டெல்லி: மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாதிராயன கணக்கெடுப்பையும் சேர்க்க மத்திய அரசு ஒப்புக் கொண்டு விட்டது. இதையடுத்து அடுத்த ஆண்டு முதல் ஜாதிவாரியான கணக்கெடுப்பு தனியாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 09.09.2010 நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவின்படி ஜாதிவாரியான கணக்கெடுப்பு தனியாக நடத்தப்படும். வீடு வீடாக சென்று ஜாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்படும். அதேசமயம், ஜாதியைச் சொல்ல விரும்பாவிட்டால் அதை தாராளமாக செய்யலாம். ஜாதியைச் சொல்ல வேண்டும் என கணக்கெடுப்பாளர்கள் வற்புறுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment