12 October 2011

விண்ணில் பாய்ந்தது "பி.எஸ்.எல்.வி., சி1 ராக்கெட்


சென்னை:"பி.எஸ்.எல்.வி., சி18' ராக்கெட், "மெகா ட்ராபிக்ஸ்' உட்பட நான்கு செயற்கைக்கோள்களுடன், இன்று காலை 11 மணிக்கு, விண்ணில் ஏவப்பட்டது.இந்தியா - பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில், உலகின் வெப்ப மண்டல பகுதியில் நிலவும் வானிலை மற்றும் சீதோஷ்ண நிலையையும் அறிய, "மெகா ட்ராபிக்ஸ்' என்ற அதிநவீன செயற்கைக்கோளை, இஸ்ரோ தயாரித்துள்ளது.இந்த புதிய செயற்கைக்கோளுடன், இந்திய மாணவர்கள் தயாரித்த 2 ராக்கள்கள்"எஸ்.ஆர்.எம்., சாட், ஜுக்னு, வெசல் சாட்' உட்பட நான்கு செயற்கைக்கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) இருந்து, இன்று காலை 11 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டன.

சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான "மெகா ட்ராபிக்ஸ்' செயற்கைக்கோள், இந்தியாவின் பருவநிலை மற்றும் சூறாவளி, வெள்ளம், வறட்சி ஆகியவற்றை அறிய உதவும். இந்த நான்கு செயற்கைக்கோள்களையும்,"பி.எஸ்.எல்.வி., சி18' ராக்கெட் சுமந்து சென்றது."பி.எஸ்.எல்.வி., சி18' ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான, 50 மணி நேர, "கவுன்ட் டவுண்' திங்கள்கிழமை காலை 9 மணிக்கு துவங்கியது. இதையடுத்து, ராக்கெட்டில் திரவ எரிபொருள் நிரப்புவதில், இரண்டாவது கட்டப்பணி, ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான, நான்காவது கட்டப்பணி உட்பட, பல்வேறு பரிசோதனைப் பணிகள் நடந்து வந்தன.இதைதொடர்ந்து, ஏற்கனவே திட்டமிட்டபடி, இன்று காலை 11 மணிக்கு நான்கு செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி., சி18 ராக்கெட், விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்டதை தொடர்ந்து விஞ்ஞானிகள் மிகழ்ச்சி தெரிவித்தனர். இந்த ஆண்டில் இஸ்ரோ செலுத்தும் 4வது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 20வது முறையாக பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments: