கணவன்மார்கள் வெறுக்கும் விஷயங்களில் முக்கியமானது டிவி சீரியல்கள். சீரியல் என்று சொன்னாலே கணவன்மார்கள் அய்யய்யோ என்று ஓட்டம் பிடிக்கும் அளவில் இருக்கின்றனர்.
பகல் எல்லாம் உழைத்துக் களைத்து வீடு திரும்பினால் மனைவி டிவி முன்பு அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டே வரவேற்கிறார். ஒரு காபி போட்டுத்தாம்மா என்று கேட்டால் இதோ இந்த சீரியல் இப்போ முடிந்துவிடும், முடிந்தவுடன் காபி தருகிறேன் என்கிறார். வேறு வழியில்லாமல் சீரியல் முடியும் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு கணவன்மார்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதில் வினோதம் என்னவென்றால் சில கணவன்மார்களுக்கு குறிப்பிட்ட சீரியல்கள் என்றால் பிடிக்கிறது. என்ன சார், உங்க மனைவியோடு சேர்ந்து நீங்களும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டீர்களா அல்ல அந்த குறிப்பிட்ட சீரியல் உங்களை கவர்ந்துவிட்டதா என்று கேட்டால், அடபோங்கம்மா நீங்க வேற அந்த சீரியல் போடும்போது தான் நிறைய விளம்பரம் வருகிறது என்கிறார்கள்.
விளம்பரத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால். மற்ற சீரியல்களில் 1,2 விளம்பரங்கள் தான் போடுகிறார்கள். ஒரு விளம்பரத்திற்கு சாதம், மறு விளம்பரத்திற்கு சாம்பார், இன்னொரு விளம்பரத்திற்கு கூட்டு, விக்கினால் கூட அடுத்த விளம்பர இடைவேளையில் தான் தண்ணீர் கிடைக்கிறது.
ஆனால் அந்த குறிப்பி்ட்ட சீரியல்களில் அதிக விளம்பர இடைவேளை வருவதால் ஒரே நேரத்தில் சாதம், சாம்பார், கூட்டு எல்லாம் கிடைக்கிறது என்கிறார்கள் பரிதாபமாக.
அட சாப்பாடை விடுங்க, சீரியல்களில் வரும் கதாபாத்திரம் போலவே சிலர் ஆகிவிடுகின்றனர். பெண்கள் மும்முரமாக சீரியல் பார்த்துக் கொண்டிருக்க வெளியில் விளையாடிய குழந்தை தவறி விழுந்து இறந்த கதையெல்லாம் நடந்திருக்கிறது. சீரியல் முடிந்த பிறகு தான் குழந்தை ஞாபகம் வந்து தேடிப்பார்த்தால் வாசலில் இறந்து கிடந்திருக்கிறது.
பெண்களே, உங்களை சீரியல் பார்கக் வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அதேசமயம் சீரியல் மோகம் பிடித்துத் திரியாதீர்கள். கணவனையும், பிள்ளைகளையும் கவனிக்காமல் நீங்கள் சீரியல் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்.
நீங்கள் டிவி, டிவி என்று டிவி சீரியல்களை கட்டிக் கொண்டு அழுதால் கணவன்மார்கள் கவனம் வேறு எங்காவது போவதில் ஆச்சரியம் இல்லை. எனவே, சீரியல்களை குறைத்துக் கொண்டு பாவப்பட்ட கணவன்மார்களையும் கொஞ்சம் கவனியுங்கள்.

No comments:
Post a Comment