும் சாதாரண மனிதன் தான் கொடுக்க வேண்டும். அதாவது செல்வம் சாதாரண மனிதர்களிடமிருந்து வங்கிக்கு இடம் பெயர்கிறது. இதை 'சுற்று வட்ட வர்த்தகம்' (round trip trade) என்று கூறுவார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக பெட்ரோல் விலை ஏற்றத்தை கூறலாம். 5 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஒவ்வொரு மாதமும் அமெரிக்காவில் இது போல் deravative மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெளிச் சந்தை கணக்குப்படி 40 மில்லியன் பேரல் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் 99.2% கச்சா எண்ணெய் விற்பனை வெறும் புத்தகத்தில் தான் நடந்துள்ளது. அதில் வசூலிக்கப்படும் கட்டணம் அனைத்தும் நுகர்வோர் தலையில் தான் விடிந்துள்ளது.
இது ஒரு புறமிருக்க தற்போதைய பொருளாதார வீழ்ச்சியால் எண்ணெய் விலை ஏற்றம் குறைவாக இருப்பதால், அது மேலும் குறையாமல் இருக்க பெரிய எண்ணெய் நிறுவனங்களும், வங்கிகளும் சேர்ந்து கொண்டு நடுக்கடலில் ஏராளமான கப்பல்களில் சுமார் 100-120 மில்லியன் பேரல் அளவுக்கு எண்ணெய்யை சேமித்து (பதுக்கி), நிறுத்தி வைத்துள்ளனர்.
மேற்சொன்ன speculative Trading மூலம் எண்ணெய் விலையை உயர்த்தி சில மாதம் கழித்து கொள்ளை லாபத்துக்கு விற்பதற்கான வழி முறை இது!. அதுவரை இந்தக் கப்பல்களை கடலிலேயே நிறுத்தி வைத்திருப்பார்கள்.
உலகின் பெரும்பான்மையான நுகர்வுப் பொருட்களின் ஒட்டு மொத்த வர்த்தகம் ஒரு சில வங்கிகளின் வசம் சென்றுள்ளது. அதன் மதிப்பு உலகின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பை விட பல மடங்கு அதிகம். பெரிய வங்கிகளின் வளர்ச்சியும் அளப்பறியதாக உள்ளது. மேலை நாடுகளின் அரசின் கடன் சுமையும் தற்போது அதிகரித்து வருகிறது.
மேலை நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும்போது இந்த வங்கிகளின் வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கும். அதன் விளைவு விரைவில் அதிகாரங்கள் மற்றும் அரசாங்கம் எடுக்கும்; முடிவுகளைக் கட்டுப்படுத்தும் திறன் அரசிடமிருந்து இந்த வங்கிகளுக்கு இடம் பெயர அதிக வாய்ப்புள்ளது.
28 December 2010
25 December 2010
ஹெவி' ஜிசாட் 5 பியை ஏவுகிறது இந்தியா!
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து மாலை 4 மணிக்கு சீறிக் கிளம்பும் இந்த செயற்கைக்கோளுக்கான கவுன்ட் டவுன் நேற்று தொடங்கியது.
கடந்த ஆண்டு இந்திய தொழில்நுட்பத்தில் உருவாகி தோல்வியடைந்த ஜிஎஸ்எல்வி - டி 3-க்குப் பிறகு, நடக்கும் ஜிஎஸ்எல்வி முயற்சி இது.
இந்த ஜிசாட் 5 பி செயற்கைக் கோள் 24 சி பேண்ட் ட்ரான்பாண்டர்கள் மற்றும் 12 விரிவாக்கப்பட்ட சி பேண்ட்கள் கொண்டது. தொலைக்காட்சி சேவையை மேம்படுத்தவும், தொலைக் கல்வி மற்றும் தொலை மருத்துவம் போன்ற வசதிகளை சிறப்பாக அளிக்கவும் இந்த செயற்கைக் கோள் பயன்படும்.
ரஷ்யாவின் கிரயோஜெனிக் எஞ்ஜின் மூலம் இந்த முறை ஜிஎஸ்எல்வி இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
12 ஆண்டுகள் இயங்கக்கூடிய வகையில், பெங்களூர் இஸ்ரோ சாட்டிலைட் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள், ஜிசாட் வரிசையில் தயாராகியுள்ள 5வது செயற்கைக் கோள் ஆகும்.
கடந்த டிசம்பர் 20-ம் தேதி செலுத்த உத்தேசித்து பின் தள்ளிப்போடப்பட்டது இந்த செயற்கைக் கோள்.
24 December 2010
The Dangers of Microwave (Oven) Radiation !!!
The Dangers of Microwave (Oven) Radiation
Obviously, the dangers of microwave radiation are very real. These devices can cause a variety of health problems in humans. Here are just a few of the possible health effects² related to microwave ovens:
Microwave ovens turn some minerals into cancerous agents.
Foods from a microwave can cause tumors in the stomach or intestine. This may be an explanation for the increased rate of colon cancer in America.
Regularly eating microwaved foods can cause an increase in cancerous cells in human blood.
The radiation dangers involved with microwaved food can cause decreased immune system function in humans.
There is even a mental danger to eating foods from a microwave. Regularly doing so can cause memory loss, emotional problems, and a decrease in intelligence.
A steady diet of microwave-cooked food can cause your body to shut down its hormones production.
Microwave Radiation is a very serious concern that many people will overlook in order to maintain their toxic paces. Many people have not even heard of the threat of microwave cooking and heating. That doesn't make it any less harmful. In fact, that makes it all the more insidious because there are people in key positions who could bring these dangers to the forefront. As it happens, they don't. So, once again, we must look to ourselves to seek out the answers to make the best decisions that we can. We have the indicators that we need when you consider these: if it's not safe for infants and hospitals, the rest of us should steer clear of it too.
How To Eliminate Radiation From Microwave Ovens
The only way to completely eliminate the radiation dangers associated with microwaves is to get rid of all of your microwave ovens and never use one
again. Never eating food prepared in a microwave is a sure way to avoid and negative health effects.
Use convection ovens to heat your meals. They offer safe heating by circulating hot air to raise the temperature of food.
Don't dismiss the traditional methods of stovetop and oven cooking and heating. It may take longer but it's definitely worth the effort.
When you think you need to microwave food because you're always on the go, it may be a sign that you need to slow down and put more space in
your break-neck schedule. This will help to relieve some stress too.
Obviously, the dangers of microwave radiation are very real. These devices can cause a variety of health problems in humans. Here are just a few of the possible health effects² related to microwave ovens:
Microwave ovens turn some minerals into cancerous agents.
Foods from a microwave can cause tumors in the stomach or intestine. This may be an explanation for the increased rate of colon cancer in America.
Regularly eating microwaved foods can cause an increase in cancerous cells in human blood.
The radiation dangers involved with microwaved food can cause decreased immune system function in humans.
There is even a mental danger to eating foods from a microwave. Regularly doing so can cause memory loss, emotional problems, and a decrease in intelligence.
A steady diet of microwave-cooked food can cause your body to shut down its hormones production.
Microwave Radiation is a very serious concern that many people will overlook in order to maintain their toxic paces. Many people have not even heard of the threat of microwave cooking and heating. That doesn't make it any less harmful. In fact, that makes it all the more insidious because there are people in key positions who could bring these dangers to the forefront. As it happens, they don't. So, once again, we must look to ourselves to seek out the answers to make the best decisions that we can. We have the indicators that we need when you consider these: if it's not safe for infants and hospitals, the rest of us should steer clear of it too.
How To Eliminate Radiation From Microwave Ovens
The only way to completely eliminate the radiation dangers associated with microwaves is to get rid of all of your microwave ovens and never use one
again. Never eating food prepared in a microwave is a sure way to avoid and negative health effects.
Use convection ovens to heat your meals. They offer safe heating by circulating hot air to raise the temperature of food.
Don't dismiss the traditional methods of stovetop and oven cooking and heating. It may take longer but it's definitely worth the effort.
When you think you need to microwave food because you're always on the go, it may be a sign that you need to slow down and put more space in
your break-neck schedule. This will help to relieve some stress too.
21 December 2010
ராஸல் கைமா இந்தியப் பள்ளி விளையாட்டுப் போட்டி - தமிழக மாணவருக்கு தங்கப் பதக்கம்
துபாய் ராஸல் கைமா பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர் தங்கப்பதக்கம் வென்றார்.
துபாயிலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராஸல் கைமா அமீரகம். ராஸல் கைமாவில் இயங்கி வரும் இந்தியப் பள்ளியில் இந்தியா, யு.எ.இ. உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் 2010-11 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இப்பள்ளியில் படித்துவரும் தமிழத்தைச் சோ்ந்த மர்ஜூக் ரஹ்மான் என்ற மாணவரும் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றார். ஜூனியர் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
இவர் கடந்த 3-ம் தேதி நடந்த ஐக்கிய அரபு அமீரக தேசிய நாள் கொண்டாட்டத்தின்போது மாணவர்களுக்காக நடந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூரைச் சேர்ந்தவர்.
துபாயிலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராஸல் கைமா அமீரகம். ராஸல் கைமாவில் இயங்கி வரும் இந்தியப் பள்ளியில் இந்தியா, யு.எ.இ. உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் 2010-11 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இப்பள்ளியில் படித்துவரும் தமிழத்தைச் சோ்ந்த மர்ஜூக் ரஹ்மான் என்ற மாணவரும் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றார். ஜூனியர் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
இவர் கடந்த 3-ம் தேதி நடந்த ஐக்கிய அரபு அமீரக தேசிய நாள் கொண்டாட்டத்தின்போது மாணவர்களுக்காக நடந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூரைச் சேர்ந்தவர்.
20 December 2010
சச்சின் புதிய வரலாறு.
இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் நேற்று புதிய வரலாறு படைத்தார். செஞ்சுரியன் மைதானத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் மிக அருமையாக ஆடி தனது 50வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார்.
டெஸ்ட் வரலாற்றில் ஒரு வீரர் எடுக்கும் முதலாவது 50வது சதமாகும் இது. இந்த வகையில் சச்சின் புதிய வரலாறு படைத்துள்ளார். இது சச்சினுக்கு 175வது டெஸ்ட் போட்டியாகும்.
மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா இருக்கும் நிலையில் சச்சின் தனது அனுபவத்தைக் கொண்டு திறம்பட ஆடி இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் அபாரமான சதத்தையும் போட்டார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 50 சதம் போட்ட முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் படைத்தார்.
சச்சின் சதமடித்ததும் ஒட்டுமொத்த ஸ்டேடியத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி சச்சினைப் பாராட்டினர். தென் ஆப்பிரிக்க வீரர்களும் சச்சினின் சதத்தை வரவேற்றனர்.
மொத்தம் 197 பந்துகளைச் சந்தித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார் சச்சின். இதில் 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடக்கம்.
நேற்றைய போட்டியின் இறுதியில், இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 454 ரன்கள் எடுத்திருந்தது. மீதமுள்ள 2 விக்கெட்களையும் வீழ்த்தினால் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெறும். மாறாக இந்தியா இன்னும் 30 ரன்களை எடுத்து விட்டால், தென் ஆப்பிரிக்காவை மீண்டும் பேட் செய்ய வைக்க முடியும்.
டெஸ்ட் வரலாற்றில் ஒரு வீரர் எடுக்கும் முதலாவது 50வது சதமாகும் இது. இந்த வகையில் சச்சின் புதிய வரலாறு படைத்துள்ளார். இது சச்சினுக்கு 175வது டெஸ்ட் போட்டியாகும்.
மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா இருக்கும் நிலையில் சச்சின் தனது அனுபவத்தைக் கொண்டு திறம்பட ஆடி இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் அபாரமான சதத்தையும் போட்டார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 50 சதம் போட்ட முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் படைத்தார்.
சச்சின் சதமடித்ததும் ஒட்டுமொத்த ஸ்டேடியத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி சச்சினைப் பாராட்டினர். தென் ஆப்பிரிக்க வீரர்களும் சச்சினின் சதத்தை வரவேற்றனர்.
மொத்தம் 197 பந்துகளைச் சந்தித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார் சச்சின். இதில் 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடக்கம்.
நேற்றைய போட்டியின் இறுதியில், இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 454 ரன்கள் எடுத்திருந்தது. மீதமுள்ள 2 விக்கெட்களையும் வீழ்த்தினால் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெறும். மாறாக இந்தியா இன்னும் 30 ரன்களை எடுத்து விட்டால், தென் ஆப்பிரிக்காவை மீண்டும் பேட் செய்ய வைக்க முடியும்.
18 December 2010
"உண்மைகளை வெளிக்கொண்டு வருவேன்' : விக்கிலீக்ஸ் ஜூலியன் ஆவேசம்.
லண்டன் : பிரிட்டன் ஐகோர்ட் தீர்ப்பின் மூலம் ஜாமீனில் வெளியே வந்துள்ள "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், "உண்மைகளை வெளிக்கொண்டு வர தொடர்ந்து போராடுவேன். சுவீடனுக்கு என்னைக் கொண்டு போகும் முயற்சி, என் மீதான அவதூறு பிரசாரத்தின் ஒரு பகுதி' என்று தெரிவித்துள்ளார். அவரது ஜாமீனுக்கான பிணையத் தொகை "ட்விட்டர்' இணையதளம் மூலம் திரட்டப்பட்டு வருகிறது.
பாலியல் குற்றச்சாட்டில் கடந்த 7ம் தேதி கைதான அசாஞ்ச், ஜாமீன் கோரி இரண்டு முறை மனு தாக்கல் செய்தார். முதன் முறை அவருக்கு மறுக்கப்பட்ட ஜாமீனை, வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட் இரண்டாவது முறை சில நிபந்தனைகளுடன் தர முன்வந்தது. ஆனால், சுவீடன் தரப்பு வக்கீல்கள் அந்த ஜாமீனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்ததால், அசாஞ்ச் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில், அசாஞ்சின் ஜாமீனை எதிர்த்து தாங்கள் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என, சுவீடன் வக்கீல்கள் தெரிவித்ததால் மேலும் குழப்பம் நீடித்தது. பிரிட்டன் அரசு தரப்பு வக்கீல்கள் தான், ஜாமீனை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர் என்பது பின்பு தெரிந்தது. நேற்று ஐகோர்ட்டில், அரசு தரப்பு வாதம் நிராகரிக்கப்பட்டு, வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட் விதித்த நிபந்தனைகளுடன், நேற்று முன்தினம் அசாஞ்சுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.
ஜாமீனில் வெளியே வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"என் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அவை போலி என்பதை நிரூபிப்பேன். தொடர்ந்து பல உண்மைகளை வெளிக் கொண்டு வருவேன்' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: எனக்கு எதிரான இவ்வழக்கில், தனிப்பட்ட, உள்நாடு மற்றும் சர்வதேச உள்நோக்கங்கள் உள்ளன. ஆனால், இதன் மூலம் ஐரோப்பாவை சங்கடப்படுத்தும் சில உண்மைகள் வெளிவந்துள்ளன. உதாரணமாக, தனிநபர் ஒருவரை, ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து இன்னொரு ஐரோப்பிய நாட்டுக்கு, அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இன்றி நாடு கடத்த முடியும் என்பது இப்போது தெரிந்துள்ளது.இவ்வாறு அசாஞ்ச் தெரிவித்தார்.
இதற்கிடையில் அசாஞ்சை ஜாமீனில் எடுப்பதற்காக, கோர்ட்டில் செலுத்த வேண்டிய ஒன்றரை கோடி ரூபாய், "ட்விட்டர்' இணையதளம் மூலம் திரட்டப்பட்டு வருகிறது.பிரிட்டன் பத்திரிகையாளர் ஜான் பில்ஜர், பிரிட்டனில் இயங்கி வரும் புலனாய்வுப் பத்திரிகையியல் மையத்தின் இயக்குனர் காவின் மெக் பேடென் மற்றும் சூசன் பென் ஆகிய மூவரின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, இந்நிதி வசூலை கண்காணிக்கும்.
இதற்கிடையில், "விக்கிலீக்ஸ்' நிறுவனமும், அசாஞ்சும் ஆஸ்திரேலிய சட்டத்தை மீறவில்லை என, அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். "விக்கிலீக்ஸ்' செயல் குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஜூலியா கில்லார்டு, "பொறுப்பற்ற செயல்' என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆஸி.,போலீசார், "விக்கிலீக்ஸ் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் பரிசோதித்தோம். ஆஸி., சட்டப்படி அந்நிறுவனம் குற்றம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை' என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த பிரதமர் கில்லார்டு,"என் கண்டனத்தில் மாற்றம் இல்லை. சிலர் அசாஞ்சுக்கு விசிறியாக இருக்கலாம். ஆனால், நான் அவரது விசிறி இல்லை. அதேநேரம், எதிர்காலத்தில் அவரது வெளியீடுகளைக் கருத்தில் கொண்டு சட்டத்தை மாற்றும் கருத்தும் எங்களுக்கு இல்லை' என்று கூறியுள்ளார்.
13 December 2010
புவிவெப்பமயமாக்கலைத் தடுக்க வளரும் நாடுகளுக்கு பசுமை நிதி.
கான்கன்: மெக்சிகோவின் கான்கன் நகரில் நடந்த ஐ.நா. புவிவெப்ப தடுப்பு மாநாட்டில், வளரும் நாடுகளுக்கு உதவ பசுமை நிதியை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு பொலிவியா கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், இந்த உடன்பாடு ஏற்பட்டது.
புவிவெப்ப தடுப்பு தொடர்பான மாநாடுகளில் இப்போதுதான் முதல் முறையாக இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோபன்ஹேகனில் கடந்த ஆண்டு நடந்த தோல்வி மாநாட்டுக்குப் பின்னர் தற்போது கான்கனில் ஏற்பட்டுள்ள இந்த உடன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து பேசிய மெக்சிகோ அதிபர் பெலிப்பி கால்டிரான், இந்த மாநாடு வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்தார். முன்னதாக மாநாட்டின் இறுதியில் இரண்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன
புவிவெப்ப தடுப்பு தொடர்பான மாநாடுகளில் இப்போதுதான் முதல் முறையாக இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோபன்ஹேகனில் கடந்த ஆண்டு நடந்த தோல்வி மாநாட்டுக்குப் பின்னர் தற்போது கான்கனில் ஏற்பட்டுள்ள இந்த உடன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து பேசிய மெக்சிகோ அதிபர் பெலிப்பி கால்டிரான், இந்த மாநாடு வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்தார். முன்னதாக மாநாட்டின் இறுதியில் இரண்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன
12 December 2010
2010 ஆண்டு டிசம்பர் மாதம்...
2010 ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த மாதம். மூன்று அயல்நாட்டுத் தலைவர்கள் இம்மாதத்தில் இந்தியப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். அவர்களில், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி சமீபத்தில் வந்து சென்றார். வரவிருக்கும் மற்ற இருவர், ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் மற்றும் சீனப் பிரதமர் வென் ஜியாபோ. கடந்த நவம்பர் மாதம் தான் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வந்தார். ஐ.நா., பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஐந்து நாடுகளில், நான்கு நாட்டுத் தலைவர்கள் இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து இந்தியப் பயணம் மேற்கொண்ட சம்பவம் சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை நிகழ்ந்தது கிடையாது. இந்த நான்கு நாட்டுத் தலைவர்கள் முன்பும் இதுவரை இல்லாத அளவிற்கு உள்ள கோரிக்கைகளில் முக்கியமானது, ஐ.நா., பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும் என்பதுதான்.
இது வரையிலான காலகட்டங்களில் இந்தியா பற்றிய கண்ணோட்டம் உலகளாவிய நிலையில் எவ்விதம் மாறியிருக்கிறது என்பதையும், இனி வருங்காலத்தில் உலகம் எவ்விதம் இந்தியாவைப் பார்க்கப் போகிறது என்பதையும் இந்தக் கோரிக்கை நமக்குக் காட்டுகிறது. சந்தேகம் இல்லாமல், இந்திய வெளியுறவுக் கொள்கையில் இதை ஒரு மாபெரும் வெற்றி என்று அடித்துக் கூறலாம். அதேநேரம், இந்த வெற்றி, இன்றியமையாத சவால்களும், கடினமான சுமைகளும் நம் முன் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த சவால்களையும் சுமைகளையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா? வேகமாக மாறி வரும் உலகில், இந்தியா ஒரு புதிய இடத்தைப் பெற்றுள்ளதைப் பற்றி இந்த தலைவர்களின் வருகை எப்படி சுட்டிக்காட்டியுள்ளது என்பதை நாம் முதலில் பார்ப்போம்.
பழைய வல்லரசுகளும், பொருளாதார சிக்கலும்: ஐ.நா., பாதுகாப்புச் சபையில் இடம் பெற்றுள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களில், பிரிட்டனும், பிரான்சும் கடந்த காலத்தில் வல்லரசுகளாகத் திகழ்ந்தவை என்பது தெளிவு. அவற்றின் பொருளாதாரம் சுருங்கத் துவங்கி விட்டது. அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் 10 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இதே நிலைமைதான். ஜெர்மனியின் பொருளாதாரம் மட்டும் இப்போதும் ஓரளவிற்கு நல்ல நிலைமையில் இருக்கிறது. பிரான்ஸ் அதிபர் சர்கோசி மீது அந்நாட்டினரிடையே வெறுப்பு அதிகரித்து வருகிறது. இந்தப் பின்னணியில் அவரது இந்தியப் பயணம் அவருக்கு ஒரு விளம்பரத்தைத் தேடித் தந்திருக்கிறது என்பது ஒன்றும் ஆச்சரியப்படத் தக்கதல்ல. ஆனால், இந்த விளம்பரமும் அவரது கவர்ச்சிகரமான மனைவியால் வந்தது;வெளியுறவுக் கொள்கையால் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய - ரஷ்ய உறவு: சோவியத் யூனியன் சிதறுண்ட பின், உலக விவகாரங்களில் ரஷ்யாவின் முக்கியத்துவம் குறிப்பிடத் தக்க அளவில் சரிந்தது. நீண்ட காலமாக வல்லரசாக இல்லாத ரஷ்யா, தன் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கிடையில் மாறி வரும் உலகில் தனக்கு ஒரு புதிய இடத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ரஷ்ய அதிபர் மெட்வடேவ் மற்றும் பிரதமர் விளாடிமிர் புடின் இருவர் முன்பும் ஒரு மாபெரும் சவால் உள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு ஏற்றுமதியை மட்டுமே பெருமளவில் நம்பியுள்ள ரஷ்யப் பொருளாதாரத்தில், உற்பத்தித் துறை இன்னும் மந்தமாகவே உள்ளது. எனவே ரஷ்யப் பொருளாதாரத்தை நவீனப்படுத்துவதுதான் அவர்களின் முன் உள்ள சவால்.
மெட்வடேவ், கடந்தாண்டு ஆற்றிய பார்லிமென்ட் உரையில்,"நமது உற்பத்தித் துறையை நாம் நவீனப்படுத்தத் துவங்க வேண்டும். அதேநேரம் தொழில்நுட்ப ரீதியாகவும் உயர்த்த வேண்டும். இன்றைய உலகில் நம் நாடு வாழ்வதற்கு பிரச்னையாக உள்ளது இதுதான்' என்று குறிப்பிட்டார். கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யா உடனான இந்திய உறவு முற்றிலுமாக மாறியிருக்கிறது. நமது நம்பிக்கைக்குரிய, அரசியல் ரீதியிலான நட்பு நாடாக ரஷ்யா இருந்த போதும், உலகளவிலான நமது பொருளாதார உறவுகளில் ரஷ்ய உறவின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. மாறாக சீனாவுடனான நமது பொருளாதார உறவு குறுகிய காலத்தில் குறிப்பிடத் தக்க அளவு அதிகரித்துள்ளது.
கடந்த 2000ல், சீனா மற்றும் ரஷ்யாவுடனான இந்திய வர்த்தகம், தலா 3 பில்லியன் டாலர். இந்தாண்டில் மட்டும் இந்திய-சீன வர்த்தகம் 60 பில்லியன் டாலர். 2015ம் ஆண்டுக்குள் இந்த வர்த்தகம் 120 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு, இந்திய-ரஷ்ய வர்த்தகம் 10 பில்லியன் டாலர் தான். இதுவே 2015ல் வெறும் 20 பில்லியன் டாலராக மட்டுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவுடனான வர்த்தகத்தில் சீனா பெரிய பங்கு வகித்து வருகிறது. இன்றைய உலகில் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையில், அது பிற உலக நாடுகளுடன் கொள்ளும் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள், சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. எனினும் நாம் ரஷ்யாவைப் புறக்கணிக்க முடியாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யா, அமெரிக்காவைப் போல் இரண்டு மடங்கு பெரியது. ரஷ்யாவுக்குள் ஐந்து இந்தியாக்களை வைத்து விடலாம். இயற்கை வளங்களுக்கு குறைவில்லாத நாடு. எல்லாவற்றையும் விட முக்கியமானது, இந்தியாவின் மின்சார உற்பத்தி பாதுகாப்புக்கு ரஷ்யாவின் உதவி இன்றியமையாதது.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 9,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் உடைய அணு உலை, மேம்பட்டு வரும் இந்திய-ரஷ்ய உறவுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. மாறாக, இந்தியாவில் ஒரு அணு உலை கட்டக் கூட அமெரிக்கா ஆர்வத்துடன் முன்வரவில்லை. இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாடு, இந்தியப் பார்லிமென்ட்டில் பெருத்த சர்ச்சைகளைக் கிளப்பியது. அதேநேரம், ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் உள்ள "சகாலின்' தீவில், இந்திய அரசின் "எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கார்ப்பரேஷன்' (ஓ.என்.ஜி.சி.,) ரஷ்ய அரசுடன் இணைந்து எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கண்டறியும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
இந்திய - அமெரிக்க உறவு: அமெரிக்கா உடனான இந்திய உறவில் குறிப்பிடத் தக்க மாற்றம் நிகழ்ந்தது இந்தாண்டில்தான். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகை பற்றிய இந்தியர்களின் கண்ணோட்டம் தெளிவாக இருந்தது. "வீழ்ந்து கொண்டிருக்கும் வல்லரசு அமெரிக்கா ; இந்தியா உலகரங்கில் எழுச்சி பெறும் ஒரு வல்லரசாக இருப்பதால் தான் அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வந்தார் ' என்பதுதான் ஒபாமாவின் இந்திய வருகை பற்றிய இந்தியர்களின் தெளிவான கண்ணோட்டமாக இருந்தது. அமெரிக்கா உற்பத்தி செய்யும் ராணுவத் தளவாடங்களை இந்தியா வாங்க வேண்டும் என்ற கோரிக்கையின் மூலம் அமெரிக்காவில் கொஞ்சம் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான், ஒபாமா இந்தியா வந்தார் என்பதை சாதாரண மக்கள் கூடப் புரிந்து கொண்டனர்.
ஒரு காலத்தில் வலிமையான நாடாக இருந்த அமெரிக்கா தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. 10 அமெரிக்கர்களில் ஒருவர் வேலையில்லாமல் இருக்கிறார். சராசரி அமெரிக்கனின் சேமிப்பு ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. மலை போல கடன் சுமை அந்நாட்டை அழுத்திக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் தற்போதைய கடன் 13.8 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் - ஒரு லட்சம் கோடி). கடன் வாங்கும் தொகையில் பெரும்பகுதியை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்கா வீணாக செலவழித்துள்ளது. அமெரிக்க உதவி, இந்தியாவுக்குத் தேவை என்பதை விட, மிக அதிகளவில் இந்தியாவின் உதவி அமெரிக்காவுக்குத் தேவை என்பதை முதன் முறையாக, அமெரிக்க கொள்கை நிபுணர்கள் மற்றும் மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றனர்.கடந்த செப்டம்பரில், அமெரிக்காவின் தேசிய புலனாய்வு கவுன்சில் நடத்திய ஓர் ஆய்வு, உலகில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து மூன்றாமிடத்தில் இந்தியா இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மூன்றாம் உலக நாடாகக் கருதப்பட்டு வந்த இந்தியாவை உலகின் மூன்றாவது சக்தி வாய்ந்த நாடு என, இப்போது அமெரிக்கா ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த ஒப்புதல் தான், கடந்த 10,15 ஆண்டுகளில் உலகில் சக்தி வாய்ந்த நாடுகளின் வரிசை முறை மாறி வருகிறது என்பதையும், இந்தியாவும் தன்னளவில் பெரும் மாறுதலுக்குட்பட்டிருக்கிறது என்பதையும் நமக்குக் காட்டுகிறது.
இந்திய - சீன உறவு: வரவிருக்கும் அடுத்த பத்தாண்டுகளில், உலகின் பிற எந்த நாடுகளையும் விட, இந்தியாவும் சீனாவும் தான் புதிய ஆதிக்க சக்திகளாக பரிணமிக்கப் போகின்றன. இதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கை முன்பு உள்ள மிகப்பெரிய சவால். இந்திய-சீன உறவுகள், அடுத்து வரும் பல ஆண்டுகளை எப்படி வழிநடத்தப் போகின்றன? "இரு நாடுகளும் ஆசியாவின் முதலிடத்துக்குப் போட்டியிடுகின்றன. அதனால் விரைவில் அல்லது சிறிது தாமதித்து இரு நாடுகளுக்கிடையில் மோதல் ஏற்படும்' என்று காட்ட மேற்கத்திய நிபுணர்கள் சிரமப்பட்டு முயல்கின்றனர். இரு தரப்பிலும் அவநம்பிக்கை நிலவுவதாக மற்றொரு கருத்து நிலவுகிறது. மேற்கத்திய கருத்தும், நமது முன்முடிவும் முற்றிலும் தவறானது என்றே நான் கருதுகிறேன். ஆம்., எதிர்காலத்தில், வளமான சக்தி வாய்ந்த நாடுகளாக உலகில் திகழப் போகும் இருநாடுகளும் தம்முள் நட்புறவையும், கூட்டுறவையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது முடியும் என்பது மட்டுமல்ல, தேவையும் கூட.
இருநாடுகளும், சமூகம் மற்றும் பொருளாதாரத் துறையில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றி நமக்குத் தெரிந்திருந்தாலும் அவற்றைப் பற்றி சிறிதளவு இங்கு பார்ப்போம். நமது மொத்த மக்கள் தொகையில், கால் பகுதியினரின் வாழ்வை இருட்டில் வைத்திருக்கும் மோசமான வறுமையை நாம் பூண்டோடு அழித்தாக வேண்டும். சமூக மற்றும் பிராந்திய ஏற்றத் தாழ்வுகளைப் போக்க வேண்டும். பெருகி வரும் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். ஏழை-பணக்காரர்களுக்கு இடையிலான ஏற்றுக் கொள்ளவே முடியாத பிளவை குறைக்க வேண்டும்.
இறுதியாக, அதேநேரம் மிக முக்கியமாக, நமது சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும். உண்மையிலேயே, பொருளாதார வளர்ச்சியால் தான், சுற்றுச்சூழல் மோசமான அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில், மிக முனைப்போடு ஈடுபட்டுள்ள சீனாவும் இதே சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும், பிரச்னைக்குரிய எல்லைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும் அதே வேளையில், இந்தச் சவால்களை எதிர்கொள்வது பற்றியும் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, நட்பு மற்றும் நல்லுறவால் அடையாளப்படுத்தப்பட்ட இந்திய-சீன பண்பாட்டு உறவில், முள்ளாக உறுத்திக் கொண்டிருக்கும், 1962 காலத்திய துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை இருநாட்டு மக்களும் மறந்து விட வேண்டும். கடந்த 2003ல் அப்போதைய இந்திய ராணுவ அமைச்சரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் சீனாவுக்குச் சென்ற போது, உலகளவில் பிரபலமானவரும் சீனப் பிரதமருமான வென் ஜியாபோ அவரிடம்,"கடந்த 2,200 ஆண்டுக்கால சீன-இந்திய உறவில் 99.99 சதவீதம் நட்பு பதிவாகியிருக்கிறது. 0.01 சதவீதம் மட்டுமே தவறான புரிதல் பதிவாகியுள்ளது. அந்தத் தவறான புரிதலைப் புதைத்து விட்டு, நட்பை விதைக்க வேண்டிய காலகட்டம் இது' என்று கூறியதை இங்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். வென் ஜியாபோவும், நமது பிரதமர் மன்மோகன் சிங்கும் கடந்த 6 ஆண்டுகளில், பத்து முறை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு டில்லி அல்லது பீஜிங் அல்லது சர்வதேசக் கூட்டம் ஏதாவது ஒன்றில் நடந்திருக்கலாம். இந்தியா-சீனாவுக்கிடையே அடிக்கடி நடக்கும் இந்த உயர்மட்ட சந்திப்பும் பேச்சுவார்த்தைகளும் இருதரப்பு உறவுக்கான நல்ல சகுனம் என்றே தோன்றுகிறது. அதேநேரம், இருதரப்பு மக்களுக்கிடையே, கலாசாரம், கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ஆன்மிகம் போன்ற துறைகளில் உள்ள தொடர்பு விரிவடைய வேண்டும். சீனாவில் "யோகா' வேகமாகப் பரவி வருவது நல்ல அறிகுறி.
ஐ.நா.,வைக் கடந்து...: ஐ.நா., பாதுகாப்புச் சபையில் உள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களைத் தாண்டியும் இந்திய வெளியுறவுக் கொள்கை செயல்பட வேண்டும். உலகரங்கில் வலிமை பொருந்திய புதிய நாடுகள் வளர்ந்து வருகின்றன. அவற்றுடனான உறவுகளில் இந்தியா குறைந்தளவு மட்டுமே ஆர்வம் காட்டி அவற்றை புறக்கணிக்க முடியாது. உதாரணமாக, பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுடனும் இந்தியா தனது உறவை மேம்படுத்த வேண்டும்.
"கிழக்கு பார்வைக் கொள்கை': நமது வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கிய பகுதியான "கிழக்கு பார்வைக் கொள்கை' தான், தெற்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளுடன் நம்மை நெருங்க வைக்கும். இக்கொள்கையை இந்தியா மேலும் விரிவுபடுத்தி துரிதப்படுத்த வேண்டும். வியட்நாம், கம்போடியா, லாவோஸ், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் முற்காலத்தில் தமிழர்கள் கலாசார மற்றும் வர்த்தக ரீதியில் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை இங்கு நினைவு கூர்தல் அவசியம். இந்திய நாகரிகமும், ஆன்மிகத் தாக்கமும், புத்த மதத்தின் வழியாக, ஜப்பான் மற்றும் கொரியாவைச் சென்றடைந்தன. இந்தத் தொன்மையான உறவுகளை மீண்டும் புதுப்பிப்பதன் மூலம் நமது வெளியுறவுக் கொள்கையின் முக்கியக் குறிக்கோளை நாம் அடைய முடியும்.
அண்டை நாடுகளுடன்...: நமது நெருங்கிய அண்டை நாடுகளுடனான உறவையும் நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்ட பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்காத வரை, இருதரப்பு உறவுகளும் சீரடையாது. வங்கதேச- இந்திய உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகளை வங்கதேசம் முன்வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானுடனான நமது உறவை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். நமது நெருங்கிய அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் போர் விரைவில் முடிவுக்கு வருவதில், நமது ஒத்துழைப்பை பிற நாடுகளுக்கு அளிக்க வேண்டும். இந்திய செல்வாக்கில் இருந்து விடுபட விரும்பும் பல்வேறு சக்திகளின் கைகளில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் நேபாளத்தை நோக்கியும் நம் பார்வை திரும்ப வேண்டும்.
புவியியல், ஆன்மிகம் மற்றும் மொழியியல் ரீதியில் இலங்கை உடனான நமது உறவு, பொருளாதார தொடர்பையும் கடந்து ஆக்கப்பூர்வமாக வலுப்பட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், அண்டை நாடுகளுடன் இந்தியா தனது உறவை இன்னும் நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் அவர்களும் பயன்பெறுவர் என்ற எண்ணம் அவர்களிடம் உருவாக வேண்டும். இந்தியத் துணைக்கண்டத்தில் வளத்தையும் இணக்கத்தையும் கொண்டு வர வேண்டியது இந்தியாவின் கடமை. அதுதான், நமது நாட்டில் பிறந்த அறிவார்ந்த சான்றோர்கள் மற்றும் சமூக சீர்திருத்த வாதிகளின் கனவை நிறைவேற்றுவதும் ஆகும்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் - வரலாறு
இந்திய வெளியுறவு அமைச்சகம் உருவான வரலாறு
* பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹேஸ்டிங்ஸ் இருந்த போது, 1783, செப்டம்பர் 13ம் தேதி, கிழக்கிந்திய கம்பெனி இயக்குனர் குழு, கோல்கட்டாவில் கூடியது. அதில், ஐரோப்பிய நாடுகள் உடனான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான உறவுகளை நிர்வகிப்பதற்காகத் தனித் துறை ஒன்றை அமைக்கும் அவசியத்தை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* 1843ல் அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரல், எட்வர்ட் லா, முதன் முதலாக, இந்திய அரசில், வெளியுறவு, உள்துறை, நிதி மற்றும் ராணுவ அமைச்சகங்களை உருவாக்கினார்.
* 1935ல் கவர்னர் ஜெனரலின் நேரடிப் பொறுப்பில் மத்திய வெளியுறவு அமைச்சகம் தனியாகச் செயல்படத் துவங்கியது.
* 1946ல் இந்திய வெளியுறவுச் சேவை (ஐ.எப்.எஸ்.,) துவக்கப்பட்டது.
* 1948ல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்திய சிவில் சேவைத் தேர்வுகளின் மூலம் முதல் முதலாக வெளியுறவுச் சேவைக்கான அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்று வரை இந்தத் தேர்வு மூலம்தான் வெளியுறவு அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
* மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் 162 வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் இரண்டையும் சேர்த்து, தற்போது மொத்தம் 600 ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் பணியில் உள்ளனர்.
அணிசேராக் கொள்கை
* இந்தியா விடுதலை பெற்றவுடன், முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவே வெளியுறவு பொறுப்பையும் கவனித்துக் கொண்டார்.
* இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய வல்லரசுகளின் பக்கம் சார்ந்து இரண்டாகப் பிரிந்து கிடந்தன. இவற்றுக்கிடையே காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையான புதிய நாடுகள் இருந்தன.
* அனைத்துக்கும் ஒரு வழிகாட்டியாக, எந்த நாட்டின் பக்கமும் சேராமல், புதிய உலக நாடுகள் அனைத்தும் தனி ஒரு அணியாக இருப்பதற்கு வகையளித்த "அணிசேராக் கொள்கையை' நேரு உருவாக்கினார்.
பஞ்சசீல கொள்கை:
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் 1954ல் பஞ்சசீலக் கொள்கை கையெழுத்தானது.
* இருநாடுகளும் பரஸ்பரம் எல்லை மற்றும் இறையாண்மையை மதிக்க வேண்டும்.
* ஒருவருக்கு எதிராக இன்னொருவர் வலிந்து தாக்குதலில் ஈடுபடக் கூடாது.
* இன்னொரு உள்நாட்டின் விவகாரங்களில் தலையிடக் கூடாது.
* இருநாடுகளும் சமமாகவும் பரஸ்பரம் நன்மை தரும்படியாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
* அமைதியான இணக்க உறவு.இந்த பஞ்சசீலக் கொள்கையை உலக நாடுகள் தங்கள் வெளியுறவில் பயன்படுத்திக் கொண்டன. ஆனால் இவற்றை சீனா மீறியது தனிக் கதை.
இந்தியாவுடன் ராணுவ உறவில் உள்ள நாடுகள்: உலகில் குறிப்பிடத்தக்க வல்லரசாக வளர்ந்து வரும் இந்தியா, பல நாடுகளுடன் ராணுவ உறவு கொண்டிருக்கிறது. எனினும், குறிப்பிட்ட எந்த ஒரு நாட்டின் ராணுவத்துடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை.
* இந்தியாவுக்கு அதிகளவில் ராணுவத் தளவாடங்களை வினியோகம் செய்வதில் ரஷ்யா முதலிடத்தில் இருக்கிறது. அதையடுத்து, இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் நாடுகள் உள்ளன.
* இவை தவிர, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், பிரேசில், தென்னாப்ரிக்கா மற்றும் இத்தாலி நாடுகளுடனும் ராணுவ உறவை மேற்கொண்டுள்ளது.
* தஜிகிஸ்தானில் இந்தியாவுக்கு ஒரு விமானப் படைத் தளம் உள்ளது. 2008ல் கத்தார் நாட்டுடன் ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேஹ்வால்.
ஏற்கனவே இந்தியன் ஓபன் கிரான்ட்ப்ரி, சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ், இந்தோனேசியன் சூப்பர் சீரிஸ் ஆகிய பட்டங்களை வென்ற சாய்னா, சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கம் தட்டிச் சென்றது நினைவிருக்கலாம்.
தற்போதைய வெற்றியின் மூலம் சாய்னா விரைவில் நம்பர் ஒன் ரேங்க்கைப் பெற வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
உலகின் டாப் 10 - சச்சினின் சாதனைப் போட்டி.
லண்டன்: 2010ம் ஆண்டின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட்டி பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும் இடம் பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல், உலக கிரிக்கெட் அரங்கின் அசைக்க முடியாத நாயகனாகவும் மிளிர்ந்து கொண்டிருப்பவர் சச்சின். இவர் படைக்காத சாதனை இல்லை. அந்த சாதனைகளை முறியடிக்க பல வருடங்களாகும் நிலை வேறு.
இப்படி அடுக்கடுக்காய் சாதனைகளை சுமந்து நிற்கும் சச்சின் கடந்த பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மிகப் பெரிய சாதனை ஒன்றைப் படைத்தார். அப்போட்டியில் அபாரமாக ஆடிய சச்சின் 200 ரன்களைத் தொட்டு புதிய வரலாறு படைத்தார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் போடப்பட்ட முதல் இரட்டை சதம் இதுதான்.
இந்த சாதனைப் போட்டி தற்போது டைம் இதழின் டாப் 10 சிறந்த ஆட்டப் பட்டியலில்இடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து டைம் இதழ் கூறுகையில், இப்படிப்பட்ட சிறப்பான சாதனைகள் அவ்வளவு சாதாரணமாக நடந்து விட முடியாதது. கிரிக்கெட்டைப் பொருத்தவரை, ஒரு நாள் போட்டியில் 200 ரன்களை எடுத்தது மிகப் பெரிய சாதனையாகும். இதுவரை யாரும் அந்த சாதனையைப் படைக்கவில்லை.
இப்போட்டியில், சச்சின் 3 சிக்சர்களை விளாசினார். அவர் எடுத்த 200 ரன்கள் மிகப் பெரிய சாதனையாகும்.
அவர் 199 ரன்களை எட்டியபோது போட்டி நடந்த குவாலியரில், இந்திய ரசிகர்கள் மிகுந்த பரவசத்துடன் காணப்பட்டனர். வரலாறு படைக்கப் போவது அவர்கள் கண் முன்பு தெரிந்த சந்தோஷத்தில் சச்சினை வாழ்த்தி குரல் எழுப்பினர். இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த பந்தில் சச்சின் எடுத்த 200வது ரன் மிகப் பெரியாக விருந்தாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை என்று டைம் இதழ் புகழாரம் சூடியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல், உலக கிரிக்கெட் அரங்கின் அசைக்க முடியாத நாயகனாகவும் மிளிர்ந்து கொண்டிருப்பவர் சச்சின். இவர் படைக்காத சாதனை இல்லை. அந்த சாதனைகளை முறியடிக்க பல வருடங்களாகும் நிலை வேறு.
இப்படி அடுக்கடுக்காய் சாதனைகளை சுமந்து நிற்கும் சச்சின் கடந்த பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மிகப் பெரிய சாதனை ஒன்றைப் படைத்தார். அப்போட்டியில் அபாரமாக ஆடிய சச்சின் 200 ரன்களைத் தொட்டு புதிய வரலாறு படைத்தார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் போடப்பட்ட முதல் இரட்டை சதம் இதுதான்.
இந்த சாதனைப் போட்டி தற்போது டைம் இதழின் டாப் 10 சிறந்த ஆட்டப் பட்டியலில்இடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து டைம் இதழ் கூறுகையில், இப்படிப்பட்ட சிறப்பான சாதனைகள் அவ்வளவு சாதாரணமாக நடந்து விட முடியாதது. கிரிக்கெட்டைப் பொருத்தவரை, ஒரு நாள் போட்டியில் 200 ரன்களை எடுத்தது மிகப் பெரிய சாதனையாகும். இதுவரை யாரும் அந்த சாதனையைப் படைக்கவில்லை.
இப்போட்டியில், சச்சின் 3 சிக்சர்களை விளாசினார். அவர் எடுத்த 200 ரன்கள் மிகப் பெரிய சாதனையாகும்.
அவர் 199 ரன்களை எட்டியபோது போட்டி நடந்த குவாலியரில், இந்திய ரசிகர்கள் மிகுந்த பரவசத்துடன் காணப்பட்டனர். வரலாறு படைக்கப் போவது அவர்கள் கண் முன்பு தெரிந்த சந்தோஷத்தில் சச்சினை வாழ்த்தி குரல் எழுப்பினர். இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த பந்தில் சச்சின் எடுத்த 200வது ரன் மிகப் பெரியாக விருந்தாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை என்று டைம் இதழ் புகழாரம் சூடியுள்ளது.
விஞ்ஞானிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் : ஈரான் கண்டனம்
ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகள் மீது நடத்தப் படும் பயங்கரவாதத் தாக்கு தல்களுக்கு அந்நாட்டின் ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிதி முகமது காஸி கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.
கடந்த வாரம் நடத்தப் பட்ட தாக்குதலில் ஈரானின் அணுவிஞ்ஞானிகள் கொல் லப்பட்டனர். இதைச் சுட் டிக்காட்டி ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன், பொதுச்சபை தலை வர் ஜோசப் டெய்ஸ், ஐ.நா. வுக்கான அமெரிக்கப் பிரதி நிதி சூசன் ரைஸ் ஆகியோ ருக்கு அவர் கடிதமும் எழுதி யுள்ளார்.
அக்கடிதத்தில், ஈரா னின் அணுசக்தித்திட்டம் என்பது அமைதிப் பணிகளுக்கா கவே நடத்தப்படுகிறது.
இந்தத்திட்டத்தை எந்தவித நிர்ப்பந்தத்திற்கா கவும் நாங்கள் கைவிட மாட்டோம். அரசியல் மற் றும் பொருளாதார நிர்ப்பந் தங்கள் மற்றும் எங்கள் விஞ்ஞானிகளைக் கொலை செய்வது போன்ற வற்றை மீறி அமைதிப் பணிக்கான அணுசக்தி யைத் தயாரிப் பதைத் தொடர்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, ஐ.நா.பாது காப்பு சபையின் ஐந்து நிரந் தர உறுப்பினர்கள் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுக ளோடு அண்மையில் பேச்சுவார்த்தை நடந்துள் ளது. அடுத்த மாதம் மீண் டும் கூடிப்பேசுவது என்று முடிவெடுத்துள்ளார்கள். இந்த நிலையில் ஈரான் விஞ் ஞானிகள் மீதான பயங்கர வாதத் தாக்குதல்களை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் கண் டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நவம்பர் 29 அன்று ஈரான் தலைநகர் டெஹ்ரா னில் நடைபெற்ற தாக்குத லில் ஈரானின் மஜித் ஷாஹ் ரியாரி மற்றும் அப்பாசி தவானி ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். ஜன வரி மாதத்தில் பேராசிரியர் மசூத் அலி முகம்மதி என்ற ஈரானிய விஞ்ஞானி கொலை செய்யப்பட்டார். விசாரணைகள் மேற்கொள் ளப்பட்டதில், அமைதிப் பணிகளுக்காக ஈரான் அணு சக்தி தயாரிப்பதை விரும்பாத சக்திகள்தான் இதன் பின்னணியில் இருக் கின்றன என்பது தெரிய வந் துள் ளதாகவும் முகமது காஸி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி பக்கம் வந்துடாதேப்பா ராசா.....
ஆ.ராசா தவறு செய்தாரா இல்லையா என்பதை விசாரிக்கும் முன்பே அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். இவ்வளவு பெரிய ஊழல் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை. ராசா தலித் என்பதால் இவ்வாறு பார்ப்பன ஊடகங்களாலும், பார்ப்பனீய சக்திகளாலும் வஞ்சிக்கப் படுகிறார், இதெல்லாம் இணையத் தளங்களிலும், ஊடகங்களிலும், ராசாவின் ஆதரவாளர்களால் கூறப்படும் செய்திகள். ஒருவர், பார்ப்பனர்கள் இவ்வளவு நாள் ஊழல் செய்தார்கள், கொஞ்ச நாள் தலித் ஒருவர் அடிக்கட்டுமே, அதனால் என்ன தவறு ? என்று கருத்து கூறியிருக்கிறார்.
யப்பா சாமி... உன் திசைக்கே ஒரு கும்புடு. டெல்லி பக்கம் வந்துடாதேப்பா.. உன்னோட சேத்து என்னையும் குழில்ல தள்ளிடுவே....
ஊழலை நியாயப் படுத்தத் தொடங்கினால் ஒவ்வொருவரும் ஒரு நியாயத்தை சொல்லுவார்கள். அது நமது நேர்மையையே சந்தேகிக்கும் ஒரு சூழலுக்கு இட்டுச் செல்லும். நாம் அந்தத் தவறை செய்யக் கூடாது. ஊழல் யார் செய்தாலும் ஊழலே… அது பார்ப்பனரா, பனியாவா என்ற பாரபட்சம் கூடாது.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எழுந்த குற்றச் சாட்டுகள் என்ன ? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1) 2008ம் ஆண்டில் 2001ம் ஆண்டில் இருந்த விலைகளுக்கு பத்து மடங்கு விலை உயர்ந்து விட்டது என்பதை பொருட்படுத்தாமல், அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தது.
2) தொலைத் தொடர்பு பிசினசில் இல்லாத கட்டுமானக் கம்பெனிகளுக்கு லைசென்ஸ் வழங்கியது.
3) ஏலத்தில் லைசென்ஸ் வழங்காமல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முறையை கடைபிடித்தது.
4) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளை திடீரென்று மாற்றி, பெரும்பாலான தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பிப்பதை தவிர்த்தது.
5) விண்ணப்பிக்க கடைசி நாளை திடீரென்று மாற்றியதன் மூலம் 575 விண்ணப்பங்களில் 122 பேருக்கு மட்டும் மொத்த அலைக்கற்றையையும் வழங்கியது.
6) ட்ராய் பரிந்துரைகளை மீறியது
7) தொலைத் தொடர்புத் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யாமல், அத்துறையில் இல்லாத நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததன் மூலம், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் தொகைக்கு அலைக்கற்றையை மறு விற்பனை செய்ய வழி கோலியது.
8) சட்டத்துறை அமைச்சகம் மற்றும் அமைச்சரவை அதிகாரக் குழுவின் பரிந்துரைகளை மீறியது.
9) ரோல் அவுட் ஆப்ளிகேஷன் எனப்படும், ஒதுக்கீடு பெற்ற குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை தொடங்க வேண்டும் என்ற விதிமுறையை லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் மீற அனுமதித்தது.
இதுதான் அலைக்கற்றை ஊழல் தொடர்பாக இருக்கக் கூடிய முக்கிய குற்றச் சாட்டுகள். ஒவ்வொன்றாக பார்ப்போம்.
மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவுரைகள் ஒவ்வொரு முறையும் மீறப் பட்டது என்பதை சிஏஜி அறிக்கையில் நிதி அமைச்சகமே சுட்டிக் காட்டியுள்ளது. தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாத போது, அமைச்சரவையை கலந்து ஆலோசித்த பின்னரே முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
1.10.2007 வரை தொலைபேசி அலைக்கற்றை லைசென்சு வேண்டுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவிக்கிறது. அதன் படி, 537 நிறுவனங்கள் லைசென்சு வேண்டி விண்ணப்பிக்கின்றன.
திடீரென்று ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்ட ஆ.ராசாவின் அமைச்சகம் 25.09.2007 வரை விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே, அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப் படும் என்று ஒரு குண்டை தூக்கிப் போடுகிறது.
இதில் வந்திருக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் உங்களுக்கு இந்த சதிச் செயல் விளங்கும். 25.09.2007 வரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 232. 25.09.2007 முதல் 30.09.2007 வரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 76. 01.10.2007 அன்று விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 267. இந்த கடைசி நாளன்று தான், விண்ணப்பங்கள் அதிகம்.
மொத்தத்தில் 122 நிறுவனங்களுக்கு மட்டுமே லைசென்சுகள் வழங்கப் பட்டிருக்கின்றன. இந்த 122 நிறுவனங்களுக்கும் இருந்த மொத்த ஸ்பெக்ட்ரமும் ஒதுக்கீடு செய்து முடித்தாகி விட்டது. இனி ஒதுக்கீடு செய்ய ஸ்பெக்ட்ரமே இல்லை என்பதால் தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கிடைக்காத மற்ற நிறுவனங்கள், ஆர்டர் பெற்ற நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனனங்களுக்கு விற்ற விபரங்களை வெளியிடத் தொடங்குகின்றன.
ட்ராய் நிறுவனத்தின் மற்றொரு விதி, லைசென்ஸ் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், ஆர்டர் பெற்ற நாளிலிருந்து மெட்ரோ நகரங்களில் முதல் ஆண்டுக்குள்ளாகவும், மற்ற நகரங்களில் முதல் ஆண்டுக்குள் 50 சதவிகிதமும், மீதமுள்ள 50 சதவிகிதத்தை மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவும், செயல்படுத்த வேண்டும் என்று ட்ராய் ஆணையிட்டுள்ளது. இதை Roll Out Obligation என்று அழைக்கிறார்கள்.ஆனால் ராசாவின் அமைச்சகம், 19.10.2007 நாளிட்ட பத்திரிக்கை செய்தியில் ஆர்டர் பெறும் நாளிலிருந்து என்ற வரையறையை ஸ்பெக்ட்ரம் வழங்கப் பட்ட நாளிலிருந்து என்று மாற்றுகிறது. இந்த மாற்றம், அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துவதற்காகவே என்று சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.
ட்ராய் அமைப்பின் மற்றொரு முக்கியமான விதி லைசென்சு பெற்ற ஒரு நிறுவனம் அது தொடர்பான வேலைகள் அத்தனையும் (Roll out obligation) முடியும் வரை அதன் பங்குகளை விற்கவோ, வேறு நிறுவனத்தை வாங்கவோ கூடாது என்பது. எதற்காக இந்த விதி என்றால், ஒரு நிறுவனம் லைசென்சு பெற்றுக் கொண்ட பின், லைசென்சு கிடைக்காத வேறு ஒரு நிறுவனத்துக்கு அதை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து விடக் கூடாது என்பதற்காகத் தான்.
ஆனால் ராசாவின் அமைச்சகம், தனது 19.10.2007 நாளிட்ட பத்திரிக்கை செய்தியில், “எல்லா வேலைகளும் முடிக்கும் வரை (Roll out obligation) ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தோடு இணையக் கூடாது. ஆனால் இதற்கான கோரிக்கை பரிசீலிக்கப் படலாம்“ எப்படி இருக்கிறது ? இந்த விதிவிலக்கை பயன்படுத்தித் தான் 1537.01 கோடிக்கு 16 வட்டங்களுக்கு லைசென்ஸ் பெற்ற ஸ்வான் நிறுவனம் தனது 45 சதவிகித பங்குகளை மட்டும் 9400 கோடிக்கு விற்க முடிந்தது. அதே போல 1658.57 கோடிக்கு 22 வட்டங்களுக்கு லைசென்ஸ் பெற்றிருந்த யூனிடெக் நிறுவனம், தனது 60 சதவிகித பங்குகளை 11,600 கோடிக்கு விற்க முடிந்தது. இவ்வாறு பங்குகளை விற்ற இந்த இரண்டு நிறுவனங்களும், ஒரு டவரை கூட நிறுவவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. அதாவது தொழில் தொடங்கும் முன்பாகவே லாபம்.
அடுத்த முறைகேடு ஸ்பெக்ட்ரம் இருப்பு தொடர்பானது.
ராசா அமைச்சகத்தின் அக்டோபர் 2007 பத்திரிக்கை செய்திக்குப் பிறகு, மன்மோகன், ராசாவுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார். அனைவருக்கும் ஸ்பெக்ட்ரம் இருக்கிறதா என்றும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு இருப்பை பொறுத்து வழங்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
ராசா மன்மோகனுக்கு ஒரு பதில் கடிதத்தை எழுதுகிறார். அக்கடிதத்தில், இப்போது 122 பேருக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அறிவிக்கிறார். ஆனால் அவ்வாறு பிரதமருக்கு மறுமொழி எழுதும்போதே, மீதம் உள்ளவர்களுக்கு ஒதுக்க ஸ்பெக்ட்ரம் இல்லை என்பது ராசாவுக்கு தெரியும்.
இந்த ஒதுக்கீட்டிலும், கடைசி தேதியை மாற்றுவதிலும் உள்ள தவறுகளை இரண்டு தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் சுட்டிக் காட்டி நோட் எழுதுகிறார்கள். ஒருவர் டி.எஸ்.மாத்தூர் இவர் தொலைத் தொடர்பு துறை செயலர். இவர் கடைசி தேதியை மாற்றக் கூடாது என்று எழுதிய கோப்பை ராசா ஓரமாக வைத்து விட்டு, வேறொரு கோப்பில் நடவடிக்கை எடுத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்குகிறார். மற்றொருவர் தொலைத் தொடர்பு நிதி உறுப்பினர் மஞ்சு மாதவன். இவர் ஆ.ராசாவின் நெருக்கடி பொறுக்க முடியாமல் விருப்ப ஓய்வில் செல்லுகிறார்.இதற்கு நடுவே, கடைசித் தேதியை 1.10.2007ல் இருந்து 25.09.2007க்கு மாற்ற சட்ட அமைச்சகத்தின் சம்மதத்தை பெற, ராசா சட்ட அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். சட்ட அமைச்சர், இதை அமைச்சரவை அதிகாரக் குழுவிற்கு அனுப்பிய பிறகு முடிவெடுக்கலாம் என்று கூறுகிறார். இதற்கு பதிலாக ராசா என்ன செய்கிறார் தெரியுமா ? 1.11.2007ல் பிரதமருக்கு, சட்ட அமைச்சர் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கடிதம் எழுதுவதாக தெரிவிக்கிறார்.
தாமதமாக விழித்துக் கொண்ட ட்ராயும் தன் பங்குக்கு, ராசாவை தடுக்க முயற்சி செய்கிறது. ட்ராய் வழிகாட்டுதல்களில் சந்தேகம் இருந்தால், மீண்டும் ட்ராயை அணுக வேண்டும் என்ற சட்டப் பிரிவைச் சுட்டிக் காட்டி, 15.10.2007 அன்று, ட்ராய் ராசாவுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறது. அந்தக் கடிதத்தில் சட்டத்தில் உள்ளவாறு மறு வழிகாட்டுதலுக்கு ஒரு கடிதம் எழுதும் படியும், அவ்வாறு எழுதவில்லையென்றாலோ, உதாசீனப்படுத்தினாலோ, கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டது. 19.10.2007 அன்று ஆ.ராசா வெளியிட்ட பத்திரிக்கை செய்தி வந்த பிறகு, உடனடியாக மறு ஆலோசனைக்கு கடிதம் எழுதுமாறு வற்புறுத்தியுள்ளது. அப்போதும் ராசா அசையவில்லை.
14.01.2008 அன்று மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறது. இந்தக் கடிதத்தையும் ராசா நிராகரித்தார்.
இதன் நடுவே, இப்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் அப்போதைய நிதித் துறைச் செயலர் சுப்பாராவ், 22.11.2007 அன்று, வெறும் 1658 கோடி ரூபாய்க்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்திருப்பதை கடுமையாக கண்டித்து ஒரு கடிதம் எழுதுகிறார். இந்தக் கடிதத்தையும் ராசா குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டார்.
“முதலில் வருபவருக்கே முன்னுரிமை“ என்ற கொள்கையை எனக்கு முன் இருந்த அமைச்சர்கள் கடைபிடித்தார்கள், அதனால் நானும் கடைபிடித்தேன் என்று ராசா சொல்லும் காரணத்திலும் வலு இல்லை. ஏனெனில் 2003ல் முதன் முறையாக முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று அறிவிப்பு வெளியிட்ட போது 200 லைசென்சுகள் வழங்க அரசு வசம் அலைக்கற்றை இருந்தது. ஆனால் விண்ணப்பம் செய்ததோ வெறும் 51 நிறுவனங்கள் தான்.
2003ல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முறை கடைபிடிக்கப் பட்ட போது இருந்த விதி, முதலில் விண்ணப்பம் செய்பவர் முதலில் வந்தவராக கருதுப்படுவார் என்பது. ஆனால் ராசா இந்த விதியையும் மாற்றுகிறார். என்னவென்றால், முதலில் லைசென்சு வழங்கியதற்கான தகுதிகளை பூர்த்தி செய்பவருக்கே ஸ்பெக்ட்ரம் என்று. அதாவது என்னவென்றால், லைசென்சு உங்களுக்கு வழங்கப் பட்டால், லைசென்சுக்கான மொத்த தொகையையும் வங்கி வரைவோலை மூலமாக செலுத்துபவருக்கே ஸ்பெக்ட்ரம் என்பது. இவ்வாறு விதியை மாற்றி 10.01.2008 அன்று பத்திரிக்கை செய்தி மூலமாக அறிவிப்பு வெளியிடுகிறார் ஆ.ராசா.
எளிதாக சொல்ல வேண்டுமென்றால்.2003ல் அமலில் இருந்த முறை.
விண்ணப்பம்
↓
லைசென்சுக்கான கடிதம்
↓
தொகை செலுத்துவதற்கு 15 நாட்கள்.
↓
லைசென்சுகள்
↓
அலைக்கற்றைக்கான வரிசையில் முதலிடம்.
10.01.2008 அன்று ராசா புகுத்திய புதிய திட்டம்.
122 விண்ணப்பங்கள் பரிசீலனை
↓
தொகை செலுத்த வேண்டும்.
↓
லைசென்சுகள்
↓
அலைக்கற்றைக்கான வரிசையில் முதலிடம்
.
இது போல வழிமுறையை திடீரென்று மாற்றியதால் பல நிறுவனங்கள் தொகையை வரைவோலையாக செலுத்த முடியாமல் திணறின. தொகை என்றால் ஆயிரம் ஐநூறு கிடையாது நண்பர்களே. 1500 கோடி, 2000 கோடி என்ற அளவில். அரை நாளுக்குள் 2000 கோடிக்கு, நீங்கள் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி…. வரைவோலை எடுத்து விடுவீர்களா ?
ஆனால், ராசா ஒதுக்கிய ஸ்பெக்ட்ரம் திட்டத்தின் படி, 13 விண்ணப்பதாரர்கள் வரைவோலையோடு தயாராக அலுவலகத்திற்குள்ளேயே இருந்தார்கள். எப்படி இருக்கறது ?ஆக முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற விதிமுறையையும் ராசா சரிவர பின்பற்றவில்லை.
மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தில், அரசுக்கு ஏராளமான வருமானம் வந்து குவிந்தவுடன், ஆ.ராசா சொன்ன பதில் ஞாபகம் இருக்கிறதா ?
“3ஜி பாஸ்மதி அரிசி போல… அதனால் விலை அதிகம்.
2ஜி கருணாநிதி போடும் ஒரு ரூபாய் அரிசி போல”.
மேலும் ராசா சொன்ன மற்றொரு காரணம், போட்டியிடும் நிறுவனங்கள் விலையை அதிகம் கொடுத்தால், அது வாடிக்கையாளரின் தலையில்தான் விடியும். அதனால்தான் குறைந்த விலைக்கு கொடுத்தோம் என்பது. ராசாவின் கூற்றுப் படியே பார்த்தாலும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து 10 மடங்கு விலை கொடுத்து வாங்கிய வெளிநாட்டு நிறுவனம் எப்படி குறைந்த விலைக்கு கொடுக்க முடியும் ?
மேலும், டாடா நிறுவனம் 2ஜிக்கு கொடுத்த தொகை 12 கோடி. 3ஜிக்கு கொடுத்த தொகை 152 கோடி. ஆனால் 3ஜிக்கு டாடா நிறுவனம் நிர்ணயித்துள்ள தொகை என்ன தெரியுமா ? ஒரு வினாடிக்கு 66 காசுகள். இந்தத் தொகையும் போகப் போக குறையவே வாய்ப்பு உள்ளது.
1995ம் ஆண்டு, இதே போல ஏலம் விட்ட போது, இந்தியாவில் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள பலர் முன்வரவில்லை என்ற வாதமும் சொத்தையானது. ஏனெனில், இந்தியாவில் 1995ல் தான் செல்பேசி என்ற விஷயமே அறிமுகம் ஆகிறது. யாருக்கும் அனுபவம் இல்லை. இன்கமிங் 18 ரூபாய் அவுட்கோயிங் 30 ரூபாய் என்ற தொகை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் 2007ல் பல ஆபரேட்டர்கள் உள்ளனர். அவுட் கோயிங் 10 காசு என்ற வரை ரேட் குறைந்து விட்டது. இப்போது 1995ல் உள்ள நிலையை ஒப்பீடு செய்யும் ராசாவின் தந்திரம் அயோக்கியத்தனமானது.
அடுத்து ராசா எடுத்து வைக்கும் மற்றொரு வாதம் இந்த டெலிகாம் நிறுவனங்கள் ஒரு குழுவைப் போல செயல்பட்டுக் கொண்டிருந்தன. அதை உடைக்கவே புதிய நிறுவனங்களை அனுமதித்தேன் என்பது. இவர் சொல்லும் அந்தக் குழுவில் கூட அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல்லும், எம்.டி.என் எல்லும் இருந்தனவே ? இதே கூற்றை ஏற்றுக் கொண்டாலும் கூட, திறந்த முறை ஏலத்தில் மேலும் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொள்ளத்தானே வாய்ப்பு அதிகம் ? கடைசி தேதியை மாற்றி வைப்பதால் குழுவாகச் செயல்பட்டவர்களை உடைத்தேன் என்று ராசா சொல்லுவது சோற்றுக்குள் பூசணிக்காயை மறைப்பதே தவிர வேறொன்றும் இல்லை.
ஏலத்தில் விடுவதன் மூலமாக மக்களுக்கு விரைவாக சேவை கிடைக்கவே வாய்ப்பு அதிகம். ஏனென்றால் பெரும் தொகை கொடுத்து ஏலம் எடுக்கும் நிறுவனங்கள், முதலில் வாடிக்கையாளரைக் கவருவதற்காக வேக வேகமாக வேலையை துவக்கி முதலில் வாடிக்கையாளரை யார் பிடிப்பது என்று முனைப்பாக இருக்கும். உதாரணத்திற்கு சொல்லப் போனால், டாடா நிறுவனம், 3ஜி ஏலத்தில் எடுத்த 4 மாதத்தில் தனது 3ஜி சேவையை துவக்கி விட்டது. இதையே 2ஜியோடு ஒப்பிட்டீர்கள் என்றால், ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியும், இன்னும் 85 நிறுவனங்கள் வேலையை தொடங்காமல் இருக்கின்றன, அதனால் அவற்றின் லைசென்சுகளை ரத்து செய்யப் போகிறோம் என்பதுதான் ட்ராய் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு.
மேலும் 2ஜி லைசென்சுகளைப் பெறுவதற்கென, கடுமையான தகுதிகளை ட்ராயும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகமும் விதித்திருக்கின்றன. வழங்கப் பட்டுள்ள 2ஜி லைசென்சுகளை பெற்ற 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் தகுதியே இல்லாத நிறுவனங்கள் என சிஏஜி தனது அறிக்கையைல் தெரிவித்திருக்கிறது.
ராசாவின் கண்ணசைவு இன்றி இத்தனை தகுதியில்லாத நிறுவனங்கள் லைசென்சுகள் பெற்றிருக்க வாய்ப்பு உள்ளதா என்பது சந்தேகமே….
லைசென்சு பெற்ற நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களின் பினாமி நிறுவனங்களாகவே இருப்பது இன்னொரு பெரிய முரண்பாடு. உதாரணத்திற்கு அலையன்ஸ் இன்ப்ராடெக் நிறுவனம் என்ற நிறுவனம் 6.9.2007ல் மத்திய பிரதேசத்துக்கும் பீகாருக்கும் லைசென்சுகளைப் பெற்றது. இந்த நிறுவனத்தில் ஆஷிஷ் தியோரா என்பவர் 25 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார். க்ளாரிட்ஜெஸ் இன்போடெக் என்ற நிறுவனம் 50 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறது. இந்த க்ளாரிட்ஜெஸ் நிறுவனத்தின் பங்குகளை யார் வைத்திருக்கிறார் என்று பார்த்தால் ஆஷிஷ் தியோரா 99.77 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார். இப்போது அலையன்ஸ் இன்ப்ராடெக் நிறுவனத்தில் 75 சதவிகித பங்குகளை வைத்திருப்பது யார் என்பது புரிகிறதா ?
இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அனில் அம்பானிக்கு பெரிய பங்கு இருக்கும் செய்திகள் வெளிவந்ததும், ராசாவின் அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் அதை மறுத்து, விண்ணப்பம் செய்யும் நேரத்தில் அதாவது 2 மார்ச் 2007 அன்று உள்ளபடி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வெறும் 10 சதவிகித பங்குகள் தான் உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா ?
ஸ்வான் நிறுவனத்தில் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு 9.90 சதவிகித பங்குகள். டைகர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு 90.09 சதவிகித பங்குகள்.
90.09 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் டைகர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பது யார் தெரியுமா ? தலா 25 சதவிகிதம் வீதம் 75 சதவிகித பங்குகளை வைத்திருப்பவர்கள் ஆஷிஷ் கரேகர், தினேஷ் மோடி மற்றும் பரேஷ் ராதோட். இவர்கள் மூன்று பேரும் அனில் அம்பானி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள். இப்போது ஸ்வான் நிறுவனம் யாருக்குச் சொந்தம் என்று புரிகிறதா ?
ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நஷ்டம் என்று எப்படி சொல்ல முடியும் ? 3ஜி ஏலத்திலேயே 67 ஆயிரம் கோடிதானே வந்தது என்று சில அறிவாளிகளும் அறிவு ஜீவிகளும் கேள்வி எழுப்புகிறார்கள்.
2ஜி ஏலம் நடந்திருக்க வேண்டிய ஆண்டு ஜனவரி 2008. அப்போது செல்பேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 250 மில்லியன். இந்தியாவின் மொத்த ஜனத்தொகையையும் கணக்கில் வைத்துப் பார்த்தால் இன்னும் 750 மில்லியன் இணைப்புகள் வர வாய்ப்பு உள்ளது என்று நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏலத்தில் எடுக்கும். 3ஜி ஏலம் நடக்கையில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 600 மில்லியனை தொட்டு விட்டது. எவ்வளவு தொகைக்கு எடுத்தாலும் இன்னும் 400 மில்லியன் இணைப்புகள் தான் வளர்ச்சியின் அளவு எனும் போது எப்படி அதிக தொகைக்கு ஏலம் எடுப்பார்கள். அதனால் தான் 3ஜி ஏலம் வெறும் 67 ஆயிரம் கோடிக்குப் போனது. சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்பது மிகையல்ல.
Subscribe to:
Posts (Atom)