28 October 2011

டீக்கடைக்காரர் மகள் பல்கலை அளவில் முதலிடம்.

திருப்பூர்:திருப்பூரில் உள்ள டீக்கடை உரிமையாளர் மகள் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, கோவை பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.திருப்பூர் அருகே செட்டிபாளையம் டி.பி.என்., கார்டனை சேர்ந்தவர் மனோகர்; மனைவி அமுதராஜேஸ்வரி. இவர்களுக்கு மனோபிரியா (19); பிரீத்தி (17) என இரு மகள்கள். மனோகர், திருப்பூர் பெருமாள் கோவில் வீதியில் கடந்த 15 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார்.



மூத்த மகள் மனோபிரியா, குமரன் கல்லூரியில் 2008-11ம் கல்வியாண்டில் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி படித்தார். மூன்று ஆண்டுகளிலும் படிப்பில் சிறந்து விளங்கிய மனோபிரியா, அனைத்து செமஸ்டர்களிலும் சிறந்த மதிப்பெண்களுடன், 87.34 சதவீதம் பெற்று, கோவை பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.மாணவி மனோபிரியா கூறியதாவது:சிக்-குன்-குனியா போன்ற எண்ணற்ற நோய்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் நுண்ணுயிர்களே காரணமாக இருக்கின்றன.



மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று சிறு வயது முதலே ஆர்வம் இருந்ததால், குமரன் கல்லூரியில் சேர்ந்து மைக்ரோ பயாலஜி படித்தேன். படிப்பை தவிர மற்ற நேரங்களில்தான் பொழுதுபோக்கு என்று எனக்கு நானே கட்டுப்பாடு ஏற்படுத்தி படித்தேன். பொருளாதார சிக்கல் வந்தபோதிலும், பெற்றோர் எனது படிப்புக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் கொடுத்ததால், படிப்பில் சாதிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.பாடங்கள் குறித்த சந்தேகங்களை கல்லூரி பேராசிரியர்கள் தீர்த்து வைத்தனர்.


அனைத்து பாடங்களுக்கும் குறிப்பு கொடுத்து, ஊக்கப்படுத்தினர். கல்வி மட்டுமின்றி, அவ்வப்போது "கவுன்சிலிங்' நடத்தி, இதர பிரச்னைகளையும் கேட்டறிந்து நிவர்த்தி செய்ததால், படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து, பல்கலை அளவில் முதலிடம் பெற்றுள்ளேன். தற்போது குமரன் கல்லூரியிலேயே முதலாம் ஆண்டு எம்.எஸ்.சி., மைக்ரே பயாலஜி படித்து வருகிறேன். எம்.எஸ்.சி.,யிலும் நன்றாக படித்து முதல் மதிப்பெண் பெற்று, மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர் குறித்து ஆராய்ச்சி செய்வதை லட்சியமாக கொண்டுள்ளேன், என்றார்.மாணவியின் பெற்றோர் கூறியதாவது:திருப்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் துணிக்கடை வைத்திருந்தோம்; நஷ்டம் ஏற்பட்டதையடுத்து, டீக்கடை வைத்துள்ளோம்.


இரு மகள்களும் சிறு வயது முதல் நன்றாக படித்ததால், படிப்பில் சாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவோம். படிப்பிலும் சரி; வீட்டிலும் சரி, முழு சுதந்திரம் கொடுப்பதோடு, வியாபார நஷ்டங்களை பொருட்படுத்தாமல், அவர்களை படிக்க வைக்கிறோம். மூத்த மகள் மனோபிரியா, குமரன் கல்லூரியில் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி படித்தாள். எங்கள் கஷ்டங்களை புரிந்துகொண்டு, படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து, பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றிருப்பது பெருமையாக உள்ளது.


திருச்சி சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ., பி.எல்., படிக்கும் இளைய மகள் பிரீத்தி, கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த போட்டியில் சிறப்பாக வாதாடி, பரிசு மற்றும் சான்று பெற்றுள்ளார். கஷ்டப்பட்டாலும், பிள்ளைகள் நன்றாக படித்து, முதலிடம் பெறுவது எங்கள் கவலைகளை மறக்கச் செய்கிறது, என்றனர்.பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவி மனோபிரியாவுக்கு, கோவை பாரதியார் பல்கலை தங்கப்பதக்கம் வழங்க உள்ளது.

உலகின் பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி... சொத்துமதிப்பு ரூ 1.13 லட்சம் கோடி!!

டெல்லி: உலகிலேயே மிகப்பெரும் பணக்கார இந்தியர் என்ற இடத்தை முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் தக்க வைத்து கொண்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், அவரது தம்பி அனில் அம்பானி இந்த டாப் 10 பட்டியலில் இடமிழந்தார்.

உலக அளவில் முன்னணியில் உள்ள 100 இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளிநாட்டில் இருந்து வெளியாகும் 'போர்ப்ஸ்' என்ற வர்த்தக பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.


இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 100 இந்திய பெரும் பணக்காரர்களின் பட்டியல், 'போர்ப்ஸ்' பத்திரிகையின் இந்திய பதிப்பில் நேற்று வெளியானது.


அதன்படி, உலகிலேயே மிகப்பெரும் பணக்கார இந்தியர் என்ற இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் தக்க வைத்து கொண்டுள்ளார்.


அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் கோடி (22.6 பில்லியன் டாலர்) ஆகும். அவரது சொத்து மதிப்பு, கடந்த ஓராண்டில் ரூ.22 ஆயிரம் கோடி (4.4 பில்லியன் டாலர்) வீழ்ச்சி அடைந்துள்ளது. அதையும் மீறி, அவர் தொடர்ந்து நம்பர் 1 பணக்கார இந்தியராக இருக்கிறார்.


லட்சுமி மிட்டலுக்கு இரண்டாமிடம்


அவரைத் தொடர்ந்து, வெளிநாட்டு வாழ் இந்திய தொழில் அதிபர் லட்சுமி மிட்டல், இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.96 ஆயிரம் கோடி (19.2 பில்லியன் டாலர்) ஆகும். ரூ.65 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார் விப்ரோ கம்ப்யூட்டர் நிறுவனத் தலைவர் அஸீம் பிரேம்ஜி.


4-ம் இடத்தில் எஸ்ஸார் குரூப்பை சேர்ந்த சசி ரூயா, ரவி ரூயா ஆகியோரும் (ரூ.61 ஆயிரம் கோடி), 5-ம் இடத்தில் சாவித்ரி ஜிண்டாலும் (ரூ.47 ஆயிரத்து 500 கோடி), 6-ம் இடத்தில் பார்தியின் சுனில் மிட்டலும் (ரூ.48 ஆயிரம் கோடி), 7-ம் இடத்தில் கவுதம் அதானியும் (ரூ.41 ஆயிரம் கோடி), 8-ம் இடத்தில் குமார் மங்கலம் பிர்லாவும் (ரூ.38 ஆயிரத்து 500 கோடி), 9-ம் இடத்தில் பல்லுன்ஜி மிஸ்திரியும் (ரூ.38 ஆயிரம் கோடி), 10-ம் இடத்தில் ஆதி கோத்ரெஜும் (ரூ.34 ஆயிரம் கோடி) உள்ளனர்.


அனில் அம்பானிக்கு இடமில்லை


நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.37 ஆயிரம் கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது. அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.29 ஆயிரத்து 500 கோடி ஆகும். அவர் முதன்முறையாக, டாப் டென் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் தற்போது 13-ம் இடத்தில் உள்ளார்.


இந்த ஆண்டு பட்டியலில் 14 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். 100 பேர் பட்டியலில் 57 பேர் பில்லியனர்கள்.


சொத்து மதிப்பு வீழ்ச்சி


பணக்கார இந்தியர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் (ரூ.30 ஆயிரம் கோடி) வீழ்ச்சி அடைந்திருப்பதாக இந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பண வீக்க உயர்வு, ஊழல், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பங்கு சந்தை வீழ்ச்சி ஆகியவையே காரணம் என்று 'போர்ப்ஸ்' தெரிவித்துள்ளது.


இந்த பட்டியலில், சன் பார்மசூட்டிக்கல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் திலீப் சாங்வி, ஹீரோ குரூப் பி.எம்.முஞ்சால் ஆகியோர் உள்பட 19 பேரை தவிர, மற்றவர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்து இருப்பதாக இந்த பட்டியல் தெரிவிக்கிறது.


ஒவ்வொருவரது நிறுவனங்களின் பங்கு மதிப்புகள், குடும்ப சொத்துகள், பண பரிவர்த்தனை விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டு இருப்பதாக 'போர்ப்ஸ்' தெரிவித்துள்ளது.

மனைவியை காதலிப்பது எப்படி?

கணவனின் பாதி தான் மனைவி. அப்படிப்பட்ட மனைவியைக் காதலிப்பது எப்படி?.

தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப் போவதற்கு முன்பு வரை பம்பரமாய் சுழலும் மனைவிக்கு ஒரு நாள் ஓய்வு கொடுங்கள். வீட்டு வேலைகளை நீங்கள் செய்து அசத்துங்கள். நீங்கள் அவ்வாறு பெயருக்கு சொன்னால் கூட வேணாமுங்க, வாரம் முழுவதும் ஓயாது உழைக்கிறீங்க. சனி, ஞாயிறு நிம்மதியா ஓய்வு எடுங்க, வீட்டு வேலைகளை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி உங்களை வேலை செய்யவிடமாட்டார்.


அது தான் மனைவியே சொல்லியாச்சுல நாம் போய் கால் மேல காலப்போட்டு டிவி பார்ப்போம் என்று சென்றுவிடாதீர்கள். நீயும் தான கண்ணு தினமும் உழைக்கிற இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடு என்று சொல்லி வீட்டு வேலைகளைச் செய்யுங்கள். மனைவி உச்சி குளிர்ந்து போவார்.


எதிர்பாராத நேரத்தில் கட்டித் தழுவி அன்பாக ஒரு முத்தம் கொடுங்கள். ஆஹா, என் புருஷனுக்கு என் மேல் எவ்வளவு பாசம் என்று பூரித்துப் போய்விடுவார். திடீர் என்று ஏதாவது ஒரு பரிசு கொடுத்து அசத்துங்கள். மனைவி வேலைக்கு செல்பவரா? அவரை ஊக்குவியுங்கள். அதனால் அவர் இன்னும் திறமையாக பணிபுரிவார். அலுவலகப் பிரச்சனைகளைக் கூறினால் முடிந்தால் தீர்வு காண உதவுங்கள்.


மனைவியை மனதாரப் பாராட்டுங்கள். அது அவரின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு சிலு, சிலுவென்று காற்று வீசுகையில் மனைவியின் காதருகில் சென்று ஐ லவ் யூ என்று சொல்லுங்கள். அவர் பதில் சொல்லாமல் புன்னகை புரிந்தால். ஐ லவ் யூ சொன்னால் லவ் யூ டூ என்று சொல்ல வேண்டும் என்று கூறுங்கள்.


டிவி பார்க்கையில் எப்பொழுதுமே உங்களுக்கு பிடித்த சேனல்களை மட்டும் பார்க்காதீர்கள். உங்கள் மனைவிக்கு பிடித்த சேனலை வைத்து இருவரும் சேர்ந்து பாருங்கள். (நாங்க எங்க எங்களுக்கு பிடித்த சேனல் பார்க்கிறோம், எப்ப பார்த்தாலும் சீரியல் தான் ஓடுகிறது என்று நீங்கள் சொல்வது கேட்கிறது)

இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள்.


நீங்கள் எப்பொழுது அவரை முதன்முதலாகப் பார்த்தீர்கள். நிச்சயதார்த்தத்தில் எப்படி ஓரக்கண்ணால் பார்த்தீர்கள், திருமணத்தில் உங்கள் மனைவி எப்படி வெட்கப்பட்டு தலைகுனிந்தபடி நின்றார், குழந்தை பிறந்தபோது எப்படி உணர்ந்தீர்கள் என்பது போன்று பேசுங்கள். இதெல்லாம் எத்தனை தடவை பேசினாலும் அலுக்காத ஆனந்த விஷயங்கள்.

பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க

கணவன்மார்கள் வெறுக்கும் விஷயங்களில் முக்கியமானது டிவி சீரியல்கள். சீரியல் என்று சொன்னாலே கணவன்மார்கள் அய்யய்யோ என்று ஓட்டம் பிடிக்கும் அளவில் இருக்கின்றனர்.


பகல் எல்லாம் உழைத்துக் களைத்து வீடு திரும்பினால் மனைவி டிவி முன்பு அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டே வரவேற்கிறார். ஒரு காபி போட்டுத்தாம்மா என்று கேட்டால் இதோ இந்த சீரியல் இப்போ முடிந்துவிடும், முடிந்தவுடன் காபி தருகிறேன் என்கிறார். வேறு வழியில்லாமல் சீரியல் முடியும் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு கணவன்மார்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


இதில் வினோதம் என்னவென்றால் சில கணவன்மார்களுக்கு குறிப்பிட்ட சீரியல்கள் என்றால் பிடிக்கிறது. என்ன சார், உங்க மனைவியோடு சேர்ந்து நீங்களும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டீர்களா அல்ல அந்த குறிப்பிட்ட சீரியல் உங்களை கவர்ந்துவிட்டதா என்று கேட்டால், அடபோங்கம்மா நீங்க வேற அந்த சீரியல் போடும்போது தான் நிறைய விளம்பரம் வருகிறது என்கிறார்கள்.


விளம்பரத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால். மற்ற சீரியல்களில் 1,2 விளம்பரங்கள் தான் போடுகிறார்கள். ஒரு விளம்பரத்திற்கு சாதம், மறு விளம்பரத்திற்கு சாம்பார், இன்னொரு விளம்பரத்திற்கு கூட்டு, விக்கினால் கூட அடுத்த விளம்பர இடைவேளையில் தான் தண்ணீர் கிடைக்கிறது.

 ஆனால் அந்த குறிப்பி்ட்ட சீரியல்களில் அதிக விளம்பர இடைவேளை வருவதால் ஒரே நேரத்தில் சாதம், சாம்பார், கூட்டு எல்லாம் கிடைக்கிறது என்கிறார்கள் பரிதாபமாக.

அட சாப்பாடை விடுங்க, சீரியல்களில் வரும் கதாபாத்திரம் போலவே சிலர் ஆகிவிடுகின்றனர். பெண்கள் மும்முரமாக சீரியல் பார்த்துக் கொண்டிருக்க வெளியில் விளையாடிய குழந்தை தவறி விழுந்து இறந்த கதையெல்லாம் நடந்திருக்கிறது. சீரியல் முடிந்த பிறகு தான் குழந்தை ஞாபகம் வந்து தேடிப்பார்த்தால் வாசலில் இறந்து கிடந்திருக்கிறது.


பெண்களே, உங்களை சீரியல் பார்கக் வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அதேசமயம் சீரியல் மோகம் பிடித்துத் திரியாதீர்கள். கணவனையும், பிள்ளைகளையும் கவனிக்காமல் நீங்கள் சீரியல் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்.
 
நீங்கள் டிவி, டிவி என்று டிவி சீரியல்களை கட்டிக் கொண்டு அழுதால் கணவன்மார்கள் கவனம் வேறு எங்காவது போவதில் ஆச்சரியம் இல்லை. எனவே, சீரியல்களை குறைத்துக் கொண்டு பாவப்பட்ட கணவன்மார்களையும் கொஞ்சம் கவனியுங்கள்.

26 October 2011

"ஆதார் அடையாள அட்டை'க்கு விண்ணப்பிக்கும் பணி துவக்கம்


சென்னை:""தேசிய அளவில் செல்லத்தக்க, "ஆதார் அடையாள அட்டை'யை, ஒவ்வொரு குடிமகனும் அவசியம் பெற வேண்டும்,'' என, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி பேசினார். இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, தமிழக அளவில், "ஆதார் அடையாள அட்டை'க்கான விண்ணப்பங்களை பெறும் பணி, சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில் நேற்று துவங்கியது.

இப்பணியை துவக்கி வைத்து, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி பேசியதாவது:ஒருவரின் இருப்பிட நிரூபணத்திற்கு முக்கிய ஆவணங்களாக உள்ள ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவை, மாநில அளவில் மட்டும் செல்லத்தக்கவை.தற்போதைய பணி சூழலில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அவ்வப்போது மாறுதலில் செல்ல வேண்டியுள்ளது. அப்போது அவர்களிடம், இருப்பிட நிரூபணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால், ரேஷன் அட்டை, சமையல் காஸ் இணைப்பு, வங்கி கணக்கு துவங்குவது போன்றவற்றில், நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது.

இக்குறைகளை களையும் வகையில், தேசிய அளவில் செல்லத்தக்க, "ஆதார் அடையாள அட்டை' வழங்கும் திட்டம், தபால் துறை மூலம், நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இப்பணி, இன்று(நேற்று) துவக்கப்படுகிறது. கிராமப்புற மக்களிடம் எளிதில் கொண்டு செல்லும் நோக்கில், இப்பணி தபால் துறையிடம் தரப்பட்டுள்ளது. தேசிய அளவில் சிறந்த அடையாள ஆவணமான, "ஆதார் அடையாள அட்டை'யை ஒவ்வொரு குடிமகனும் பெறுவது அவசியம்.இவ்வாறு கோபால்சாமி பேசினார்.

போலி அடையாள அட்டைக்கு, "செக்': "ஆதார் அடையாள அட்டை'க்கான விண்ணப்பத்தை பெறும்போது, விண்ணப்பதாரர்களின், பத்து கைவிரல் ரேகைகள், இரண்டு கருவிழிகள் மற்றும் இரண்டு மார்பளவு புகைப்படம் போன்றவை எடுக்கப்படும். விண்ணப்பதாரர்களின் ரத்த வகையும் பதிவு செய்யப்படும்."இவற்றின் மூலம், போலி அடையாள அட்டை பெறுவது முற்றிலும் தவிர்க்கப்படும். இப்பணிகளுக்காக, ஆதார் அடையாள அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் தபால் நிலையங்களில், தனியார் பங்களிப்புடன் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என, சென்னை வட்ட தபால் பொது மேலாளர்(கடித மேலாண்மை) ராமசந்திரன் கூறினார்.

25 October 2011

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணி தீபாவளி பரிசு : தொடரை 5-0 கணக்கில் வென்று இந்தியா அசத்தல்

கோல்கட்டா : கோல்கட்டா ஈடன் கார்டனில் நடைபெற்ற இங்கிலாந்திற்கெதிரான ஐந்தாவது மற்றும் இறுதிகிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 5-0 கணக்கில் வெற்றி பெற்று தொடரை 5-0 கணக்கில் வென்று தங்களது ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாக இந்த வெற்றியை சமர்ப்பித்தது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டில்லியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், மொகாலியில் நடைபெற்ற 3வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், மும்பையில் நடைபெற்ற 4வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று 4-0 கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், ஆறுதல் வெற்றி பெறுவதற்காக, இங்கிலாந்து அணி கோல்கட்டாவில் நடந்த 5வது போட்டியில் அதிரடியாக விளையாட முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 271 ரன் எடுத்தது. இந்திய அணி கேப்டன் அதிரடியாக விளையாடி 68 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார்.

சூப்பர் துவக்கம் : 272 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி துவக்கத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர்களான குக் மற்றும் கீஸ்வெட்டர் அரைசதமடித்தனர். குக் 60 ரன்களுக்கும், கீஸ்வெட்டர் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அசத்தலான பந்துவீச்சு: அடுத்து வந்த வீரர்கள், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 37 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 176 ரன் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்தியா 5-0 கணக்கில் தொடரை வென்று, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக இந்த தொடரை சமர்ப்பித்தது என்று கூறினால் அது மிகையல்ல.

ஆட்டநாயகன் : 21 ரன்களை எடுத்த‌தோடு மட்டுமல்லாமல் 4 விக்கெட்களை கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்ட இளம் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

24 October 2011

பணம் பாதாளம் பாய்ந்த பஞ்சாயத் எலெக்சன் !


இந்தியா 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததும் மகாத்மா காந்தி, 'அரசியல் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதாது, மாறாக பொருளாதார சுதந்திரமும் அடைய வேண்டும்' என்றார். அவர் கனவு கண்டது சிலர் சொல்வதுபோல ராம ராஜ்யமில்லை, மாறாக கிராம ராஜ்யம் பெற வேண்டும் என்றார். அதாவது கிராமம் தன்னிலை அடைய வேண்டும் என்றார்.

செல்வம் ஒரு சிலரிடமே பிரமீடு போன்று குவியாது, கடல் போன்று பறந்து அனைவரும் பலன் பெற வேண்டும். இஸ்லாத்திலும் வறியவர் மேன்மைப்பட சொத்து வரி என்ற சக்காத், சதகா, பித்ரா போன்ற பொருளாதார உதவிகள் செல்வந்தர் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. மகாத்மா கூட கலிபா ஓமர் போல ஜனநாயக நல்லாட்சி செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டார்.
சங்க தமிழ் இலக்கியங்களில் கிராமங்களில் எவ்வாறு ஜனநாயகம் தளிர்த்திருந்தது என்று விரிவாக செல்கிறது.

 சோழ மன்னன் ராஜேந்திரன் காலத்தில் கிராமத்தில் குடக்கூலி முறையில் பஞ்சாயத் உறுப்பினர்கள் தேர்தெடுத்து கிராம நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அதேபோன்று அனைத்துக் கிராமங்களும் முன்னேற தங்களால் தேர்ந்தேடுக்கும் பிரதிநிதிகளால் நிர்வாகம் நடத்தும். சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 40 இன் படி மெட்ராஸ் கிராம பஞ்சாயத் சட்டம் 1959 இயற்றப்பட்டது. அதில் 500 பேர் மற்றும் அதற்கு அதிகமாக வாழும் மக்களைக் கொண்டது ஓர் கிராமப் பஞ்சாயத்தாக மற்றும் பஞ்சாயத் யூனியன் ஆக அறிவிக்கப்பட்டது. இந்திய மக்கள் 80 சதவீதம் பேர் கிராமத்தில் வாழ்வதால் அவர்கள் ஜனநாயகத்தின் பயனை உண்மையாக சுவைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆசைப் பட்டார். அதன் விளைவாக அரசியல் சட்டம் 73 மற்றும் 74 திருத்தங்கள் கொண்டு வரப் பட்டது. அந்த திருத்தங்களின் விளைவு கிராமப் பஞ்சாயத், பஞ்சாயத் யூனியன், மாவட்ட பஞ்சாயத் போன்ற மூன்று அடுக்கு பஞ்சாயத்து அலுவலகங்கள் தோன்றின.

2006 ஆம் ஆண்டு உள்ளாச்சித் தேர்தலுக்குப் பின்பு 17, 19.10.2011 ஆகிய நாட்களில் இரண்டு அடுக்கு தேர்தல் வந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய பலத்தினைக் காட்டுவதிற்கு தனித்தனியே போட்டியிட்டன. அதேபோல் சமுதாய அரசியல் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. சில சமுதாய இயக்கங்களும், உதுரி சமுதாய அரசியல் கட்சிகளும் வலியச்சென்று பிற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தன. சென்ற 2011 மே மாதம் நடந்த தேர்தலில் சில சமுதாய அரசியல் கட்சிகளுடன் வந்து சேர்ந்தவர்கள் திரும்பவும் தாங்கள் முன்பு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிக்கே திரும்பவும் காவடி தூக்கச் சென்று விட்டன.இந்தத் தேர்தலில் போட்டியிடுவதிர்க்காக பல லகரம் கொடுத்துத்தான் அரசியல் கட்சிகளிடம் சமுதாயத்தினைச் சேர்ந்தவர்கள் போட்டியிட சீட்டு வாங்கினார்களாம். அப்படி சீட்டுக் கிடைக்காதவர்கள் முறையான அரசியல் கட்சி வேட்ப்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டிபோட்டர்களாம்.

போட்டிப்போடுவது ஒன்றும் புதிதல்லத்தான். ஆனால் முஸ்லிம்கள் ஊரில் பணம் பாதாளம் வரை பாயும் என்பதினை இந்தத் தேர்தல் காட்டிவிட்டதாம்.
பல இடங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கும், அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் சுடச்சுட பணியாரத்திளிருந்து, சுவையான பிரியாணியில் தொடர்ந்து, மப்பேற்ற மேன்சன் ஹவுஸ் பிராந்தியினை   வயிறு முட்ட ஏத்திவிட்டு, சுருட்டிய ரூபாய் 500 நோட்டினை காதில் வைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்ற காட்சி எல்லாம் ஜெக ஜோதியாக இருந்ததாம். சில ஊர்களில் காலையில் பற்ற வாய்த்த அடுப்பு நடு இரவு வரை பற்றி எரிந்து கொண்டு இருந்ததாம். இவை எல்லாம் சாதாரண வார்டு தேர்தலுக்குக் கூட இருந்ததாம்.

ஒரு கடல்கரை சமுதாய ஊரில் இரு தரப்பிதனரிடையே சண்டை உச்சக்கட்டத்தில் போய் உன்னை ஒழித்துக்கட்டுகிறேன் பார். உன் வண்டவாளங்களை எல்லாம் காட்டிகொடுக்கிறேன் பார் என்று ஒலிப் பெருக்கி மூலம் சவால் விட்டார்களாம் நமது சமுதாய சகோதரர்கள் என்றால் அந்த ஊரில் வாழும் மற்ற சமுதாயத்தினர் எப்படி எல்லாம் மகிழ்ச்சி அடைந்து இருந்து இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள். சமுதாயதினவரை தோற்கடிக்க வேறு வெளி ஆட்களை நாம் தேட வேண்டாம். மாறாக நமக்குள்ளே இருக்கின்றார்கள் என்று அரபு மற்றும் ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் ஏற்படுகின்ற கொந்தளிப்புகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அழிந்த குட்டையில் மீன் பிடிக்கவா தெரியாது அன்னியருக்கு?

அப்படி நடந்த தேர்தலில் நாம் சாதித்தது என்ன? ஒரு சில வார்டு தேர்தலிலும், கிராமப் பஞ்சாயத்துகளிலும் தான் வெற்றிப் பெற்றுள்ளோம். ஏன் இந்த வெக்கக் கேடு. ஏழு சதவீதம் உள்ள நாம் இணைந்து ஒரு கூட்டமைப்பு ஏற்ப்படுத்தி தேர்தலில் நமக்கென்ற ஒரு தனி அங்கீகாரம் பெற முடியாதா? இன்று பெரும்பாலான சமுதாய இயக்கங்களில் இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். அந்த இளைஞர் பட்டாளத்தினை ஒன்று திரட்டி, ஓர் அணியினை உருவாக்கக் கூடாது? பலர் இணைய தளங்களில் அதற்க்கான கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஆனால் பூனைக்கு மணி கட்ட யாரும் முன் வரவில்லையே ஏன் என்று உங்களுக்கு ஆச்சரியமாகத் தோணவில்லையா? காரணம் அந்த சமுதாய அரசியல் கட்சிகளிடம் இருக்கின்ற சிலரின் வரட்டுக் கௌரவமே காரணம் என்றால் மிகையாகாது. ஆகவே பொய்யான வரட்டுக் கௌரவத்தினை விட்டு சமுதாய நலன் கருது சமுதாய ஒருங்கிணைப்புக் குழு ஒன்றினை மாநிலத்திலும், மாவட்டத்திலும், நகரங்களிலும், ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஏற்ப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். நாம் அடுத்துவர்களுக்கு வெண்சாமரம் இனி மேலும் வீசத் தான் வேண்டுமா, கஷ்டப்பட்டு சம்பாதித்த நாலு காசுகளை மார்கத்துக்குப் புறம்பான காரியங்களில் நான் முன்பு குறிப்பிட்டதுபோல வீண் செலவு செயத் தான் வேண்டுமா, அதனை ஏழை எளிய சமுதாய மக்களுக்கு வழங்கினால் என்ன என்று சிந்திக்க வேண்டாமா சொந்தங்களே?


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

22 October 2011

Earn upto Rs. 9,000 pm with PaisaLive.com!

Hi ,

I have something interesting for you - you can easily earn regular income online via PaisaLive.com!

It’s really amazing! You get paid to open & read the contents of PaisaLive mails. You also receive special discount coupons, promotions and free passes to various events in your city.

Join now and get Rs. 99 instantly, just for joining. What more, as a special bonus you get paid for inviting your friends also!

Create your PaisaLive Account & refer your friends to earn launch referral bonus on every new registration.

http://www.PaisaLive.com/register.asp?1980954-4301296

உப்பு போட்டா கம்ப்யூட்டர் டிஸ்க் சைஸ் ....


சிங்கப்பூர் : உணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்ளது. உணவுக்கு சுவை கூட்டும் உப்பு, கம்ப்யூட்டரின் சைஸ் கூட்டும் அதிசயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கம்ப்யூட்டர் இயங்குவதற்கு தேவையான சாப்ட்வேர்கள், கம்ப்யூட்டரில் நாம் பதிவு செய்கிற போட்டோ, பாட்டு, சினிமா உள்ளிட்ட பைல்கள் அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கிலேயே பதிவாகின்றன.

கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், ஹார்ட் டிஸ்க்குகளை வைப்பதற்கு பெரிய அறைகள் தேவைப்பட்டன. டிஸ்க் அளவை குறைப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது.

இந்த சைஸை மேலும் குறைப்பது தொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், பைல்களை சேமிக்கும் வகையிலும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இதுதொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் கிடைத்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜோயல் கூறியதாவது:

கம்ப்யூட்டரின் மிக முக்கியமான பகுதி ஹார்ட் டிஸ்க். பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பது இதுதான். சமையலுக்கு பயன்படும் ஒரு சிட்டிகை உப்புத் தூள் இதன் கொள்ளளவை அதிகரிப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிட்டியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் பெருத்த வெற்றி கிட்டியுள்ளது.

டேபிள்சால்ட் எனப்படும் தூள் உப்பைக் கொண்டு கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் டேட்டா ரெகாடிங் திறனை 6 மடங்கு அதிகரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் தயாரிப்பின்போது அதில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பையும் சேர்த்து பயன்படுத்தும்போது, ஹார்ட் டிஸ்க்கின் பதிவு திறன் ஒரு சதுர இன்ச்சுக்கு 3.3 டெராபைட் அதிகரிக்கிறது. அதாவது, டிஸ்க் கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது.உப்பு சேர்ப்பதால் கம்ப்யூட்டருக்கோ, இதர பாகங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கின் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது.இவ்வாறு ஜோயல் கூறினார்.

ஆட்டம் போட்ட உதிரி கட்சிகள் டமால்: உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி


கடந்த சட்டசபை தேர்தலில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி உடன்பாட்டுக் குழு, தனித்தனி தேர்தல் அறிக்கை என, ஆட்டம் போட்ட உதிரிக் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளன. காங்கிரஸ், பா.ம.க., - வி.சி., ஆகிய கட்சிகளை, தி.மு.க.,வும், தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை, அ.தி.மு.க.,வும் கழற்றி விட்டதன் மூலம், இக்கட்சிகளின் சாயம் வெளுத்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் பொதுவாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தான் ஓட்டளிப்பர். இம்முறையும் அப்படி தான் நிகழ்ந்துள்ளது. ஆனால், தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., - மா.கம்யூ., - பா.ம.க., என, பலமுனை போட்டிகளுக்கிடையே, அனைத்து மாநகராட்சிகளையும், அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது.நேற்றிரவு 7:15 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள, 125 நகராட்சி தலைவர் பதவிகளில், 87 இடங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பெரும்பாலான இடங்களை, அ.தி.மு.க., கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.அனைத்து இடங்களிலும், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் அதிக இடைவெளி உள்ளது. மற்ற உதிரிக் கட்சிகள், அ.தி.மு.க., பெற்ற ஓட்டுகளில், 10ல் ஒரு பங்கு ஓட்டு கூட எடுக்காமல் மண்ணை கவ்வியுள்ளன.

தி.மு.க., கழற்றிவிட்டதால், தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், சேலம், ஈரோடு, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் மட்டும், நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு நகராட்சி தலைவர் பதவியைக் கூட, தேசிய கட்சியான காங்கிரசால் கைப்பற்ற முடியவில்லை. இதன் மூலம், "தமிழகத்தில் தங்களுக்கு கணிசமான அளவு ஓட்டு வங்கி உள்ளது' என்ற காங்கிரசாரின் வாதம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.வட மாவட்டங்களில், பா.ம.க., - வி.சி., கட்சிகள் தங்களுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கூறி, திராவிட கட்சிகளை மிரட்டி வந்தன. இவர்களின் தயவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது எனக் கூறி, மாறி மாறி ஏதாவதொரு திராவிட கட்சியில் கூட்டணி என்ற பெயரில் சவாரி செய்து, எம்.எல்.ஏ., - எம்.பி., மத்திய அமைச்சர் வரை உயர்ந்த பதவிகளை அனுபவித்து வந்தனர். தற்போது வட மாவட்டங்களிலேயே இக்கட்சி தோல்வியைத் தழுவியதால் அக்கட்சிகளின் குட்டு உடைந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கூட்டணியுடன், உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த, தே.மு.தி.க., சென்னை, ஈரோடு, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் மூன்றாவது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ள, தே.மு.தி.க., ஒரு மாநகராட்சியைக் கூட கைப்பற்றாதது, "அ.தி.மு.க., கூட்டணி பலத்தால் தான், சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வால் வெற்றி பெற முடிந்தது' என்ற அரசியல் ஆர்வலர்களின் விமர்சனத்தை மெய்பிப்பதாக உள்ளது.எதிர்க்கட்சியான, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட, மா.கம்யூ., வேலூர் மற்றும் கோவை மாநகராட்சிகளில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இ.கம்யூ., இருக்கும் இடம் தெரியவில்லை.உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்தித்து, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கான போட்டியில் மூன்றாவது இடமும், திருப்பூர், வேலூர், கோவை மாநகராட்சிகளில் நான்காவது இடத்தையும் பிடித்து, ம.தி.மு.க., தமிழக அரசியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.,வின் மீது, மக்களுக்கு இருந்த அதிருப்தி இன்னும் தீரவில்லை. இந்நிலையில், மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான போட்டியில், பெரும்பாலான இடங்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது அக்கட்சிக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்.உள்ளாட்சித் தேர்தல் முடிவின் மூலம், தமிழகத்தில், காங்கிரஸ், மா.கம்யூ., -இ.கம்யூ.,- பா.ம.க., - வி.சி., ஆகியவை பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகள் என்று சொல்லி மார்தட்டிக் கொண்டிருந்த கட்சிகள் அனைத்தும் இனி, தொகுதி பேரம் பேசும் வலுவை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் இழந்துள்ளன.

எகிப்து பாணியில் 'மம்மி'யாக்கப்படும் இங்கிலாந்து டாக்சி டிரைவரின் உடல்!


லண்டன்: இங்கிலாந்ச் சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் 'மம்மி' ஆகியுள்ளார். அதாவது உடல் எகிப்து நாட்டில் அந்தக் காலத்தில் மம்மியாக பதனப்படுத்தப்படுவதைப் போல இந்த டாக்சி டிரைவரின் உடலும் பதனப்படுத்தப்பட்டுள்ளது.

Taxi driver becomes first person to be mummified in over 3,000 years


இதன் மூலம், 3,000 ஆண்டுகள் கழித்து முதன்முதலாக மம்மியாகும் முதல் மனிதர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.

பண்டைய கால எகிப்திய மன்னர்கள் உடல்களை பாடம் செய்து மம்மியாக வைத்தனர். அந்த ரகசியம் இத்தனை ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் மம்மி ரகசியத்தை கண்டுபிடித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஆலன் பில்லிஸ் (61). டாக்சி டிரைவர். அவர் கடந்த ஜனவரி மாதம் நுரையீரல் புற்றுநோயால் உயிர் இழந்தார். ஆலன் தான் இறப்பதற்கு முன்பு மருத்துவ ஆராய்ச்சிக்காக தனது உடலைத் தானமாக வழங்குவதாக உறுதியளித்தார். மேலும் தனது உடலை மம்மி போல பதனப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன்படி அவர் இறந்ததும் அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது. முதலில் ஒரு மாதத்திற்கு ஆலனின் உடல் உப்புத் தண்ணீரில் முக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அவரது உடல் உலர்த்தப்பட்டது. இவையெல்லாம் செய்வதற்கு முன்பாக ஆலனின் உள்ளுறுப்புகள் நீக்கப்பட்டு லினன் என்னும் நூல் வைத்து அந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டது.

எகிப்தியர்கள் செய்த மம்மி போன்று ஆலன் உடல் முழுவதும் லினன் துணி சுற்றப்பட்டது. ஷெப்பீல்டு மெடிகோ-லீகல் சென்டரில் வைத்து இந்த பதப்படுத்தும் பணிகள் 3 மாத காலமாக நடந்தது. இறுதியில் ஆலன் மம்மி வடிவம் பெற்றுள்ளார்.

ஆலனை மம்மியாக்கிய தொல்பொருள் வேதியியலாளர் ஸ்டீபன் பக்லீ கூறுகையில், ஆலன் பண்டைய கால எகிப்தியர்கள் செய்த மம்மி போன்று காணப்படுகிறார். 3,000 ஆண்டுகள் கழி்தது மம்மியாகியுள்ள முதல் நபர் என்ற பெருமையை ஆலன் பெறுகிறார். எகிப்தியர்களின் ரகசியத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்றார்.

கைப்புள்ள ஸ்டாலின்!!


கைப்புள்ள ஸ்டாலின் என்ற தலைப்பிலேயே அன்பு பதிப்பகம் சார்பில் புதிய புத்தகம் வெளியாகியுள்ளது.  இந்தப் புத்தகத்தில் எழுத்துக்களை விட ஆவணங்கள் அதிகமாக உள்ளது.  உள்ளாட்சித் துறையை தன் வசம் வைத்திருந்த ஸ்டாலினின் உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற ஊழல்களே பெருமளவில் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

மு.க.ஸ்டாலினுக்கு ஒரு அப்பவித் தொண்டனின் கடிதம் என்ற முதல் அத்தியாயத்தோடு புத்தகம் தொடங்குகிறது.   ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த அஷோக் வரதன் ஷெட்டி ஐஏஎஸ் அதிகாரி செய்த ஊழல் திருவிளையாடல்களையும் இந்தப் புத்தகம் புட்டு புட்டு வைக்கிறது.


STALIN-WRAPPER




ஆவடியை அடுத்த மோரை கிராமத்தில் நடந்த பெரும் நில மோசடி குறித்தும், இயற்கை உரம் என்ற பெயரில் உள்ளாட்சித் துறையில் நடந்த மோசடிகள் குறித்தும் பல்வேறு தகவல்களை இந்த நூல் தருகிறது.


இதற்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் “மக்கள் ஏமாந்தார்களா ஏமாற்றப் பட்டார்களா” என்ற புத்தகத்தையும் “கேடி சகோதரர்கள்” என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்ட பத்திரிக்கையாளர் திரு அன்பு அவர்களே இந்தப் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் இந்தப் புத்தகத்தை எம்.நடராஜன் வெளியிட, திருச்சி வேலுச்சாமி முதல் பதிப்பை பெற்றுக் கொண்டார்.


DSC_4908


Thanks - Savukku

கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை


Woman Driver"கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை," என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

கார் விபத்துக்களில் சிக்கிய 2,000 பெண்களிடம் லண்டனை சேர்ந்த யங் மர்மலடே என்ற காப்பீட்டு நிறுவனம் ஆய்வு ஒன்றைநடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் பிரபல டெய்லி மெயில் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், விபத்தை ஏற்படுத்தும் பெரும்பாலான பெண்கள் தங்கள் மீதுள்ள தவறை ஒப்புக்கொள்வதே இல்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் கலந்துகொண்ட 10 பெண்களில் 8 பெண்கள் விபத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதற்கு நான் பொறுப்பில்லை, என் மீது எந்த தப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், எதிரில் வந்த வாகன ஓட்டிகள் மீது பழியைப் போட்டுள்ளனர், என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விபத்து நடநததற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை என்று கூறிய பல பெண்கள், காரில் பிரச்னை இருந்துள்ளது, எதிரில் வந்தவர்தான் வேகமாக வந்து மோதிவிட்டார் என்று வாயில் கிடைத்த வாசகத்தை அந்த பெண்கள் அள்ளி வீசியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் விபத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதுதான் ஆய்வில் கலந்துகொண்ட பெரும்பாலான பெண்களின் பதிலாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 October 2011

என்ன தான் நடக்கிறது கூடங்குளத்தில்...? திரைமறைவு பின்னணி


நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், அணுமின் நிலையம் அமைக்கும் திட்டம், கடந்த 2001ல் துவக்கப்பட்டது. ரஷ்யாவுடன் இணைந்து, 13 ஆயிரத்து, 615 கோடி ரூபாய் செலவில், 2,000 மெகாவாட் தயாரிக்க உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில், அடுத்த மாதம், மின் உற்பத்தி துவக்க நாள் குறித்தாகி விட்டது.

ஆனால், வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைத்த கதையாக, இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றொரு குரல், பல முனைகளில் இருந்து ஒலிக்கிறது. இதன் பின்னணி என்ன என்பது பற்றி விசாரணை செய்தபோது கிடைத்த தகவல்கள்:
அமெரிக்காவில், அமைதிக்கான பிஎச்.டி., படிப்பு முடித்தவர் தான், கூடங்குளம் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர், கூட்டப்புளி, இடிந்தகரை, பெரியவிளை, கூடங்குளம் பாதிரியார்கள், இவர்களுக்கு மேல் உள்ள, தூத்துக்குடி, மதுரை மறைமாவட்டம் ஆகியவற்றின் தலைமை பாதிரியார்களையும் சேர்த்துக் கொண்டு, போராட்டத்தை வலுவாக்கி வருகிறார். உள்ளூர் மீனவ சமூகமான, "பெர்னாண்டோ இனம்' என்ற அடிப்படையிலும், இவர்களை ஒருங்கிணைத்துள்ளார்.

மக்கள் ஆதரவு:
தென்மாவட்டங்களுக்கு தலைமை தாங்கும், தலைமை பாதிரியாரின் பூர்வீகம், கூடங்குளம் என்பதால், அவரும் தன் பங்குக்கு, போராட்டத்தை வழிநடத்தி வருகிறார். அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்கள், அங்கு பணியில் உள்ளவர்கள், அணுமின் நிலையம் வர வேண்டும் என, விரும்புகின்றனர். ஆனால், சுற்றியுள்ள பகுதிகளின் போராட்டத்தால், நெருக்கடிக்கு ஆளாகி, அமைதியாக உள்ளனர்.இவர்களது நெருக்கடியால், "ஹவுஸ் கீப்பிங்' பணி கான்ட்ராக்ட் எடுத்திருந்த, மகளிர் சுயஉதவிக் குழு பெண்களும், மனம் மாற்றப்பட்டுள்ளனர். உள்ளூர் தேவாலயங்களிலும், மக்களிடம் பேசி, மன மாற்றம் செய்யப்படுகிறது.

ஆதரவு சக்திகளின் வேலை:
கூடங்குளம் மின் நிலையம், இந்திய - ரஷ்ய கூட்டு முயற்சியில் உருவாவதை, அமெரிக்க ஆதரவு சக்திகள் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த பின்னணியிலேயே, இந்த போராட்டம் உருவெடுத்துள்ளதாக, சர்வதேச அணுசக்தி வட்டாரங்கள் கருதுகின்றன.இந்த பின்னணியை அறிந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு தலைவரும், மும்பை கார்டினலுமான, கிரேசியஸ் ஓஸ்வேல்டு மற்றும் டில்லி ஆர்ச் பிஷப் வின்சென்ட் மைக்கேல் கன்செசோ ஆகியோரை ரகசியமாக சந்தித்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுத்தார்.இதன் எதிரொலியாக, கூட்டப்புளி, இடிந்தகரை பாதிரியார்களை இடமாற்ற, மும்பை கார்டினல் உத்தரவிட்டார். ஆனால், கீழே உள்ள பாதிரியார்களால் அந்த உத்தரவு புறக்கணிக்கப் பட்டுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.போராட்டத்துக்கான செலவுகளை, ஒருங்கிணைப்பாளர் செய்து வருகிறார். மறைமுக சக்திகளிடம் இருந்து அவருக்கு பணம் வருவதாக கூறப்படுகிறது. இந்த போராட்டத்தை, ஊடகங்கள் மூலம், வெளி உலகிற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை, அதற்கான செலவை, அப்பகுதியைச் சேர்ந்த, கனிமவள அதிபர் ஒருவர் செய்து வருகிறார். கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால், அதைச் சுற்றி 15 கி.மீ., சுற்றளவுக்கு, கனிமங்கள் எடுப்பது பாதிக்கப்படும் என்பதே, அவரது ஆதரவுக்கு காரணம் என, கூறப்படுகிறது.

தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர், ஓட்டுக்களை மனதில் வைத்து, ஆரம்பத்தில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், முதல்வர் ஜெயலலிதா ஆதரவு நிலை எடுத்ததும், தொகுதி எம்.எல்.ஏ.,வைத் தவிர, அனைத்து அரசியல் பிரமுகர்களும், போராட்டத்தில் இருந்து ஒதுங்கி விட்டனர். தமிழக முதல்வரின் ஆதரவு நிலையால், கூடங்குளம் பாதுகாப்பில், மத்திய அரசு சில சிக்கல்களை சந்தித்து வருகிறது.

மத்திய அரசுக்கு தெரியும்:
இருந்தாலும், இந்த உண்மைகள் அனைத்தையும் மத்திய அரசு அறிந்துள்ளதால், அணுமின் நிலையத்தை துவக்குவதில் உறுதியாக உள்ளது. மாநில போலீஸ் ஒத்துழைக்காவிட்டால், மத்திய பாதுகாப்புடன், அணுமின் நிலையத்தை துவக்குவதில், மத்திய அரசு திடமாக உள்ளது.

15 October 2011

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்.

பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி,

* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.

* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.

* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.

* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.

* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.

இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.


தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.

மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.

12 October 2011

விண்ணில் பாய்ந்தது "பி.எஸ்.எல்.வி., சி1 ராக்கெட்


சென்னை:"பி.எஸ்.எல்.வி., சி18' ராக்கெட், "மெகா ட்ராபிக்ஸ்' உட்பட நான்கு செயற்கைக்கோள்களுடன், இன்று காலை 11 மணிக்கு, விண்ணில் ஏவப்பட்டது.இந்தியா - பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில், உலகின் வெப்ப மண்டல பகுதியில் நிலவும் வானிலை மற்றும் சீதோஷ்ண நிலையையும் அறிய, "மெகா ட்ராபிக்ஸ்' என்ற அதிநவீன செயற்கைக்கோளை, இஸ்ரோ தயாரித்துள்ளது.இந்த புதிய செயற்கைக்கோளுடன், இந்திய மாணவர்கள் தயாரித்த 2 ராக்கள்கள்"எஸ்.ஆர்.எம்., சாட், ஜுக்னு, வெசல் சாட்' உட்பட நான்கு செயற்கைக்கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) இருந்து, இன்று காலை 11 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டன.

சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான "மெகா ட்ராபிக்ஸ்' செயற்கைக்கோள், இந்தியாவின் பருவநிலை மற்றும் சூறாவளி, வெள்ளம், வறட்சி ஆகியவற்றை அறிய உதவும். இந்த நான்கு செயற்கைக்கோள்களையும்,"பி.எஸ்.எல்.வி., சி18' ராக்கெட் சுமந்து சென்றது."பி.எஸ்.எல்.வி., சி18' ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான, 50 மணி நேர, "கவுன்ட் டவுண்' திங்கள்கிழமை காலை 9 மணிக்கு துவங்கியது. இதையடுத்து, ராக்கெட்டில் திரவ எரிபொருள் நிரப்புவதில், இரண்டாவது கட்டப்பணி, ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான, நான்காவது கட்டப்பணி உட்பட, பல்வேறு பரிசோதனைப் பணிகள் நடந்து வந்தன.இதைதொடர்ந்து, ஏற்கனவே திட்டமிட்டபடி, இன்று காலை 11 மணிக்கு நான்கு செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி., சி18 ராக்கெட், விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்டதை தொடர்ந்து விஞ்ஞானிகள் மிகழ்ச்சி தெரிவித்தனர். இந்த ஆண்டில் இஸ்ரோ செலுத்தும் 4வது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 20வது முறையாக பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்டில் 2 இந்தியர்களுக்கு மரணத் தண்டனை.


துபாய்: 2 இந்தியர்களை கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து, துபாய் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு, ஐக்கிய அரபு எமிரேட்டில் வேலை செய்த 2 இந்தியர்கள் காணாமல் போயினர். போலீசாரின் விசாரணையில் அவர்களை 12 இந்தியர்கள், 1 பாகிஸ்தானியர் என மொத்தம் 13 பேர் சேர்ந்து கடத்தி சென்றது தெரிந்தது.

சட்ட விரோதமான வர்த்தகத்தில் ஏற்பட்ட மோதலில் பழிவாங்க கடத்தப்பட்ட அந்த 2 பேரையும், 13 பேர் கொண்ட கும்பல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. பின்னர் கும்பலை சேர்ந்த 5 பேர் 2 பேரையும் நிர்வணப்படுத்தி பாலியல் சித்திரவதையையும் செய்தனர். அதிலும் கோபம் அடங்காத அந்த கொடூர கும்பல் இறுதியில் அந்த 2 பேரையும் ஒரு குழியில் போட்டு தீயிட்டு எரித்து கொலை செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த துபாய் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில், 2 பேருக்கு தூக்கு தண்டனையும், மற்ற 2 பேருக்கு 15 ஆண்டு சிறைவாசமும், மீதமுள்ள 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்குள் இருந்ததாக, வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.

வாழ்வில் வெற்றி தரும் மந்திரப்புன்னகை.


ஒருவரின் தோற்றத்தை வசீகரமாக மாற்றக்கூடியது அவரது புன்னகையே. நம்மை சட்டென்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்சயமாக, சிரித்த முகத்துடன் இருப்பவர்கள்தான். அதனால் தானோ என்னவே புன்னகை இருக்க பொன் நகை எதற்கு என்று நம்முன்னோர்கள் கூறியுள்ளனர். புன்னகையின் மூலம் எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ளலாம்.

வசீகரிக்கும் தோற்றம்

சிரிப்பானது நமது பெர்சனாலிட்டியை உயர்த்துவதோடு பிறரிடம் உங்களை வசீகரமாகவும் காட்டும். சிரிப்பு என்பது வெறும் உதடுகளின் அசைவு மட்டுமல்ல, அது உறவின் வெளிப்பாடு. சிரித்த முகத்தை பார்க்கும் போது எத்தனையோ பிரச்சினைகளையும் மீறி ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகின்றது. எப்படிப்பட்ட நபரையும் ஹேண்டில் செய்வதற்கு ஏற்ற மந்திரம் புன்னகை மட்டுமே. வீடாக இருந்தாலும் சரி பணியிடமாக இருந்தாலும் சரி புன்னகை பூத்திடுங்கள். கடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக உங்கள் புன்னகை செயல்படும்.

உறவை வலுப்படுத்தும்

முசுடு உயரதிகாரியோ, அல்லது மூடியான கணவரோ எப்படிப்பட்டவராக இருந்தாலும் புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். சிரிப்பு வரவில்லை என்றாலும், நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள். உடனடியாக இல்லாவிட்டாலும் காலப்போக்கில் உங்கள் புன்னகை அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும். பிறகு பாருங்கள் அவர்கள் உங்களை நடத்தும் விதமே வேறுமாதிரியாக இருக்கும்.

இடத்திற்கேற்ப சிரியுங்கள்

உங்களின் இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம். என்றாலும், உங்கள் புன்னகையை தேவையற்ற இடங்களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோ காட்டினால், நீங்கள் தேவையில்லாத பிரச்னையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் சீப்பான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்வீர்களானால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள்; அப்படி மறந்தால், அனாவசிய வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் எனவே தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

03 October 2011

ബഹ്‌റൈന്‍ പാര്‍ലമെന്റില്‍ നാലു പെണ്ണുങ്ങള്‍.

മനാമ: ചരിത്രത്തിലാദ്യമായി ബഹ്‌റൈന്‍ പാര്‍ലമെന്റില്‍ നാലു വനിതാ പ്രതിനിധികള്‍. രണ്ടാം ഘട്ട തിരഞ്ഞെടുപ്പില്‍ രണ്ടു സ്ത്രീകള്‍ കൂടി ജയിച്ചതോടെയാണിത്.


കാപ്പിറ്റല്‍ ഗവര്‍ണറേറ്റിലെ മണ്ഡലം മൂന്നില്‍ ഇബ്തിസാം അബ്ദുറഹ്മാന്‍ ഹിജ്രിസ്, സെന്‍ട്രല്‍ ഗവര്‍ണറേറ്റിലെ മണ്ഡലം ഒന്നില്‍ ഡോ. സുമയ്യ അബ്ദുറഹ്മാന്‍ അലി ഇബ്രാഹിം അല്‍ജോവ്ദര്‍ എന്നിവരാണ് ജയിച്ചത്. തിരഞ്ഞെടുപ്പില്‍ മല്‍സരിച്ചു ജയിച്ച ആദ്യ ബഹ്‌റൈന്‍ വനിതകളാണ് ഇവര്‍.
നിലവിലുള്ള രണ്ട് വനിതാ എംപിമാരും എതിരില്ലാതെ തിരഞ്ഞെടുക്കപ്പെട്ടവരാണ്. സൂസന്‍ തഖ്വിയാണ് ഈ തിരഞ്ഞെടുപ്പില്‍ എതിരാളിയില്ലാതെ പാര്‍ലമെന്റിലെത്തിയത്. 2010ലെ തിരഞ്ഞെടുപ്പില്‍ എതിരില്ലാതെ തിരഞ്ഞെടുക്കപ്പെട്ട ലത്തീഫ അല്‍ഗൗഉദു മാത്രമായിരുന്നു ഇത്രയും കാലം സഭയിലെ സ്ത്രീ പ്രാതിനിധ്യം.


40 അംഗങ്ങളുള്ള ശൂറ കൗണ്‍സിലില്‍ 11 പേര്‍ സ്ത്രീകളാണ്. പക്ഷേ, അവരെ രാജാവ് നാമനിര്‍ദ്ദേശം ചെയ്തതാണ്. പ്രമുഖ കക്ഷികളൊന്നും സ്ഥാനാര്‍ത്ഥികളാക്കാതിരുന്നതുകൊണ്ട് പ്രതിനിധി സഭയിലേക്ക്‌ വനിതകളെല്ലാം തന്നെ സ്വതന്ത്രരായാണ് മല്‍സരിച്ചത്.