தற்போது வெளி வர இருப்பது 2ஜி அல்ல. 3ஜி ஊழல். இந்த 3ஜி ஊழலில் சம்பந்தப் பட்டிருப்பது, மிகச் சிறந்த நெடுந்தொடர் நாயகியும், கருணாநிதியின் மற்றொரு மகளுமான செல்வி. இந்தச் செல்விதான் கருணாநிதி குடும்பத்திலேயே மோசமான நபர். ஒரு நபர், கருணாநிதிக்கும் நண்பராக, மாறன் சகோதரர்களுக்கும் நண்பராக எப்படி இருக்க முடியும் ? ஆனால் செல்வியால் முடியும். மாறன் சகோதரர்களுக்காக செல்வி அழுது ஆர்ப்பாட்டம் செய்வதை நேரில் பார்த்திருந்தால், பல நெடுந்தொடர்களின் நடித்திருக்கும் தேவயானி கூட, ‘இவரின் நடிப்புக்கு முன், நாம் வேஸ்ட்’ என்று நடிப்பதையே விட்டிருப்பார். அப்படிப்பட்ட ஒரு கைதேர்ந்த நடிகை தான் செல்வி.
3ஜி ஏலம் நடந்து முடிந்து இன்று ஐடியா, ஏர்டெல், வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் 3ஜி சேவைகளை வழங்குவதாக அறிவித்து வருகின்றன. 3ஜி என்றால் என்ன ? 3ஜி என்றால் வீடியோ அழைப்புகள், வீடியோ ஸ்ட்ரீமிங், லைவ் டிவி போன்ற, அதி நவீன வசதிகளை வழங்குவதே 3ஜி சேவை. ஆனால், இப்போது எந்த நிறுவனமாவது, வீடியோ அழைப்புகளைத் தருகின்றதா ? பிறகு எதற்காக இந்த 3ஜி. இன்டெர்நெட், மெயில் போன்ற வசதிகளை நாம் 2ஜியிலேயே பார்க்க முடியுமே… பிறகு எதற்கு 3ஜி…. ?
உண்மையான 3ஜி சேவைகள் வழங்கப் படாததற்கு காரணம், அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமையே..
2008ல் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, பிஎஸ்என்எல் நிறுவனம், 2ஜி மற்றும் 3ஜிக்கான உள் கட்டமைப்பு வசதிகளைச் (டவர்கள் நிறுவுதல், பராமரித்தல், டீசல் ஜெனரேட்டர்களை நிறுவுதல், குளிர்சாதன வசதிகளைச் செய்தல்) செய்வதற்கான டெண்டர் அழைப்பு விடுக்கிறது.
இந்த நேரத்தில்தான், செல்வி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கனிமொழி உள்ளிட்ட அனைவரும் நிறைய சம்பாதித்து விட்டார்கள் என்றும், தான் பெங்களுரில் உள்ளதால், தனக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்றும் புலம்பியதாகத் தெரிகிறது. இதையடுத்து கருணாநிதி, ராசாவிடம் இது குறித்து பேசியதாகவும் தெரிகிறது.
செல்விக்கு பணம் சம்பாதித்துக் கொடுப்பதற்காகவே இரண்டு நிறுவனங்கள் களத்தில் குதிக்கிறன. ஒன்று, பி.ஆர்.சாப்ட் டெக் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட். இதன் பதிவு செய்யப் பட்ட அலுவலகம் சென்னை, அண்ணா நகர் கிழக்கு, ஓ ப்ளாக், கணபதி காலனி, 30வது தெரு, எண் 6. இந்தக் கம்பெனியின் மொத்த முதலீடு வெறும் 10 லட்ச ரூபாய் தான். சிம்பிளாகச் சொன்னால் இது ஒரு லெட்டர் பேட் கம்பேனி. இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் எம்.கே.பாஸ்கர் மற்றும் வி.ராம்குமார் ஆகியோர். பாஸ்கருக்கு 9000 ஷேர்களும், ராம் குமாருக்கு 1000 ஷேர்களும் இருக்கின்றன. இந்த நிறுவனம் தொடங்கப் படுகையில் தனது பிரதான தொழிலாக மென்பொருட்களை தயாரிப்பது, இணையதள வடிவமைப்பு என குறிப்பிட்டுள்ளது.
இதே போன்று மற்றொரு டுபாக்கூர் நிறுவனம் தேசி ஹோல்டிங்ஸ் மற்றும் கன்சல்டன்ட்ஸ். இந்த நிறுவனம் 2005ல் பங்குச் சந்தையில் தொழில் செய்வதற்காக தொடங்கப் படுகிறது. இந்தக் கம்பெனியின் முதலீடும் வெறும் ஒரு லட்ச ரூபாய் தான். இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் எம்ஆர்டி.ராமானுஜம் மற்றும் எம்.வி.தாமோதரன் ஆகியோர். ராமானுஜம் 9900 ஷேர்களும், தாமோதரன் 100 ஷேர்களும் வைத்துள்ளனர். இந்நிறுவனம் தொடங்கப் படுகையில் தனது பிரதான தொழிலாக “பங்குச் சந்தையில் முதலீடு செய்தல், முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை சொல்லுதல், கடன் ஏற்பாடு செய்தல் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளது.
இந்த செல்வி எப்படி 3ஜி ஊழலில் சிக்குகிறார் ?

1 மே 2008 அன்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டெண்டர் வெளியிடப் படுகிறது. அன்று அரசு விடுமுறை நாள் (உழைப்பாளர் தினம்) என்பது குறிப்பிடத் தக்கது.
டெண்டர்கள் மொத்தம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப் படுகின்றன. இந்த டெண்டர்களில் மேற்கு மண்டலத்துக்கு ஸ்பான்கோ டெலி சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் ஆர்டரை பெறுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்கு ஆக்மி டெலி பவர் என்ற நிறுவனம் ஆர்டரைப் பெறுகிறது. தென் மண்டலத்துக்கு டிவிஎஸ்-ஐசிஎஸ் என்ற நிறுவனம் ஆர்டரைப் பெறுகிறது. இந்த ஆர்டரின் படி, நான்கு மண்டலங்களிலும், 3 ஆண்டுகளுக்குள், 60 ஆயிரம் மொபைல் டவர்களை அமைத்து 3ஜி இணைப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது நடப்பது 2008ல்.
இதன் நடுவே நெடுந்தொடர் நாயகி செல்வியின் வேண்டுகோளுக்கிணங்க ராசா தனது காய் நகர்த்தலை தொடங்குகிறார்.
மேலே குறிப்பிட்ட இரண்டு டுபாக்கூர் நிறுவனங்களையும் களத்தில் இறக்க முடிவு செய்கிறார். ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் தொலைத் தொடர்புத் தொழிலில் சம்பந்தப் படாத நிறுவனங்களாயிற்றே…. அவை எப்படி தொலைத் தொடர்புத் தொழிலில் இறங்க முடியும் ? உடனே ராசா, அந்த நிறுவனங்களை அழைத்து, தொலைத் தொடர்புத் தொழில் இருப்பது போல, உங்கள் நிறுவனங்களை மாற்றுங்கள் என்று உத்தரவிடுகிறார்.
மே மாதம் டெண்டர் வெளியிடப் படும் என்பது தெரிந்து முதலில் களம் இறங்குவது தேசி ஹோல்டிங்ஸ் நிறுவனம். இந்நிறுவனம், 7 ஏப்ரல் 2008 அன்று தனது நிறுவனத்தின் பெயரை தேசி ஹோல்டிங்ஸ் என்பதை மாற்றி “ஜெனெக்ஸ்ட் டெலிகாம் பிரைவட் லிமிட்டெட்” என்று மாற்றுகிறது. அந்த நிறுவனத்தின் பிரதான தொழில்கள் என, தொலைத்தொடர்புச் சாதனங்கள் தயாரிப்பது, விற்பனை செய்வது, தொலைத்தொடர்புத் துறை தொடர்பான கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தொலைத்தொடர்புத் தொழிலில் ஈடுபடுவது என மாற்றப் படுகிறது. (வெறும் 10 லட்ச ரூபாயில்)
ஒரே வாரத்தில் மீண்டும் இந்நிறுவனத்தின் பெயர் மாற்றப் படுகிறது. ஜெனெக்ஸ்ட் டெலிகாம் பிரைவேட் லிமிடெட் என்ற பெயர், “ஐஸ் டெலிகாம்” என மாற்றப் படுகிறது. இந்த மாற்றம் நிகழ்வது 10 ஜுன் 2008ல்.
மற்றொரு டுபாக்கூர் நிறுவனமான பிஆர் டெக் சாப்ட்வேர் நிறுவனமும் தனது பெயரை மாற்றுகிறது. 27 மே 2009 அன்று இந்நிறுவனத்தின் பெயர் “ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்று மாற்றம் செய்யப் பட்டு, இந்த விபரம் கம்பெனிப் பதிவாளரிடம் அனுப்பப் படுகிறது. இந்த நிறுவனம் ஈடுபடும் தொழில்கள் என 3ஜி தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு தொடர்பான வேலைகள் என திருத்தம் செய்யப் படுகிறது.
ஏற்கனவே, ஐஸ் டெலிகாம் என்ற பெயரில் ஒரு நிறுவனம், தொலைத் தொடர்புத் துறையிலேயே இருப்பதால், எப்படி இன்னொரு நிறுவனம் ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் என்ற பெயரில் தொடங்க முடியும் என கம்பெனி பதிவாளர் ஒரு கடிதம் அனுப்புகிறார். அந்தக் கடிதத்துக்கு பதில் அனுப்பிய ஐஸ் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குநர் தாமோதரன், “பி.ஆர்.சாப்ட் டெக் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப் படுவதாக அறிகிறோம். அந்த நிறுவனம் எங்கள் குழுமத்தைச் சேர்ந்தது. அதனால் பெயர் மாற்றம் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை” என்று தெரிவிக்கிறார்.
இந்த நேரத்தில் பிஎஸ்என்எல்லின் டெண்டர்கள் வழங்கப் பட்டு முடிந்து விடுகின்றன. உடனே ராசா, இந்த இரண்டு டுபாக்கூர் ஐஸ் நிறுவனங்களையும் அழைத்து, தென் மண்டலத்துக்கு ஆர்டரைப் பெற்ற டிவிஎஸ் நிறுவனத்தோடு பங்குதாரராக சேரும்படியும், டிவிஎஸ் நிறுவனத்திடம் தான் பேசுவதாகவும் தெரிவிக்கிறார். தொலைத் தொடர்புத் துறை அமைச்சரை பகைத்துக் கொண்டு தொழில் செய்ய முடியாது என்பதை நன்கு உணர்ந்த டிவிஎஸ், இந்த இரண்டு நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு, டிவிஎஸ் – ஐசிஎஸ் என்று ஒப்பந்தம் போடுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஐஸ் நிறுவனத்துக்கு 50 சதவிகிதப் பங்கும், டிவிஎஸ் நிறுவனத்துக்கு 50 சதவிகிதப் பங்கும் என்று ஒப்பந்தம் போடப் படுகிறது. டிவிஎஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனம், ஐஸ் டெலிகாம் போன்ற டுபாக்கூர் நிறுவனத்தோடு பாதிக்குப் பாதி என்று பங்கு பிரித்தது, ஆ.ராசாவின் மிரட்டல் இல்லாமல் நடந்திருக்கும் என்பதை நம்ப முடியவில்லை.
ஆனாலும் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்ட டிவிஎஸ் நிறுவனம், இந்த ஆர்டரை செயல்படுத்த முதலீடு செய்வதற்கு முன்வரவில்லை. டிவிஎஸ் நிறுவனத்துக்கும், ஆர்டர் கிடைத்தவுடன், அதை சர்வதேசச் சந்தையில் ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்துக்கு அதை விற்று விட்டு 10 சதவிகித கமிஷனை எடுத்துக் கொள்ளலாம் என்றே முயல்கிறது.
டிவிஎஸ் ஐசிஎஸ் நிறுவனத்தின் இந்த டெண்டரை சர்வதேசச் சந்தையில் விற்பதற்கு முயற்சிகள் எடுக்கப் படுகின்றன. இந்த முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் மூவர். ஐஸ் டெலிகாம் நிறுவனத்தின் ஷ்யாம் சுந்தர். ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பிவி.சஞ்சீவ் குமார் மற்றும் டிவிஎஸ் - ஐசிஎஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சாம்சன் மேனுவேல். இவர்கள் மூவரும் சர்வதேசச் சந்தையில் இந்த ஒப்பந்தத்தை விற்பதற்கு முயல்கிறார்கள். ஆனால் 2009 ஜுன் வாக்கில், 2ஜி விவகாரத்தில் நடைபெற்றிருந்த ஊழல் ஊடகங்களில் பெரும் அளவில் கசியத் தொடங்கி விட்டன. இதனால், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் முதலீடு செய்யத் தயாராக இல்லை.
இதனால் இந்த மூவர் குழு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதற்காக ஒரு கன்சல்டன்டை நியமிக்கின்றனர். அந்த கன்சல்டன்டின் பெயர் சஞ்சீவ் குமார் திவிவேதி. அவருக்கு மொத்த முதலீட்டில் 1.5 சதவிகிதம் கமிஷன் என்று பேசப் படுகிறது.
இவர் வெளிநாட்டில் முதலீட்டாளர்களைத் தேடும்போது, கலிபோர்னியாவைச் சேர்ந்த செல்வராஷ் என்ற என்ஆர்ஐ இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டுகிறார். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவே இவர் மொரீஷியஸ் நாட்டில் வீனஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை தொடங்குகிறார். அக்டோபர் 14 2009 அன்று செல்வராஜோடு நடந்த மீட்டிங்கில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதம் நடந்ததோடு, ஐஸ் டெலிகாம் நிறுவனத்துக்கு அட்வான்ஸாக ஒரு பெரும் தொகை மொரீஷியஸ் நாட்டில் ஒரு வங்கியில் போடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருந்த போதே, 21 அக்டோபர் 2009 அன்று 2ஜி ஊழல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்கிறது. சிபிஐ வழக்கு பதிவு செய்து ரெய்டு நடத்த 11 மாதங்கள் ஆனது என்பது வேறு விஷயம். ஆனால் சிபிஐ வழக்கு பதிவு செய்த விவகாரம் தெரிந்த உடனேயே, சம்பந்தப் பட்ட அனைவரும், தலைமறைவானார்கள்.
இதில் கன்சல்டன்டாக நியமிக்கப் பட்ட திவிவேதி என்பவர் ஏராளமான பணத்தைக் கொடுத்து, ஏமாந்து தற்போது ரவுடிகளால் மிரட்டப் பட்டு வருவதாக சென்னை கமிஷனரிடத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
சரி… இதில் செல்வி எங்கே வருகிறார் ?
ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் நிறுவனத்தின் முகவரி எண் 19/21, ரஞ்சித் ரோடு, கோட்டூர்புரம், சென்னை. இந்த முகவரியில்தான் பல்வேறு மீட்டிங்குகள் நடந்தது என்றும், இந்த கட்டிடமே கருணாநிதியின் மகள் செல்வியுடையது என்றும் தெரிவிக்கிறார் திவிவேதி.
தற்போது இந்த திவிவேதி, பிஎஸ்என்எல் டெண்டரில் தனக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும் என்று நம்பி தான் செலவு செய்த 7 கோடி ரூபாயை பெற்றுத் தர வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரில், செல்வி பெயரைச் சொல்லித்தான் ஷ்யாம் என்பவர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கிறார். ஐஸ் டெலிவென்ச்சர்ஸ், ஐஸ் டெலிகாம் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே, செல்வியுடவை என்பது இவருடைய குற்றச் சாட்டு.
மாநிலப் போலீசார் விசாரணை நடத்துவதை விட, இதில் சிபிஐ விசாரணை நடத்தினால், கனிமொழியோடு செல்வியும் திஹாரில் இருப்பாரா என்பது தெரிய வரும்.
அண்மைச் செய்தி : இந்தக் கட்டுரை பதிப்பிக்கப் பட்ட பின்னர் வந்த செய்தி. இந்த ஊழலில் சம்பந்தப் பட்டுள்ள ஷ்யாம் என்ற நபர், 1996ம் ஆண்டில் கோபாலபுரத்தில் கருணாநிதி குடும்பத்தில் வந்து சேர்கிறார். சேர்ந்த முதலே செல்வியோடு நெருக்கமாக இருந்திருக்கிறார். செல்வியின் மகள் செந்தாமரையின் கணவர் டாக்டர் ஜோதிமணியும், ஷ்யாமும், ஒரிஸ்ஸாவில் பாக்சைட் மற்றும் இரும்புத் தாது எடுக்கும் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இவர்களோடு சேர்ந்து தொழில் செய்யும் மற்றொருவர், முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதியின் மகன் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
நன்றி - சவுக்கு