லண்டன்: சூரிய சக்தியால் இயங்கும் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை வாங்குகிறது அமெரிக்க ராணுவம் . அமெரிக்காவுக்காக இதை தயாரித்துத் தருகிறது போயிங் நிறுவனம். இந்த விமானம் தொடர்ந்து 5 ஆண்டுகள் பறக்கக்கூடியதாகும்.
போயிங் நிறுவனம் தயாரிக்கும் இந்த விமானத்தின் பெயர் சோலார் ஈகிள்.
இது வின்னில் பற்நதவாறே கண்காணித்து புகைப்படங்களை அனுப்பும்.
இது தன் முதல் பயணத்தை 2014-ம் ஆண்டு தொடங்கும். சோலார் ஈகிள் மாதிரிக்காக அமெரிக்க ராணுவம் போயிங் நிறவனத்திற்கு 89 மில்லியன் டாலர்கள் கொடுத்துள்ளது.
இந்த மாதிரி விமானம் 30 நாட்கள் வின்னில் பறக்கும். பகலில் சூரிய ஒளியை எடுத்துக் கொண்டு அதை இரவு நேரத்திலும் பயன்படுத்திக்கொள்ளும்.
இந்த விமானத்தில் உயர் திறன் வாய்ந்த எலக்ட்ரிக் மோட்டார்கள், புரபெல்லர்கள இருக்கும்.