ஜூபா: 50 ஆண்டு கால ரத்தம் சிந்தியப் போராட்டத்தின் விளைவாக பிறந்த தெற்கு சூடான் இன்று தனி நாடாக உதயமானது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் நாடுதான் சூடான். கடந்த ஐம்பது ஆண்டுகளாக இங்கு கிறிஸ்தவ சூடானியர்களுக்கும், முஸ்லீம் சூடானியர்களுக்கும் இடையே கடும் உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. இந்த ரத்தம் சிந்திய போராட்டத்தில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தெற்கு மற்றும் வடக்கு சூடான் பிராந்தி மக்களுக்கிடையே ஒத்துப் போகாது என்று ஐ.நா. உணர்ந்து, இரு நாடுகளும் பிரியலாமா என்பது குறித்து சூடானில் வாக்கெடுப்பு நடத்தியது. 2011ம் ஆண்டு 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தெற்கு சூடான் தனி நாடாக ஆதரவு, இல்லை என்று கேட்கப்பட்டிருந்தது. இதன் முடிவுகள் ஜனவரி 30ம் தேதி வெளியானது. அதில் 98.83 சதவீதம் பேர் தெற்கு சூடான் தனி நாடாக உருவெடுக்க ஆதரவு கொடுத்தனர்.
இதையடுத்து இரு நாடுகளாக சூடான் பிரிக்கப்படும் என்று ஐ.நா. அறிவித்தது. ஜூலை 9ம் தேதி தெற்கு சூடான் விடுதலையாகி புதிய நாடாக மலரும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று தெற்கு சூடான் நாடு உதயமாகியுள்ளது.
தெற்கு சூடான் நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு 12.01 மணிக்கு தெற்கு சூடான் சுதந்திரமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய அ
இதையொட்டி தெற்கு சூடானின் தலைநகரான ஜூபா விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. நாட்டின் முதல் அதிபராக சல்வா கிர் மயார்டிட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈழம் என்று மலரும்?
தெற்கு சூடான் இன்று புதிய நாடாக மலருவதை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பெரும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். காரணம், ஈழமும் ஒரு நாள் இது போல தனி நாடாக மலராதா என்ற ஏக்கத்தில்.
No comments:
Post a Comment