21 July 2011

மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்.


Vijaykanthமக்கள், தங்களது பிரச்சினை தொடர்பாக தேமுதிக சட்ட மன்ற உறுப்பினர்களை எந்த நேரத்திலும் மக்கள் தொடர்பு கொள்ள வசதியாக சட்ட மன்ற உறுப்பினர்களின் இ - மெயில் முகவரியை தேமுதிக வெளியிட்டுள்ளது.

நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் அதிமுக -வுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. இதில் 29 இடங்களில் தேமுதிக வெற்றி பெற்றது.

தொகுதியில் உள்ள பிரச்சனைகளை, சட்ட மன்ற உறுப்பினரிடம் எடுத்துக் கூற அவர்களை தேடி அலைய வேண்டாம் என்றும், எந்த நேரத்திலும் மக்கள் பிரச்சனையை தேமுதிக சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு இ - மெயில் மூலம் அனுப்பிவைத்தால் அதை படித்துப் பார்த்து பிரச்சனையை தீர்க்க உதவ வசதியாக இருக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, தேமுதிகவின் அதிகாரபூர்வ வெப்சைட்டான http://www.dmdkparty.com - ல் தங்களது கட்சியின் 29 சட்ட மன்ற உறுப்பினர்களின்
 இ - மெயில் முகவரியை வெளியிட்டுள்ளார்.

http://www.dmdkparty.com/dmdk/?page_id=65

இதில் தேமுதிக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் முகவரியும் அடக்கமாகும்.


பின்பு என்ன, தொகுதி வாசிகளே உங்கள் பகுதி பிரச்சனையை ஆதராத்துடன் அனுப்பி வையுங்கள். நல்ல தீர்வு கிடைக்கட்டும்.

No comments: