25 October 2011

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணி தீபாவளி பரிசு : தொடரை 5-0 கணக்கில் வென்று இந்தியா அசத்தல்

கோல்கட்டா : கோல்கட்டா ஈடன் கார்டனில் நடைபெற்ற இங்கிலாந்திற்கெதிரான ஐந்தாவது மற்றும் இறுதிகிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 5-0 கணக்கில் வெற்றி பெற்று தொடரை 5-0 கணக்கில் வென்று தங்களது ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாக இந்த வெற்றியை சமர்ப்பித்தது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டில்லியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், மொகாலியில் நடைபெற்ற 3வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், மும்பையில் நடைபெற்ற 4வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று 4-0 கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், ஆறுதல் வெற்றி பெறுவதற்காக, இங்கிலாந்து அணி கோல்கட்டாவில் நடந்த 5வது போட்டியில் அதிரடியாக விளையாட முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 271 ரன் எடுத்தது. இந்திய அணி கேப்டன் அதிரடியாக விளையாடி 68 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார்.

சூப்பர் துவக்கம் : 272 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி துவக்கத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர்களான குக் மற்றும் கீஸ்வெட்டர் அரைசதமடித்தனர். குக் 60 ரன்களுக்கும், கீஸ்வெட்டர் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அசத்தலான பந்துவீச்சு: அடுத்து வந்த வீரர்கள், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 37 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 176 ரன் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்தியா 5-0 கணக்கில் தொடரை வென்று, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக இந்த தொடரை சமர்ப்பித்தது என்று கூறினால் அது மிகையல்ல.

ஆட்டநாயகன் : 21 ரன்களை எடுத்த‌தோடு மட்டுமல்லாமல் 4 விக்கெட்களை கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்ட இளம் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments: