21 September 2010

துபாய் 5 ஸ்டார் ஹோட்டலில் வாழ்ந்த ஆசிய பிச்சைக்காரர்!!!

துபாய்: பிச்சை எடுத்தாலும் பெரிய இடத்தில் எடுக்க வேண்டும் என்பார்கள். அதை நிரூபித்துள்ளார் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒரு பிச்சைக்காரர்.

ஆசியாவைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் துபாயில் ஸ்டார் ஹோட்டலில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை துபாய் [^] சுற்றுலா பாதுகாப்புத் துறை தலைவர் [^]மேஜர் முஹம்மது ராஷித் அல் முஹைரி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

பிச்சை எடுத்ததற்காக கைதாகியுள்ள அந்த நபரின் பெயரையோ, அடையாளத்தையோ அவர் கூறவில்லை. இந்த பிச்சைக்காரரை ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேற்றியும் இந்தத் தொழிலில் கிடைக்கும் அதிக வருமானத்தால் ஈர்க்கப்பட்டு திரும்ப வந்திருக்கிறார் என்று அல் முஹைரி தெரிவித்ததாக கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி [^] வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு ரமலான் மாதத்திலும், ஈத் அன்றும் சுமார் 360 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிச்சை எடுத்ததற்காக கைதானவர்களில் பெரும்பாலானோர் ஆசியர்களும், அரபியர்களும் தான் என்று அவர் மேலும் தெரிவித்தார்