28 September 2010
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தடகள போட்டி : தொண்டி இளைஞர் சாதனை
22 September 2010
அமெரிக்கா வேண்டாம் ... இந்தியா போதும்-இது முதலீட்டாளர்களின் விருப்பம்
இதுகுறித்து ப்ளூம்பர்க் நிறுவனம் சர்வதேச அளவில் நடத்திய கருத்துக் கணிப்பில், 1408 முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் சீனா மற்றும் பிரேசில் நாடுகள் பொருளாதார வளர்ச்சியிலும், செய்யும் முதலீட்டுக்கு ஏற்ப வருவாய் அளிப்பதிலும் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளதாகக் கூறியுள்ளனர். இந்தியாவுக்கு மூன்றாம் இடத்தை அளித்துள்ள அவர்கள், அதற்கடுத்து நான்காம் இடத்தை அமெரிக்காவுக்கு அளித்துள்ளனர்.
"அமெரிக்க பொருளாதாரம் இன்னமும் நிலையற்ற தன்மையில்தான் உள்ளது. இங்கு முதலீட்டின் மதிப்புக்கேற்ப வருவாய் கிடைக்கும் நிலை இன்னும் உருவாகவில்லை" என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
முதலீட்டாளர்களின் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் விதத்தில், அமெரிக்காவின் மொத்த உற்பத்தி பின்னடைவைச் சந்தித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 5 சதவீதமாக இருந்த மொத்த உற்பத்தி வளர்ச்சி, இந்த நிதியாண்டில் 3 சதவீதத்தைத் தாண்டுமா என்பதே சந்தேகம்தான் என்கின்றனர் வல்லுநர்கள்.
"அமெரிக்க பொருளாதாரம் நிச்சயம் பழைய நிலைக்குத் திரும்பும். ஆனால் அது அடுத்த ஆறு மாதங்களிலோ ஒரு வருடத்திலோ நடக்கக் கூடிய அதிசயமல்ல...", என்று முதலீட்டாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 6-ல் ஒருவர் மட்டுமே அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்கால முதலீட்டை எந்த நாட்டில் செய்ய விருப்பம் என்ற கேள்விக்கு, சீனா, பிரேசில் அல்லது இந்தியா என்றே பதிலளித்துள்ளனர் பெரும்பாலான முதலீட்டாளர்கள்.
5 ஆண்டுகள் பறக்கும் ஆளில்லா சூரிய சக்தி உளவு விமானம் !!!
போயிங் நிறுவனம் தயாரிக்கும் இந்த விமானத்தின் பெயர் சோலார் ஈகிள்.
இது வின்னில் பற்நதவாறே கண்காணித்து புகைப்படங்களை அனுப்பும்.
இது தன் முதல் பயணத்தை 2014-ம் ஆண்டு தொடங்கும். சோலார் ஈகிள் மாதிரிக்காக அமெரிக்க ராணுவம் போயிங் நிறவனத்திற்கு 89 மில்லியன் டாலர்கள் கொடுத்துள்ளது.
இந்த மாதிரி விமானம் 30 நாட்கள் வின்னில் பறக்கும். பகலில் சூரிய ஒளியை எடுத்துக் கொண்டு அதை இரவு நேரத்திலும் பயன்படுத்திக்கொள்ளும்.
இந்த விமானத்தில் உயர் திறன் வாய்ந்த எலக்ட்ரிக் மோட்டார்கள், புரபெல்லர்கள இருக்கும்.
21 September 2010
செல்போன் தயாரிப்பில் பீடெல்
முதல்கட்டமாக 8 மாடல்களில் செல்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து மாடல்களுமே இரண்டு சிம்கள், எப்எம் மற்றும் கேமரா வசதி கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
சிலவகை மாடல்களில் மூன்று சிம்கள் பொருத்தும் வசதியும் உள்ளது. இவற்றில் இரண்டு ஜிஎஸ்எம் சிம்கள் மற்றும் ஒரு சிடிஎம்ஏ சிம்மை பொருத்திக் கொள்ள முடியும்.
ரூ 1750 லிருந்து ரூ 7000 வரை இந்த செல்போன்களின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் சுமார் 4000 கடைகளில் இந்த செல்போன்கள் விலைக்குக் கிடைக்கும் என பீடெல் நிறுவன சிஇஓ வினோத் சாவ்னி தெரிவித்தார்.
துபாய் 5 ஸ்டார் ஹோட்டலில் வாழ்ந்த ஆசிய பிச்சைக்காரர்!!!
ஆசியாவைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் துபாயில் ஸ்டார் ஹோட்டலில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை துபாய் சுற்றுலா பாதுகாப்புத் துறை தலைவர் மேஜர் முஹம்மது ராஷித் அல் முஹைரி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
பிச்சை எடுத்ததற்காக கைதாகியுள்ள அந்த நபரின் பெயரையோ, அடையாளத்தையோ அவர் கூறவில்லை. இந்த பிச்சைக்காரரை ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேற்றியும் இந்தத் தொழிலில் கிடைக்கும் அதிக வருமானத்தால் ஈர்க்கப்பட்டு திரும்ப வந்திருக்கிறார் என்று அல் முஹைரி தெரிவித்ததாக கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு ரமலான் மாதத்திலும், ஈத் அன்றும் சுமார் 360 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிச்சை எடுத்ததற்காக கைதானவர்களில் பெரும்பாலானோர் ஆசியர்களும், அரபியர்களும் தான் என்று அவர் மேலும் தெரிவித்தார்
இந்திய மாணவர்களை விட நன்றாகப் படிக்க வேண்டும்: ஒபாமா
அமெரிக்க அதிபர் ஒபாமா பென்சில்வேனியா மாநிலம் பிலடெல்பியாவில் உள்ள ஒரு பள்ளிக்கூட மாணவர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
உலக நாடுகள் அனைத்தும் முன்பை விட தற்போதுஅமெரிக்கா வுடன் அதிகமாக போட்டி போடுகின்றன. வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவிலும், சீனாவிலும் உள்ள மாணவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருக்கின்றனர்.
இந்த சவால்களை எதிர்கொள்ள அமெரிக்க மாணவர்களும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்க பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து ஏராளமான தொழில் துறை அறிஞர்களை உருவாக்க வேண்டும். அப்பொழுது தான் உலக அரங்கில் அமெரிக்கா தலை நிமிர்ந்து நிற்க முடியும்.
பள்ளிகளில் எவ்வளவு தூரம் முன்னேறுகிறீர்களோ, அந்த அளவு வாழ்க்கையிலும் முன்னேறுவீர்கள். பள்ளியில் பெறும் வெற்றி மாணவர்களின் வாழ்க்கையில் பெறப்போகும் வெற்றியை மட்டும் தீர்மானிப்பதன்று. அது தான் அமெரிக்காவின் வெற்றியையும் தீர்மானிக்கும். எனவே, நீங்கள் முன்பை விட நன்றாகப் படித்து வெற்றி பெற வேண்டும் என்று அவர் கூறினார்
அமெரிக்காவில் 7ல் ஒருவர், வறுமையில் வாடும் அவலம்!
கடந்த 2008-ம் ஆண்டு கணக்கெடுப்பில், 13.2 சதவீதம் பேர், அதாவது, 3 கோடியே 98 லட்சம்பேர் வறுமையில் வாழ்ந்து வருவது தெரிய வந்தது.
ஆனால், தற்போதைய கணக்கெடுப்பில், இந்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சமாக (14.3 சதவீதம்) உயர்ந்துள்ளது. இதன்மூலம், அமெரிக்க மக்கள் தொகையில், 7 பேரில் ஒருவர் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது. முன்பெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமே பிச்சைக்காரர்கள் அதிகம் காணப்பட்டதாகவும், இப்போது சிறு நகரங்களிலும் பிச்சைக்காரர்கள் பெருகி விட்டதாகவும் அக்கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே அமெரிக்க எம்.பி.க்கள் வாங்குவதை கட்டாயம் ஆக்கும் 2 மசோதாக்கள், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டன
நோக்கியாவின் 2 சிம் கார்டு செல்போன்!
இப்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான சீன மற்றும் கொரிய தயாரிப்பு செல்போன்களில் இரண்டு மற்றும் மூன்று சிம்கார்டுகள் பயன்படுத்தும் வசதி உள்ளது. இதற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து மற்ற பிராண்டட் மொபைல் போன்களிலும் இந்த வசதியை நிறுவனங்கள் செய்து வருகின்றன.
அந்த வகையில் ஏற்கெனவே சாம்சங், எல்ஜி போன்ற நிறுவ2 சிம் கார்டு பயன்படுத்தும் வசதியுள்ள செல்போன்களை அறிமுகம் செய்துள்ளன.
இப்போது நோக்கியாவும் இரட்டை சிம் செல்போன்களை களமிறக்கியுள்ளது.
இது குறித்து நோக்கியா நிறுவன (இந்தியா) விற்பனை இயக்குனர் விபுல் சபர்வால் நேற்று சென்னை யில் நிருபர்களிடம் கூறியதாவது:
"2 சிம் கார்டுகளை பயன்படுத்தும் வசதி கொண்ட செல்போன்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் பலர் விருப்பம் தெரிவித்தனர். அவ்வாறு 2 சிம் கார்டுகளை ஒரே செல்போனில் பயன்படுத்துவதால் அதை பயன்படுத்துபவர்களுக்கு நேரம், செலவு, திறன் மேம்பாடு ஆகிய வசதிகள் கிடைக்கிறது என்பதை அறிவோம். அதன் காரணமாக நோக்கியா நிறுவனம் 2 சிம் கார்டு போடும் வசதி கொண்ட 'சி1-00' என்ற செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய செல்போன் அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலைக்கு விற்கப்பட உள்ளது. அதன் விலை ரூ.1999 மட்டுமே. ஒரு கீயை அழுத்துவதன் மூலம் 2 சிம் கார்டிலும் மாறி மாறி பேசலாம். எந்த அழைப்பையும் தவறவிடாமல் பேசலாம். அழைப்பு மாற்றம் வசதி மூலம் அனைவரும் பயன் அடைகிறார்கள்.
நாட்டில் மின் வசதி இல்லாத கிராமங்களில் அல்லது மின்சார தடை ஏற்படும்போது இந்த செல்போனில் உள்ள ஃபிளாஷ் பகுதி லைட் டார்ச் லைட் போல பயன்படும். மேலும் இந்த செல்போனில் வண்ணத்திரை உள்ளது. மேலும் எம்.எம்.ரேடியோ கேட்கலாம். ஹெட்போன் ஜாக் உள்ளது. இத்தனை வசதி கொண்ட செல்போனாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மார்க்கெட்டில் எல்லா இடங்களிலும் அடுத்த மாத தொடக்கத்தில் கிடைக்கும்..." என்றார்.
20000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்!
இன்றைய வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில்மும்பை பங்குச் சந்தை 135 புள்ளிகள் உயர்ந்து 20041.52 ஆக நின்றது. அப்போது முதலீட்டாளர்களும் புரோக்கர்களும் மகிழ்ச்சியில் கைதட்டி மகிழந்தனர். மும்பை பங்குச் சந்தை கட்டடத்துக்கு வெளியில் நின்றிருந்த முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் கை குலுக்கிக் கொண்டனர்.
சென்செக்ஸில்அனைத்துத் துறைப் பங்குகளும் இன்று 1.30 சதவீத வளர்ச்சியைக் கண்டன.
நாடு தழுவிய பங்குச் சந்தையான நிப்டியும் இன்று 6000 புள்ளிகளைக் கடந்தது. இன்று மட்டும் 36.40 புள்ளிகள் உயர்வு கண்டது நிப்டி.
32 மாதங்களுக்குப் பிறகு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் இந்த உயர்வைக் கண்டுள்ளன
ஜூபிடர், யுரேனஸ் 21.09.2010 அதிகம் பிரகாசிக்கும்
அதேபோல யுரேனஸும் பூமிக்கு வெகு அருகில் வந்துள்ளது. இரண்டையும் மிகப் பிரகாசமான தோற்றத்தில் இன்று இரவு பார்க்க முடியும்.
வானுலக அதிசயம் குறித்த ஆர்வலர்களுக்கு இன்று இரவு இரட்டை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த 2 கிரகங்களும் டிஸ்க் வடிவத்தில் பிரகாசமாக காணப்படுவதை அவர்கள் கண்டு களிக்கலாம்.
இது குறித்து சயின்ஸ் பாபுலரய்சேஷன் அசோசியேஷன் ஆப் கம்யூனிகேட்டர்ஸ் அன்ட் எஜுகேடர்ஸ் அமைப்பின் சந்திரபூஷன் தேவ்கன் கூறியதாவது,
சூரியன் மறைந்த பிறகு கிரகங்களிலேயே மிகப் பெரிய கிரகமான ஜூபிடர் வடக்கில் மிகவும் பிரகாசமாகத் தெரியும்.
பைனாகுலர் அல்லது தொலைநோக்கி மூலம் நன்றாகப் பார்க்கலாம். வெறும் கண்ணாலும் பார்க்கலாம். இன்று பார்க்க மறந்து விட்டால் வருத்தப்பட வேண்டாம். அது இன்னும் சில மாதங்களுக்கு காணப்படும் என்று அவர் கூறினார்
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து கை, கால் இழந்தவர் சாதனை!!!
பிலிப் குரோய்சனுக்கு தற்போது வயது 42. கடந்த 1994-ம் ஆண்டு ஏணியில் ஏறி டிவி ஆன்டனாவை சரி செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பிலிப் தனது 2 கைகளையும், கால்களையும் இழந்தார்.
கை, கால்களை இழந்தாலும் அவர் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. வாழ்வில் தன்னால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று நம்பினார். இதையடுத்து தனக்குப் பிடித்த நீச்சலில் உலக சாதனை படைக்க எண்ணி அதற்கான பயிற்சி மேற்கொண்டார்.
இங்கிலாந்தின் போக்ஸ்டோனில் இருந்து புறப்பட்டு பிரான்ஸில் உள்ள விசான்ட் நகரை ஆங்கிலக் கால்வாய் வழியாக நீந்தி வந்தடைந்தார். இவர் 34 கி.மீ தூரத்தை நீந்திக் கடந்துள்ளார்.
இந்த தூரத்தை 24 மணி நேரத்தில் கடக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அவர் 13 மணி நேரத்திலேயே கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
தன்னம்பிக்கையை துடுப்பாகப் பயன்படுத்தி ஆங்கிலக் கால்வாயை இவர் நீந்திக் கடந்துள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
14 September 2010
இனி வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லவேண்டாம் வீட்டில் இருந்தே கம்ப்யூட்டரில் பதிவு செய்யலாம்
தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்கள், "கம்ப்யூட்டர் நெட் ஒர்க்' மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், செப்., 15ம் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே கல்வித் தகுதியை பதிவு செய்யும் வசதி துவங்குகிறது. துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் இதை துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், 4 சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இவற்றில் 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிந்ததும் 10, பிளஸ்2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய ஏராளமானோர் இந்த அலுவலகங்களை முற்றுகையிடுகின்றனர்.
இவர்கள் தவிர பட்டதாரிகள், பி.எட்., உட்பட தொழிற்கல்வி முடித்தோரும் பல ஆயிரம் பேர் வருகின்றனர். இதனால் எந்நேரமும் கூட்டம் அலைமோதுகிறது. பதிவு, புதுப்பித்தல் போன்றவையே பிரதான பணியாக இங்கு உள்ளது. இப்பணியை எளிமைப்படுத்த தற்போது அனைத்து மாவட்ட அலுவலகங்களும் கம்ப்யூட்டர் நெட்ஒர்க்கில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக 5 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்தது. இதையொட்டி அனைத்து அலுவலகங்களிலும் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது இப்பணிகள் முடிவடைந்து, ஆன்லைனில் பதிவு செய்யும் வகையில் தயார் நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன. இப்புதிய வசதியை நாளை (செப். 15) காலை 11 மணிக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைக்கிறார்.
இவ்வசதி மூலம் இனி கல்வித் தகுதியை, அவரவர் வீட்டில் இருந்தபடியே "ஆன்லைனில்' பதிவு செய்யலாம். அதற்கான இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கமிஷனர் ஜீவரத்தினம் கூறியதாவது: புதிய வசதி மூலம் மாணவர்கள் சிரமமின்றி கல்வித் தகுதியை பதிவு செய்யலாம். கம்ப்யூட்டரில் அதற்காக விண்ணப்பிக்கும்போது, சான்றிதழ்களையும் "ஸ்கேன்' செய்து அனுப்ப வேண்டும். அப்போது மாணவர்களுக்கு உடனே தற்காலிக எண் தரப்படும். மாணவர்களின் தகுதி ஏற்றுக் கொள்ளப்பட்டதும், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள எண் (ஐ.டி. எண்) வழங்கப்படும். நேரடியாக அலுவலகத்திற்கு வந்தும் பதிவு செய்யலாம். இதனால் இனி பதிவுமூப்பு பிரச்னையோ, பதிவு எண்ணில் குழப்பமோ, தவறோ வரவாய்ப்பில்லை,'' என்றார்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் 'பேசிக்கொண்டே இருக்கலாம்'!
இந்தத் திட்டம் கோவை மாவட்டம் அவினாசியில் வரும் 18-ந் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் திமுக அரசு ஏராளமான இலவசத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்தப் பாணியை இப்போது மத்திய அரசு ம் பின்பற்றத் துவங்கியுள்ளது. சமீபத்தில் கூட தமிழக அரசின் இலவச எரிவாயு - அடுப்புத் திட்டத்தை நாடு முழுக்க அமலாக்கப் போவதாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் பேரில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை மக்களுக்கு இலவசமாக செல்போனும், பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பும் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தில், வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு, எல்.ஜி. செல்போனும், அதற்கான பிரி-பெய்டு இணைப்புக்கான 'சிம்' கார்டும் இலவசமாக வழங்கப்படும். வாழ்நாள் முழுவதும், வெளியில் இருந்து வரக்கூடிய அழைப்புடன் பேசிக்கொண்டே இருக்கலாம்.
இந்தத் திட்டத்தை, ராஜஸ்தான் மாநிலம் பாகியில், கடந்த 9-ந் தேதி பி.எஸ்.என்.எல். தலைவர் கோபால்தாஸ் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் திருப்பூர் மாவட்டம், அவினாசியில், 18-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. அவினாசி, பாலங்கரையில் உள்ள 'இந்தியா நிட்பேர் வளாக'த்தில் இதற்கான விழா நடக்கிறது.
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
அதிகாரிகள் அதிருப்தி...
ஆனால் இந்தத் திட்டத்துக்கு பிஎஸ்என்எல் அதிகாரிகள் மட்டத்தில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.
"ஏழை மக்களுக்கான இது போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் இலவச செல்போனுடன் மொபைல் இணைப்பு தரப்படும் என்பது தெரியவில்லை. இந்த மாதிரி திட்டத்தில், தனியார் தொலைபேசி நிறுவனங்களையும் இணைத்திருக்க வேண்டும். லாபம் தரும் திட்டங்களை தனியாருக்கு தாரைவார்த்து விட்டு, சுமையை மட்டும் பொதுத்துறை ஏற்பது எந்த வகையில் நியாயமாகும்?
ஸ்பெக்ட்ரம் கட்டணம், லைசென்ஸ் கட்டணம் என்று அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டணங்களை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் கறாராக கேட்டு வாங்குகிறார்கள். தனியாரிடம் கடுமையாக கேட்கும் பட்சத்தில் அவர்கள் கோர்ட்டுக்கு போய்விடுகிறார்கள். அரசு இதையும் பரிசீலிக்க வேண்டும்.." என்கிறார்கள்.
13 September 2010
24ம் தேதி பதற்றத்துடன் எதிர்பார்க்கப்படும் அயோத்தி தீர்ப்பு!
09 September 2010
ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 09.09.2010 நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவின்படி ஜாதிவாரியான கணக்கெடுப்பு தனியாக நடத்தப்படும். வீடு வீடாக சென்று ஜாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்படும். அதேசமயம், ஜாதியைச் சொல்ல விரும்பாவிட்டால் அதை தாராளமாக செய்யலாம். ஜாதியைச் சொல்ல வேண்டும் என கணக்கெடுப்பாளர்கள் வற்புறுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் 'நான்ஸ்டிக்'
உரித்தெடுத்த பலாச் சுளையைப் போன்றது தான் இஸ்லாம்: கருணாநிதி
06 September 2010
மணமகளை ரூ.30,000க்கு ஏலத்தில் எடுத்த மணமகன்!!!!
நரிக்குறவர் சமூகத்தினர் ஆம்பூரை அடுத்த சோளூரில் முகாமிட்டுள்ளனர். இங்கு வசிக்கும் டாலர்மணி என்பவரது மகள் ரூபினி (14). இவர் தன் குலத் தொழிலான பாசிமணியை விற்பவர்.
பள்ளிகொண்டா சந்தையில் பாசிமணி விற்றுக் கொண்டிருக்கையில் அங்கு தன்னைப் போன்று பாசிமணி விற்ற நரிக்குறவர் வந்தராஜா என்பவரின் மகன் திருமலையின்(15) மேல் காதல் வயப்பட்டார் ரூபினி.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். இனம் ஒன்றாக இருந்ததால் தடை ஏற்படவில்லை. ரூபினியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு திருமலை டாலர்மணியிடம் முறைப்படி பெண் கேட்டார். அவரும் இவர்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார்.
இனி என்ன திருமணம் தான் என்று நினைத்தால் அது தவறு. ஏனென்றால், நரிக்குறவர் இனத்தில் திருமணம் முடிக்க வேண்டுமென்றால் மணமகன் தான் விரும்பும் பெண்ணை ஏலத்தில் எடுக்க வேண்டும். திருமலை தன் காதலியை ரூ. 30,000 கொடுத்து ஏலத்தில் எடுத்தார்.
இதையடுத்து இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி உற்றார் உறவினர் புடைசூழ நடந்தது. இன்று இவர்கள் திருமண பந்தத்தில் இணையவிருக்கின்றனர். மாப்பிள்ளை தாலி கட்டினால் மட்டும் போதாது. திருமண வைபவத்திற்கு வரும் அனைத்து பந்துக்களுக்கும் வயிறார விருந்து, மதுபானம், ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 100 கொடுக்க வேண்டுமாம்.
சுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்!
யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்கிவிடுகிறான். (முஸ்லிம்)
“எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்) விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள். (புகாரி)
ஒரு முஸ்லிம் நோயுற்ற முஸ்லிமை விசாரிக்கக் காலையில் சென்றால் அவருக்காக ஏழாயிரம் வானவர்கள் மாலை வரை அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள். அவ்வாறே மாலையில் நோய்விசாரிக்கச் சென்றால் மறுநாள் காலை வரை ஏழாயிரம் வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அவருக்கு சுவனத்தில் ஒரு தோட்டம் இருக்கும். (திர்மிதீ)
‘எவர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி கூறுவாரோ அவருக்கு நரகம் ஹராமாக்கப்பட்டு விடும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
மக்களை சுவனத்தில் சேர்ப்பதில் அதிகக் காரணமாக விளங்குவது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது ‘இறையச்சமும் நற்குணமும் தான்’ எனக் கூறினார்கள்’ (திர்மிதீ)
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.(புகாரி)
யார் கோபத்தை வெளிப்படுத்தும் சக்தியுள்ள நிலையில் அதை அடக்குகின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் மத்தியில் அழைத்து ஹூருல் ஈன்களில் – சுவர்க்கத்து கண்ணழகிகளில் தாம் விரும்பியவரை அனுபவித்துக்கொள்ளக்கூடிய உரிமையை வழங்குவான் (திர்மிதீ)
‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து (அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)
“எவர் தன் நாவையும், மருமஸ்தானத்தையும் பாதுகாப்பதாக எனக்கு வாக்களிக்கின்றாரோ அவருக்கு நான் சுவனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
“நானும் அனாதைக்கு அபயமளிப்பவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம் என நபிகள் (ஸல்) அவர்கள் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்” (புகாரி)
எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒருஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.
ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பவத்திற்குப் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. (முஸ்லிம்)
“ஒரு நாளைக்கு 12 ரக்அத்துகள் நஃபிலாக (உபரியாக) யார் தொழுது வருகிறாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்”
01 September 2010
உலகெங்குக்குமான அவசர உதவி எண்
நாம் நமது தமிழ்நாட்டில் உள்ள அவசர உதவி எண்களை நாம் எப்படியாவது தெரிந்து வைத்துகொள்ளலாம் ஒரு வேளை நீங்கள் வேறு ஒரு மாநிலம் அல்லது வேறு நாட்டிற்கு சென்றிருக்கிறீர்கள் அங்கு உங்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது அப்போது உங்களுக்கு அவசர உதவி எண் இருந்தால் எளிதாக தொடர்பு கொள்ளலாமே அதை தெரியப்படுத்த தான் இந்த பதிவு.
உங்கள் அலைபேசியில் 911 என்கிற இந்த மூன்று இலக்க அவசர அழைப்பு எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், இந்த எண் எப்படி எல்லா நாட்டிற்கும் பொருந்தும் என நினைக்கிறீர்களா ஒவ்வொரு நாட்டிற்குமான தொலை தொடர்பு சேவையில் இந்த 911 என்கிற அவசர அழைப்பு எண் இருக்கும் நீங்கள் அலைபேசி சேவையை உபயோகிப்பவர்களாக இருந்தாலும் இந்த எண் அழைப்பதற்கு தடையில்லை.
நீங்கள் 911 அழைக்கும் போது அதுவாகவே உங்களுக்கு அருகில் உள்ள உதவிக்கான மையத்தை சென்றடையும் பின்னர் அதன் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்க்கூடும் மேலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களால் அழைப்பு ஏற்படுத்தி பேசி உதவி கேட்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம்911 என்கிற எண்ணிற்கு அழைப்பு ஏற்படுத்தி விட்டீர்கள் என்றால் அவர்களாகவே உங்கள் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
மேலும் ஒரு சின்ன தகவல் உங்கள் அலைபேசி நம்பர்பேட் (Keypad) பூட்டு (Lock) இடப்பட்டிருந்தாலும் இந்த 911 என்கிற எண் மட்டும் டயல் செய்ய இயலும் வேறு எந்தவொரு எண்ணும் இது போல டயல் செய்ய முடியாது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் இந்த எண்ணின் அவசியம், நண்பர்களே குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு இது பயன்படக்கூடும், இது உங்களுக்கு புதியதாக அல்லது உபயோகமானதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்.