22 December 2012

2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

சென்னை: எந்த ஒரு ஆண்டுமே இல்லாத அளவுக்கு உலகமே அழியப் போகிறது என்கிற பெரும் பீதியை எதிர்கொண்டது இந்த 2012 ஆம் ஆண்டுதான்! இந்த 2012-ம் ஆண்டு உலக அளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் என்ன என்ற ஒரு பட்டியலை பார்க்கலாம்..

ஜனவரி 10: அணு ஆயுதத் தயாரிப்பு விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன.


பிப்ரவரி 1: எகிப்தின் போர்ட் செய்த் மைதானத்தில் கால்பந்து ரசிகர்களிடையேயான மோதலில் 79 பேர் பலியாகினர். 1000க்கும் மேற்ப்ட்டோர் படுகாயமடைந்தனர்.

பிப்ரவரி 2: உறைபனிக்கு ஐரோப்பாவில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.


பிப்ரவரி 2: நியூகினியா நாட்டு படகு விபத்தில் 250 பேர் பலியாகினர்.

பிப்ரவரி 6: இங்கிலாந்து அரசியாக எலிசெபத் முடிசூட்டியதன் வைர விழா நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.


பிப்ரவரி 15: ஹோண்டுராஸ் நாட்டு சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 360 கைதிகள் பலியாகினர்.

பிப்ரவரி 27: தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகி புதிய அதிபர் பதவியேற்றார்.

மார்ச் 13 : பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா 244 ஆண்டுகளுக்குப் பிறகு தமது அச்சுப் பதிப்பை நிறுத்துவதாக அறிவித்தது.

ஏப்ரல் 15: பாகிஸ்தான் சிறை மீது தாக்குதல் நடத்தி 400க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தப்பி ஓடினர்.


ஏப்ரல் 20: பாகிஸ்தான் விமான விபத்தில் 127 பேர் பலியாகினர்.

ஏப்ரல் 26: சியரலியோன் உள்நாட்டுப் போரில் போர்க் குற்றம் புரிந்ததாக லைபீரிய முன்னாள் அதிபர் டெய்லர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டது.


மே 5: ஜப்பானின் கடைசி அணு உலையும் மூடப்பட்டது.


மே 7: ரஷியாவின் அதிபராக 3-வது முறையாக பதவி ஏற்றார் புதின்.

ஜூன் 6 - நூற்றாண்டில் இரண்டாவது முறையாகவும் கடைசி முறையாகவும் "வீனஸ்" சூரியனை கடந்து சென்றது.

ஜூன்21: புகலிடம் கோரி சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா சென்றோரின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கினர்.

ஜூன் 30: எகிப்து அதிபராக மூர்சி பதவியேற்றார்.

ஜூலை 27 : லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின.

ஆகஸ்ட் 1 : செவ்வாயில் வெற்றிகரமாக தரை இறங்கியது ரோவர் விண்கலம்.

ஆகஸ்ட் 11: ஈரானில் இரட்டை நிலநடுக்கத்தில் 153 பேர் பலியாகினர்.

ஆகஸ்ட் 26 - நிலவில் கால் பதித்த முதல் மனிதனரான நீல் ஆம்ஸ்ட்ராங் காலமானார்.

செப்டம்பர் 7: சிரியாவுக்கு ஆதரவு கொடுத்ததற்காக ஈரானுடனான உறவுகளை கனடா துண்டித்துக் கொண்டது.

செப்டம்பர் 11: பாகிஸ்தானின் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 315 பேர் பலியாகினர்.

செப்டம்ப்ர் 17: தியான்யூ தீவு விவகாரத்தில் ஆயிரம் படகுகளை ஜப்பானுக்கு எதிராக அனுப்பி வைத்ததுசீனா.


அக்டோபர் 15: ஜப்பான் அருகே போர்க் கப்பல்களை நிறுத்தியது சீனா.

அக்டோபர்22-30 : அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளை கடுமையாகத் தாக்கியது சாண்டி புயல். இப்புயலுக்கு 209 பேர் பலியாகினர்.

நவம்பர் 5: அமெரிக்காவின் அதிபராக 2-வது முறையாக வெற்றி பெற்றார் ஒபாமா

நவம்பர் 14-21: பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் பெருந்தாக்குதலை நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 140 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.

நவம்பர் 29: பாலஸ்தீனத்தை 'பார்வையாளர் நாடு' என்ற தகுதியுடன் அங்கீகரித்தது ஐ.நா. சபை.

டிசம்பர் 5: பிலிப்பைன்ஸை தாக்கியது போபா புயல். இப்புயலில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

டிசம்பர் 13: அமெரிக்காவின் பள்ளி ஒன்றில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பள்ளிக்குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகினர்.

டிசம்பர் 21: மாயன் காலண்டரால் உலகம் அழியப் போகிறது என்ற பீதி உலகையே ஆட்டுவித்தது.ஆனால் அறிவியல் உலகம் கூறியது போல அப்படி ஒன்றும் உலகம் அழியவில்லை.

No comments: