தஞ்சாவூர்: இந்திய விமானப்படைக்கான ஆட்சேர்ப்பு முகாம் தஞ்சை விமானப்படை நிலையத்தில் அக்டோபர் 18 முதல் 21ம் தேதி வரை நடக்கிறது என்று கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய விமானப்படைக்கு குருப் "ஒய்' தொழிற் பிரிவுகளுக்கான ஆட்சேர்ப்பு முகாம் அக்டோபர் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை தஞ்சை விமானப்படை நிலையத்தில் நடக்கிறது.
எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் பிளஸ் 2 வில் அறிவியல், கலை, வணிகவியல், பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள். அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் நிலையங்களில் ஏதாவது ஒரு பொறியியல் பிரிவில் மூன்று வருட டிப்ளமோ படிப்பில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பபெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள், தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த திருமணம் ஆகாத இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். அக்டோபர் 18ம் தேதி காலை 6 மணி முதல் 10 மணிக்குள் தேர்வு முகாமுக்குள் வந்து சேர வேண்டும். 18ம் தேதி எழுத்து தேர்வு, 19ம் தேதி நேர்முக தேர்வு, மருத்துவ பரிசோதனை நடக்கிறது. கல்வித் தகுதிக்கான அசல் மற்றும் நகல் சான்றுகள், பென்சில், ரப்பர், கருப்பு நீல நிற பேனா, இரண்டு வெள்ளை நிற கவர்கள், இருப்பிட சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஏழு, விளையாட்டு உடை போன்றவற்றை கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 044-22390581,22396585 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். விமானப்படை வீரர் தேர்வு தகுதி அடிப்படையில் மட்டுமே நடக்கிறது. ஏஜெண்டுகள் யாரையும் நம்ப வேண்டாம்.இவ்வாறு கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.