30 November 2011

பாவம் தமிழன்!

கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய படத்தை கேரள முதலமைச்சர் தலைமையில் திரையிட்டு அனைத்துக்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் காட்டியிருக்கிறார்கள்.

அண்மையில் இடுக்கி மாவட்டத்தில் 2.3 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதன் விளைவாக முல்லைப் பெரியாறு அணையில் வெடிப்புகள் தோன்றியிருப்பதாகப் பெரும் அபாயக் கூக்குரலை கேரள முதல்வர் உம்மன்சாண்டி எழுப்பி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்துள்ளார்.

தனி ஒரு மனிதன் பொய் பேசினால் அவனை சமூகம் வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகத் தொடர்ந்து பொய்மைக் கூப்பாட்டை எழுப்பி வருகிறார்கள். அவர்களுடைய பொய்யுரைக்கு ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும், ஏன், ஒரு சில நடுநிலையாளர்கள் உள்ளிட்ட பலரும்கூட செவிசாய்க்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது.

உண்மைதான் என்ன? 2001-ம் ஆண்டில் இதே இடுக்கி மாவட்டத்தில் 4.8 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. அப்போதும் இதேபோன்ற கூக்குரலை கேரள அரசும், அரசியல் கட்சிகளும் எழுப்பின. ஆனால், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் அணையை உடனடியாகப் பார்வையிட்டு, இந்த நில அதிர்வால் அணைக்கு எத்தகைய சேதமும் ஏற்படவில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், அதே ஆண்டு ஜனவரி 20-ம் தேதியன்று மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஒன்று இந்த அணையை நன்கு பரிசோதித்து, அணையில் எத்தகைய சிறு அளவு சேதம்கூட ஏற்படவில்லை என திட்டவட்டமாகக் கூறியது.

2001-ம் ஆண்டில் ஏற்பட்ட நில அதிர்வைவிடப் பாதி அளவுக்கும் குறைவான நிலஅதிர்வே இப்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கேரளத் தலைவர்களின் பொய்மைக்கூப்பாடு ஓயவில்லை.


1963-ம் ஆண்டிலிருந்து கடந்த 48 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கேரளம் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அதை இடித்துவிட்டு புது அணை கட்ட வேண்டும் என்ற கூப்பாட்டை இடைவிடாது எழுப்பிக்கொண்டு இருக்கிறது. அதே ஆண்டு, கேரளத்தின் புகாரை விசாரிப்பதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர், பெரியாறு அணைக்கு வந்து தமிழக-கேரளத் தலைமைப் பொறியாளர்கள் முன்னிலையில் அணையை முழுமையாகப் பரிசோதனை செய்து, அணை பலமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


1978-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை இதே புகாரை கேரளம் எழுப்பி, மத்திய நீர்ப்பாசன ஆணையத்தின் தலைவரும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு, அணை வலிமையாக இருப்பதை உறுதி செய்தார்கள். எனினும் 12.5 கோடி ரூபாய் செலவில் அணையை மேலும் பலப்படுத்துமாறும், அந்த வேலை முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு குறைக்கும்படியும் அறிவுரை கூறியது. அதை தமிழகம் ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தைக் குறைத்ததுடன் மராமத்துப் பணிகளையும் தொடங்கியது. ஆனால், அந்தப் பணிகள் முற்றுப் பெறவிடாமல் கேரளம் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது.


எனவே, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அணையின் வலிமையைச் சோதிக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அந்தக் குழுவும் அணையை நேரடியாகப் பரிசோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்துவதால் அணைக்கு எத்தகைய ஆபத்தும் வராது எனக் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்தப் பிரச்னையில் கேரளம் வேண்டுமென்றே பொய்யான காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்துகொள்வதாகவும் வல்லுநர் குழுவின் அறிக்கையின் மூலம் தெரிய வருவதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் திட்டவட்டமான தீர்ப்பை மதிக்காமல் கேரளம் 31-3-2006-ம் ஆண்டு கேரள ஆறுகளின் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத் தடுத்துவிட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்குத் தொடுத்தது.


ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயலற்றதாக்க இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கர்நாடக அரசு கொண்டு வந்தபோது, அச்சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், கேரள சட்டத்தைக் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் அதைப்போன்ற தீர்ப்பை அளித்திருக்க வேண்டியதுதான் நியாயமானது. ஆனால், அதற்குப் பதில் மீண்டும் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து அணையின் வலிமையைப் பரிசீலனை செய்ய கூறியிருக்கிறது. இதன் விளைவாக வேண்டாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது.


1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 31 ஆண்டுகாலத்துக்கு மேலாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் பெரியாறு நீரைக்கொண்டு 2 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதிபெற்றது. பாசன வசதி பற்றாக்குறையின் காரணமாக இதில் 38 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசுநிலமாக மாறிவிட்டது. இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86 ஆயிரம் ஏக்கர் ஆகும். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்துளை கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஆயிரம் ஏக்கர் ஆகும்.

இதன் விளைவாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 55.80 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின்உற்பத்தியின் இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடியாகும். ஆக மொத்தம் ஆண்டொன்றுக்கு ரூ.130.80 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 31 ஆண்டு காலமாக மொத்த இழப்பு 4054.80 கோடியாகும்.


அதே வேளையில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், ஆடு, மாடு, கோழி, முட்டைகள், பால் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன. கேரளத்தின் இறைச்சித் தேவையில் 90 விழுக்காடு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது என "தினமணி'யின் தலையங்கம் (29-10-11) குறிப்பிடுகிறது. இவை நிறுத்தப்பட்டால் கேரள மக்கள் பசியால் வாடும் நிலைமை ஏற்படும்.


தமிழ்நாட்டில் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20 சதவீத மின்சாரம் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் வாழ்கிறார்கள். மிகப்பெரிய நகைக்கடைகள், நிதிநிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதிலும் நடத்தி ஆதாயம் பெற்று வருகிறார்கள்.


நாள்தோறும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிபெற்று அனுப்பப்படும் அரிசியின் அளவு 700 டன் ஆகும். இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் தேவை. நீர்ப் பற்றாக்குறையாக உள்ள தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரில் உற்பத்தியாகும் அரிசியை நாம் கேரளத்துக்கு வஞ்சகம் இன்றி அனுப்புகிறோம். மற்றும் இங்கிருந்து அனுப்பப்படும் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருள், கால்நடைகள், உண்ணும் தீவனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் பயன்படும் நீர் எல்லாவற்றையும் சேர்த்தால் கேரளம் தமிழ்நாட்டின் நீரை எவ்வளவோ சுரண்டுகிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு 1,700 கன மீட்டர் நீர் தேவையென விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மலையாளிகளுக்கு ஆண்டுக்கு 5,100 மில்லியன் கனமீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், இவ்வளவு நீரை நம்மிடமிருந்து பயன்படுத்திக்கொள்ளும் கேரளத்திடம் நாம் பெரியாறு அணை நீரில் கேட்பது 126 மில்லியன் கன மீட்டர் நீர் மட்டுமே. இதைவிட பல நூறு மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும் கேரளம் நமக்குச் சட்டப்படியும், உச்ச நீதிமன்ற ஆணைப்படியும் உரிமையான நீரை விட்டுத் தர மறுக்கிறது.


முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் நீர் பிடிப்பு பகுதியின் மொத்தப் பரப்பளவு 601 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் தமிழ்நாட்டில் உள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது, பெரியாற்றில் உற்பத்தியாகி ஓடும் நீரில் 5-ல் ஒருபகுதி நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.

பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீர் அளவு 4,867.9 மி.க.மீ. ஆகும். 2021-ம் ஆண்டில் கேரளத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிலுக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254 மி.க.மீ. ஆகும். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313 மி.க.மீ. ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்த்தப்பட்டால் நமக்குத் தரவேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீ. ஆகும்.

அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 18.34 சதவீத நீரை மட்டுமே நமக்குத் தருமாறு நாம் கேட்கிறோம். ஆனால், கேரளம் பிடிவாதமாக அதற்கும் மறுக்கிறது. தமிழ்நாட்டின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவு 2,588 ச.கி.மீ. ஆகும். இதிலிருந்து 2,641 மி.க.மீ. நீர் பாய்ந்தோடி கேரள மாநில நதிகளான பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடியாறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது. இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அணைகட்டி நீரைத் தடுத்து நிறுத்தி தமிழகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அவ்வாறு செய்வதற்கு நாம் முனைந்தால் கேரளத்தால் தடுக்க முடியாது.


கடந்த காலத்தில் 1958-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த காமராசரும் கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உடன்பாட்டினை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி கேரள மாநிலத்திற்குள் பாய்ந்தோடும் பல நதிகளின் நீரை இருமாநிலங்களுக்கும் பொதுவாக பயன்படும் வகையில் வகுக்கப்பட்ட திட்டமே பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டமாகும்.


இத்திட்டத்துக்கான முழுச் செலவையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 920 மி.க.மீ. நீர் கிடைக்கிறது. கேரளத்துக்கு 2,641 மி.க.மீ. நீர் கிடைக்கிறது.


அதைப்போல, 1952-ம் ஆண்டில் பெரியாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக தமிழகத்துக்கு வரும் நீரிலிருந்து மின்உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. அத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசு தயங்கியது. அப்போது இராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தியை அழைத்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதலமைச்சரான பட்டம் தாணுபிள்ளையுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார். அவரும் இந்த மின்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று திரும்பினார்.


காங்கிரஸ்காரர்களான காமராஜரும் இராஜாஜியும், கம்யூனிஸ்டுகளான ஈஎம்எஸ். நம்பூதிரிபாட், பி. இராமமூர்த்தி ஆகியோர் மூலம் இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், இன்று கேரளத்தில் இருக்கும் எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், தமிழக நலன்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றன.

பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே, அது பயனற்றது என்ற வாதத்தை கேரளம் முன்வைக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான அணைகளான மேட்டூர் அணை, துங்கபத்திரா அணை, கிருஷ்ணராஜசாகர் அணை போன்றவை கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதைப்போல கேரள மாநிலத்தில் உள்ள பல அணைகளும் 80 ஆண்டுகளை தாண்டியவையாகும்.


புதிய அணை கட்ட வேண்டும் என கேரளம் வற்புறுத்துவதற்கு காரணம், முதலாவதாக 999 ஆண்டுகளுக்கு நாம் பெற்றுள்ள உரிமை பறிபோகும். புதிய அணை கட்டப்பட்டால் அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீர் கிடைக்கும். அதுவே அவர்களது குறிக்கோள் ஆகும்.


தமிழகத்துக்குத் தரவேண்டிய 126 மி.க.மீ. நீரை கேரளம் புதிய அணையிலிருந்து எதிர்காலத்தில் தருமா என்பது சந்தேகத்திற்கிடமானது. இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டப்படுமானால் ஒரு சொட்டு நீர்கூட நமக்கு வராது.


பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிவார்கள் என கேரளம் கூப்பாடு போடுகிறது. இடுக்கி, எர்ணாகுளம் என இரண்டே மாவட்டங்களில் மட்டுமே பெரியாறு ஓடுகிறது. பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ. வரை காடுகளின் வழியாக ஆறு ஓடி இடுக்கி அணையை அடைகிறது. அதற்குப் பிறகு 70 கி.மீ. நீர்வழிப்பாதையாகப் பயன்பட்டு அரபிக்கடலை அடைகிறது. இதில் 35 லட்சம் பேர் எங்கே இருக்கிறார்கள்?


மேலும், பெரியாற்றில் பெரியாறு நீர்த்தேக்கத்தைத் தவிர, 16 நீர்த்தேக்கங்களை கேரள அரசு கட்டியிருக்கிறது. இந்த அணைகளில் எல்லாம் நிரம்பி வழிந்த பிறகே நீர் அரபிக்கடலுக்கு நேரடியாகச் செல்லுமே தவிர, மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது.


புகழ்பெற்ற மலையாள இலக்கிய அறிஞரும் சாகித்திய அகாதெமி விருதுபெற்றவருமான பால் சக்காரியா இந்தப் பிரச்னை குறித்து கூறியதை கீழே தருகிறோம் (ஆனந்தவிகடன் 19-1-2003):


தமிழக கிராமங்களில்தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருள்கள் கேரளத்துக்கு வருகின்றன. பணப் பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்துதான் வருகிறது.


ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூடத் தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும் கேரள அரசைக் கண்டனம் செய்கிறேன்.


பெறுவதை எல்லாம் பெற்றுக்கொண்டு கொடுப்பதில் மட்டும் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என்று ஆங்காங்கு அணைகள் (கேரள அரசியல்வாதிகள்) கட்டினார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில் எல்லாம் ஊழல்தான் நடந்ததாகப் பேச்சுக்கள்.

இப்போது பவானியின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. காவிரி, பெரியாறு அணை, பவானி என்று சுற்றி சுற்றித் தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச் செயல்கள் நடக்கும் போது நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு அதைக் கொடுப்பது தமிழனின் குணம். பாவம் தமிழன்.


நன்றி - தினமணி

28 November 2011

3ஜி ஊழலில் கருணாநிதியின் மற்றொரு மகளுமான செல்வி?

தற்போது வெளி வர இருப்பது 2ஜி அல்ல.   3ஜி ஊழல். இந்த 3ஜி ஊழலில் சம்பந்தப் பட்டிருப்பது, மிகச் சிறந்த நெடுந்தொடர் நாயகியும், கருணாநிதியின் மற்றொரு மகளுமான செல்வி. இந்தச் செல்விதான் கருணாநிதி குடும்பத்திலேயே மோசமான நபர்.   ஒரு நபர், கருணாநிதிக்கும் நண்பராக, மாறன் சகோதரர்களுக்கும் நண்பராக எப்படி இருக்க முடியும் ?  ஆனால் செல்வியால் முடியும்.    மாறன் சகோதரர்களுக்காக செல்வி அழுது ஆர்ப்பாட்டம் செய்வதை நேரில் பார்த்திருந்தால், பல நெடுந்தொடர்களின் நடித்திருக்கும் தேவயானி கூட, ‘இவரின் நடிப்புக்கு முன், நாம் வேஸ்ட்’ என்று நடிப்பதையே விட்டிருப்பார்.  அப்படிப்பட்ட ஒரு கைதேர்ந்த நடிகை தான் செல்வி.
இந்த செல்வி எப்படி 3ஜி ஊழலில் சிக்குகிறார் ?





3ஜி ஏலம் நடந்து முடிந்து இன்று ஐடியா, ஏர்டெல், வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் 3ஜி சேவைகளை வழங்குவதாக அறிவித்து வருகின்றன.  3ஜி என்றால் என்ன ?  3ஜி என்றால் வீடியோ அழைப்புகள், வீடியோ ஸ்ட்ரீமிங், லைவ் டிவி போன்ற, அதி நவீன வசதிகளை வழங்குவதே 3ஜி சேவை.  ஆனால், இப்போது எந்த நிறுவனமாவது, வீடியோ அழைப்புகளைத் தருகின்றதா ?  பிறகு எதற்காக இந்த 3ஜி.  இன்டெர்நெட், மெயில் போன்ற வசதிகளை நாம் 2ஜியிலேயே பார்க்க முடியுமே… பிறகு எதற்கு 3ஜி…. ?


உண்மையான 3ஜி சேவைகள் வழங்கப் படாததற்கு காரணம், அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமையே..


2008ல் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, பிஎஸ்என்எல் நிறுவனம், 2ஜி மற்றும் 3ஜிக்கான உள் கட்டமைப்பு வசதிகளைச் (டவர்கள் நிறுவுதல், பராமரித்தல், டீசல் ஜெனரேட்டர்களை நிறுவுதல், குளிர்சாதன வசதிகளைச் செய்தல்) செய்வதற்கான டெண்டர் அழைப்பு விடுக்கிறது.


இந்த நேரத்தில்தான், செல்வி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கனிமொழி உள்ளிட்ட அனைவரும் நிறைய சம்பாதித்து விட்டார்கள் என்றும், தான் பெங்களுரில் உள்ளதால், தனக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்றும் புலம்பியதாகத் தெரிகிறது. இதையடுத்து கருணாநிதி, ராசாவிடம் இது குறித்து பேசியதாகவும் தெரிகிறது.


செல்விக்கு பணம் சம்பாதித்துக் கொடுப்பதற்காகவே இரண்டு நிறுவனங்கள் களத்தில் குதிக்கிறன.   ஒன்று, பி.ஆர்.சாப்ட் டெக் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்.  இதன் பதிவு செய்யப் பட்ட அலுவலகம் சென்னை, அண்ணா நகர் கிழக்கு, ஓ ப்ளாக், கணபதி காலனி, 30வது தெரு, எண் 6.   இந்தக் கம்பெனியின் மொத்த முதலீடு வெறும் 10 லட்ச ரூபாய் தான்.  சிம்பிளாகச் சொன்னால் இது ஒரு லெட்டர் பேட் கம்பேனி.  இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் எம்.கே.பாஸ்கர் மற்றும் வி.ராம்குமார் ஆகியோர்.  பாஸ்கருக்கு 9000 ஷேர்களும், ராம் குமாருக்கு 1000 ஷேர்களும் இருக்கின்றன.    இந்த நிறுவனம் தொடங்கப் படுகையில் தனது பிரதான தொழிலாக மென்பொருட்களை தயாரிப்பது, இணையதள வடிவமைப்பு என குறிப்பிட்டுள்ளது.


இதே போன்று மற்றொரு டுபாக்கூர் நிறுவனம் தேசி ஹோல்டிங்ஸ் மற்றும் கன்சல்டன்ட்ஸ். இந்த நிறுவனம் 2005ல் பங்குச் சந்தையில் தொழில் செய்வதற்காக தொடங்கப் படுகிறது.   இந்தக் கம்பெனியின் முதலீடும் வெறும் ஒரு லட்ச ரூபாய் தான்.   இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் எம்ஆர்டி.ராமானுஜம் மற்றும் எம்.வி.தாமோதரன் ஆகியோர்.  ராமானுஜம் 9900 ஷேர்களும், தாமோதரன் 100 ஷேர்களும் வைத்துள்ளனர்.  இந்நிறுவனம் தொடங்கப் படுகையில் தனது பிரதான தொழிலாக “பங்குச் சந்தையில் முதலீடு செய்தல், முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை சொல்லுதல், கடன் ஏற்பாடு செய்தல் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளது.

1 மே 2008 அன்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டெண்டர் வெளியிடப் படுகிறது.  அன்று அரசு விடுமுறை நாள் (உழைப்பாளர் தினம்) என்பது குறிப்பிடத் தக்கது.

 
டெண்டர்கள் மொத்தம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப் படுகின்றன. இந்த டெண்டர்களில் மேற்கு மண்டலத்துக்கு ஸ்பான்கோ டெலி சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் ஆர்டரை பெறுகிறது.   வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்கு ஆக்மி டெலி பவர் என்ற நிறுவனம் ஆர்டரைப் பெறுகிறது.  தென் மண்டலத்துக்கு டிவிஎஸ்-ஐசிஎஸ் என்ற நிறுவனம் ஆர்டரைப் பெறுகிறது.       இந்த ஆர்டரின் படி, நான்கு மண்டலங்களிலும், 3 ஆண்டுகளுக்குள், 60 ஆயிரம் மொபைல் டவர்களை அமைத்து 3ஜி இணைப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.  இது நடப்பது 2008ல்.
 

இதன் நடுவே நெடுந்தொடர் நாயகி செல்வியின் வேண்டுகோளுக்கிணங்க ராசா தனது காய் நகர்த்தலை தொடங்குகிறார்.
 

மேலே குறிப்பிட்ட இரண்டு டுபாக்கூர் நிறுவனங்களையும் களத்தில் இறக்க முடிவு செய்கிறார்.   ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் தொலைத் தொடர்புத் தொழிலில் சம்பந்தப் படாத நிறுவனங்களாயிற்றே….  அவை எப்படி தொலைத் தொடர்புத் தொழிலில் இறங்க முடியும் ?   உடனே ராசா, அந்த நிறுவனங்களை அழைத்து, தொலைத் தொடர்புத் தொழில் இருப்பது போல, உங்கள் நிறுவனங்களை மாற்றுங்கள் என்று உத்தரவிடுகிறார்.
 

மே மாதம் டெண்டர் வெளியிடப் படும் என்பது தெரிந்து முதலில் களம் இறங்குவது தேசி ஹோல்டிங்ஸ் நிறுவனம்.  இந்நிறுவனம், 7 ஏப்ரல் 2008 அன்று தனது நிறுவனத்தின் பெயரை தேசி ஹோல்டிங்ஸ் என்பதை மாற்றி “ஜெனெக்ஸ்ட் டெலிகாம் பிரைவட் லிமிட்டெட்” என்று மாற்றுகிறது.   அந்த நிறுவனத்தின் பிரதான தொழில்கள் என, தொலைத்தொடர்புச் சாதனங்கள் தயாரிப்பது, விற்பனை செய்வது, தொலைத்தொடர்புத் துறை தொடர்பான கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தொலைத்தொடர்புத் தொழிலில் ஈடுபடுவது என மாற்றப் படுகிறது. (வெறும் 10 லட்ச ரூபாயில்)


ஒரே வாரத்தில் மீண்டும் இந்நிறுவனத்தின் பெயர் மாற்றப் படுகிறது.  ஜெனெக்ஸ்ட் டெலிகாம் பிரைவேட் லிமிடெட் என்ற பெயர், “ஐஸ் டெலிகாம்” என மாற்றப் படுகிறது.   இந்த மாற்றம் நிகழ்வது 10 ஜுன் 2008ல்.

மற்றொரு டுபாக்கூர் நிறுவனமான பிஆர் டெக் சாப்ட்வேர் நிறுவனமும் தனது பெயரை மாற்றுகிறது.  27 மே 2009 அன்று இந்நிறுவனத்தின் பெயர் “ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்று மாற்றம் செய்யப் பட்டு, இந்த விபரம் கம்பெனிப் பதிவாளரிடம் அனுப்பப் படுகிறது. இந்த நிறுவனம் ஈடுபடும் தொழில்கள் என 3ஜி தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு தொடர்பான வேலைகள் என திருத்தம் செய்யப் படுகிறது.


ஏற்கனவே, ஐஸ் டெலிகாம் என்ற பெயரில் ஒரு நிறுவனம், தொலைத் தொடர்புத் துறையிலேயே இருப்பதால், எப்படி இன்னொரு நிறுவனம் ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் என்ற பெயரில் தொடங்க முடியும் என கம்பெனி பதிவாளர் ஒரு கடிதம் அனுப்புகிறார்.  அந்தக் கடிதத்துக்கு பதில் அனுப்பிய ஐஸ் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குநர் தாமோதரன், “பி.ஆர்.சாப்ட் டெக் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப் படுவதாக அறிகிறோம்.   அந்த நிறுவனம் எங்கள் குழுமத்தைச் சேர்ந்தது. அதனால் பெயர் மாற்றம் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை” என்று தெரிவிக்கிறார்.



இந்த நேரத்தில் பிஎஸ்என்எல்லின் டெண்டர்கள் வழங்கப் பட்டு முடிந்து விடுகின்றன.  உடனே ராசா, இந்த இரண்டு டுபாக்கூர் ஐஸ் நிறுவனங்களையும் அழைத்து, தென் மண்டலத்துக்கு ஆர்டரைப் பெற்ற டிவிஎஸ் நிறுவனத்தோடு பங்குதாரராக சேரும்படியும், டிவிஎஸ் நிறுவனத்திடம் தான் பேசுவதாகவும் தெரிவிக்கிறார்.   தொலைத் தொடர்புத் துறை அமைச்சரை பகைத்துக் கொண்டு தொழில் செய்ய முடியாது என்பதை நன்கு உணர்ந்த டிவிஎஸ், இந்த இரண்டு நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு, டிவிஎஸ் – ஐசிஎஸ் என்று ஒப்பந்தம் போடுகிறது.   இந்த ஒப்பந்தத்தின் படி, ஐஸ் நிறுவனத்துக்கு 50 சதவிகிதப் பங்கும், டிவிஎஸ் நிறுவனத்துக்கு 50 சதவிகிதப் பங்கும் என்று ஒப்பந்தம் போடப் படுகிறது.   டிவிஎஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனம், ஐஸ் டெலிகாம் போன்ற டுபாக்கூர் நிறுவனத்தோடு பாதிக்குப் பாதி என்று பங்கு பிரித்தது, ஆ.ராசாவின் மிரட்டல் இல்லாமல் நடந்திருக்கும் என்பதை நம்ப முடியவில்லை.







ஆனாலும் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்ட டிவிஎஸ் நிறுவனம், இந்த ஆர்டரை செயல்படுத்த முதலீடு செய்வதற்கு முன்வரவில்லை.  டிவிஎஸ் நிறுவனத்துக்கும், ஆர்டர் கிடைத்தவுடன், அதை சர்வதேசச் சந்தையில் ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்துக்கு அதை விற்று விட்டு 10 சதவிகித கமிஷனை எடுத்துக் கொள்ளலாம் என்றே முயல்கிறது.


டிவிஎஸ் ஐசிஎஸ் நிறுவனத்தின் இந்த டெண்டரை சர்வதேசச் சந்தையில் விற்பதற்கு முயற்சிகள் எடுக்கப் படுகின்றன. இந்த முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் மூவர். ஐஸ் டெலிகாம் நிறுவனத்தின் ஷ்யாம் சுந்தர்.   ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பிவி.சஞ்சீவ் குமார் மற்றும் டிவிஎஸ்  - ஐசிஎஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சாம்சன் மேனுவேல்.  இவர்கள் மூவரும் சர்வதேசச் சந்தையில் இந்த ஒப்பந்தத்தை விற்பதற்கு முயல்கிறார்கள்.  ஆனால் 2009 ஜுன் வாக்கில், 2ஜி விவகாரத்தில் நடைபெற்றிருந்த ஊழல் ஊடகங்களில் பெரும் அளவில் கசியத் தொடங்கி விட்டன.  இதனால், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் முதலீடு செய்யத் தயாராக இல்லை.


இதனால் இந்த மூவர் குழு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதற்காக ஒரு கன்சல்டன்டை நியமிக்கின்றனர். அந்த கன்சல்டன்டின் பெயர் சஞ்சீவ் குமார் திவிவேதி.   அவருக்கு மொத்த முதலீட்டில் 1.5 சதவிகிதம் கமிஷன் என்று பேசப் படுகிறது.

இவர் வெளிநாட்டில் முதலீட்டாளர்களைத் தேடும்போது, கலிபோர்னியாவைச் சேர்ந்த செல்வராஷ் என்ற என்ஆர்ஐ இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டுகிறார்.   இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவே இவர் மொரீஷியஸ் நாட்டில் வீனஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை தொடங்குகிறார்.   அக்டோபர் 14 2009 அன்று செல்வராஜோடு நடந்த மீட்டிங்கில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதம் நடந்ததோடு, ஐஸ் டெலிகாம் நிறுவனத்துக்கு அட்வான்ஸாக ஒரு பெரும் தொகை மொரீஷியஸ் நாட்டில் ஒரு வங்கியில் போடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருந்த போதே, 21 அக்டோபர் 2009 அன்று 2ஜி ஊழல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்கிறது.  சிபிஐ வழக்கு பதிவு செய்து ரெய்டு நடத்த 11 மாதங்கள் ஆனது என்பது வேறு விஷயம்.  ஆனால் சிபிஐ வழக்கு பதிவு செய்த விவகாரம் தெரிந்த உடனேயே, சம்பந்தப் பட்ட அனைவரும், தலைமறைவானார்கள்.

இதில் கன்சல்டன்டாக நியமிக்கப் பட்ட திவிவேதி என்பவர் ஏராளமான பணத்தைக் கொடுத்து, ஏமாந்து தற்போது ரவுடிகளால் மிரட்டப் பட்டு வருவதாக சென்னை கமிஷனரிடத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

சரி… இதில் செல்வி எங்கே வருகிறார் ?

ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் நிறுவனத்தின் முகவரி எண் 19/21, ரஞ்சித் ரோடு, கோட்டூர்புரம், சென்னை.  இந்த முகவரியில்தான் பல்வேறு மீட்டிங்குகள் நடந்தது என்றும், இந்த கட்டிடமே கருணாநிதியின் மகள் செல்வியுடையது என்றும் தெரிவிக்கிறார் திவிவேதி.

தற்போது இந்த திவிவேதி, பிஎஸ்என்எல் டெண்டரில் தனக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும் என்று நம்பி தான் செலவு செய்த 7 கோடி ரூபாயை பெற்றுத் தர வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.  இந்தப் புகாரில், செல்வி பெயரைச் சொல்லித்தான் ஷ்யாம் என்பவர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கிறார். ஐஸ் டெலிவென்ச்சர்ஸ், ஐஸ் டெலிகாம் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே, செல்வியுடவை என்பது இவருடைய குற்றச் சாட்டு.

மாநிலப் போலீசார் விசாரணை நடத்துவதை விட, இதில் சிபிஐ விசாரணை நடத்தினால், கனிமொழியோடு செல்வியும் திஹாரில் இருப்பாரா என்பது தெரிய வரும்.

அண்மைச் செய்தி : இந்தக் கட்டுரை பதிப்பிக்கப் பட்ட பின்னர் வந்த செய்தி.  இந்த ஊழலில் சம்பந்தப் பட்டுள்ள ஷ்யாம் என்ற நபர், 1996ம் ஆண்டில் கோபாலபுரத்தில் கருணாநிதி குடும்பத்தில் வந்து சேர்கிறார். சேர்ந்த முதலே செல்வியோடு நெருக்கமாக இருந்திருக்கிறார்.   செல்வியின் மகள் செந்தாமரையின் கணவர் டாக்டர் ஜோதிமணியும், ஷ்யாமும், ஒரிஸ்ஸாவில் பாக்சைட் மற்றும் இரும்புத் தாது எடுக்கும் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.  மேலும், இவர்களோடு சேர்ந்து தொழில் செய்யும் மற்றொருவர், முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதியின் மகன் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

நன்றி - சவுக்கு 



27 November 2011

இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ தேவலை: விஜயகாந்த் தாக்கு.

சென்னை: கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை தாக்கல் செய்துள்ள பதில் மனுவைப் பார்க்கையில் இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.


அதில் தமிழ்நாட்டு மீனவர்கள் கடல் எல்லையை கடந்து இலங்கைப் பகுதிக்கு செல்வதால்தான் ஆபத்து ஏற்படுவதாகவும், கடல் எல்லையில் இருந்து 5 மைல் தூரம் வரை மீன் பிடிக்கக் கூடாத பகுதி என்று அறிவித்துவிட்டால் இந்தப் பிரச்னை எழாது என்றும் தெரிவித்துள்ளது. இது பொறுப்பற்ற, விஷமத்தனமான, தீமை விளைவிக்கக் கூடிய போக்காகும்.


இந்த கடல் பகுதியில் காலங்காலமாக இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடித்து வருகின்றனர். விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் பெயரைச் சொல்லி இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழப்பும், பலர் படுகாயங்களுக்கு ஆளாகியும், மீன் பிடித் தொழிலையே விட்டு விடுகிற அளவுக்கு நிலைமை முற்றியது. ஆனால் இலங்கை அரசு இப்பொழுது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அறவே இல்லாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரிக்கிறது.


இதற்குப் பிறகும் கூட, இலங்கை அரசை சேர்ந்த கப்பல் படையினர் தமிழ்நாட்டு மீனவர்களை தாக்குவதும், அவமானப்படுத்துவதும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், படகுகளையும் கைப்பற்றுவது என்ன நியாயம்? இந்தக் கொடுமையில் இருந்து நம்முடைய மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.



இந்திய கடலோர காவல்படை அளித்துள்ள பதிலை பார்க்கிறபொழுது, இலங்கை அரசே இந்திய அரசை விட எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது. இலங்கை அரசாவது அதிகாரி மட்டத்தில் இது பற்றி பேசி தீர்வு காணலாம் என்கின்றனர். ஆனால் இந்திய அரசின் கடலோர காவல்படை அளித்துள்ள பதிலை பார்க்கும்பொழுது நமது மீனவர்கள் இந்த கடல் பகுதியில் மீன்களையே பிடிக்க முடியாது என்ற நிலை உள்ளது. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் நமது மீனவர்களை இந்திய கடலோர காவல் படையே தாக்கிய சம்பவங்களும் உண்டு.


கிணறு வெட்ட போய் பூதம் புறப்பட்டதைப் போல, நமது மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்போய் முதலுக்கே மோசம் என்ற அடிப்படையில் இந்திய அரசின் பதில் அமைந்துள்ளது. உண்மையிலேயே நம்முடைய மீனவர்களும் இந்திய குடிமக்கள் என்ற உணர்வு இந்திய அரசுக்கு இருக்குமானால் உடனடியாக மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை திரும்பப் பெற வேண்டும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய இலங்கை கடல் பகுதியை இரு சாராரும் தாராளமாக மீன் பிடிக்க வழிவகை காண வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.


1974 முதல் இன்று வரை இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. மாநில முதலமைச்சர்கள் மத்திய அரசுக்கு கடிதங்களை எழுதத் தவறுவதில்லை. மத்திய அரசோ அவ்வப்பொழுது சமாதானம் சொல்வதும், இலங்கைக்கு தூதரை அனுப்பி வைப்பதும் வாடிக்கை. ஆனால் மீனவர்களின் வாழ்விலோ விடியல் ஏற்படவில்லை. இப்பொழுதாவது இந்திய அரசு தன் தவறை உணர்ந்து இலங்கை அரசின் ஏஜெண்ட் போல செயல்படுவதை விட்டுவிட்டு இந்தியப் பிரஜைகளை காப்பாற்றுவதும், அவர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தருவதும் தன் முதல் கடமை என்று உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.


இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
சென்னை: முல்லைப் பெரியாறு வெறும் அணைப் பிரச்சினை அல்ல. அது தமிழர்களின் உரிமைப் பிரச்சினை. அதில் கேரளா விளையாடிப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது, என இயக்குநர் சீமான் கூறியுள்ளார்.

டேம்999 படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் தொடர்ந்து பேசிப் பேசி இரு மாநில மக்களுக்கும் இடையே ஒரு பகை உணர்வை ஏற்படுத்திவரும் நிலையில், இப்போது டேம் 999 என்ற பெயரில் ஒரு திரைப்படமாகவும் எடுத்து வெளியிட்டிருப்பது தமிழர், மலையாளிகள் இடையே மோதலை உண்டாக்க வேண்டும் என்கிற சூழ்ச்சியாகவே தெரிகிறது.


முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என்பதை உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட மத்திய நீர்வள அமைச்சகத்தின் நிபுணர் குழு ஆராய்ந்து அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில்தான் முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கும் அளவை 136 அடியில் இருந்து 142 அடியாக முதல் கட்டமாக உயர்த்தலாம் என்றும், அதன் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தி முழு நீர்தேக்க அளவான 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 2005ஆம் ஆண்டிலேயே இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்து சண்டித்தனம் செய்துவரும் கேரள அரசு, தனது நீர்ப்பாசன சட்டத்தில் திருத்தம் செய்து, நீதிமன்றத் தீர்ப்பையே அவமதித்தது.


இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, அணையின் பலத்தை முழுமையாக சோதித்து அறிக்கை அளிக்குமாறு மீண்டும் உத்தரவிட்டதையடுத்தே நீதிபதி ஆனந்த் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட நிபுணர் குழு முல்லைப் பெரியாறு அணையை சமீபத்தில் சோதனையிட்டது. அப்போது அணை பலவீனமாக உள்ளது என்பதற்கு பொறியியல் ரீதியாக ஒரு ஆதாரத்தையும் கேரள அரசால் அளிக்க முடியவில்லை.


தொழில்நுட்ப ரீதியாகவும், பொறியியல் ரீதியாகவும் நிரூபிக்க வக்கற்ற கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அணையல்ல பிரச்சனை, அதில் தேக்கப்படும் நீர்தான் பிரச்சனை என்று கூறி வழக்கின் அடிப்படையில் இருந்தே மாறுபட்டுப் பேசியது. இதுதான் கேரள அரசின் சட்டப்பூர்வ நிலை.


எனவே, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்துவிட்ட கேரள அரசு, இப்படி குறுக்கு வழியை கையாண்டு திரைப்படம் எடுத்து பெரியாறு அணையை உடைக்கும் தனது சதித்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறது.


அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது, இதேபோல் ஒரு சிடி-ஐ வெளியிட்டு, அதை கேரள மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் எல்லாம் காட்டி, அம்மாநில மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. இப்போது ஐக்கிய அரசு அமீரகத்துடன் இணைந்து, இந்திய கடற்படையில் பணியாற்றி ஒரு மலையாளியைக் கொண்டு திரைப்படமாகவே எடுத்து வெளியிட்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாகவும், பொறியியல் ரீதியிலும் நிரூபிக்க முடியாத அரசு, சினிமா எடுத்து நிரூபிக்கப் பார்ப்பது கோமாளித்தனமானது.


கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் ஒன்றை உணர்ந்திடல் வேண்டும். தமிழர்களுக்கு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை அல்ல, அது தமிழினத்தின் உரிமைப் பிரச்சனை.


தமிழ்நாட்டிற்காக, தமிழனின் வாழ்விற்காக, தமிழர்களின் வாழ்வு செழிக்க வேண்டும் என்று நினைத்த ஆங்கிலேயர் பென்னி குக் எனும் மாமனிதனால் கட்டப்பட்டது.


அதனை அகற்ற ஒருபோதும் தமிழன் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. அண்டை மாநிலத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழருக்குச் சொந்தமான பாலக்காடு மாவட்டமும், தேவி குளம், பீர்மேடு ஆகிய ஒன்றியங்களும், கற்புக்கரசி கண்ணகி கோயில் மீதும் கேரளா சொந்தம் கொண்டாடி வருவதை தமிழன் அனுமதித்துக் கொண்டிருக்கிறான்.


தமிழனின் தாராள குணத்தை தோண்டிப் பார்க்க முற்பட்டால், அது எல்லைகளை மாற்றியமைக்கும் அளவிற்கு பிரச்சனை பெரிதாகும் ஆபத்து ஏற்படும் என்பதை அண்டை மாநில அரசும், அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை அழுத்தத்துடன் நாம் தமிழர் கட்சி கூறிக்கொள்கிறது.

இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் எந்தத் திரையரங்கில் திரையிட்டாலும் அதனை எதிர்த்து ஜனநாயக வழியில் நாம் தமிழர் கட்சி முற்றுகைப் போராட்டம் நடத்தும்," என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் சீமான்.

நான் வாயைத் திறந்தால் பலர் ஜெயிலுக்குப் போக வேண்டி வரும் - ஆ ராசா

டெல்லி: நான் வாயைத் திறந்தால் பலர் உள்ளே போக வேண்டி வரும். எனவே இப்போதைக்கு நான் ஜாமீன் கேட்கப் போவதில்லை. முதலில் கனிமொழி வெளியில் வரட்டும். பிறகு நான் ஜாமீன் பற்றி யோசிக்கிறேன், என்று ஆ ராசா தெரிவித்துள்ளார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் தொலைத் தொடர்பு துறையின் அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார். ஓராண்டாக அவர் திகார் ஜெயிலில் உள்ளார்.


இந்நிலையில் ஆ.ராசா நீதிமன்ற அறையில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.


அவர் கூறுகையில், "திகார் ஜெயில் வாழ்க்கை, தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வகையிலும் என்னை மேலும் செம்மையாக்கி உள்ளது.


எனது வாழ்க்கையில் 12 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்து விட்டேன். சிறையில் இந்த புதிய வாழ்க்கையை கிட்டத்தட்ட 12 மாதங்கள் அனுபவித்து விட்டேன். இந்த இரண்டிலும் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.

நான் தற்காலிக விடுதலையை விரும்பவில்லை. இந்த வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். ஆகவே நான் ஜாமீன் கேட்டு எந்த கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யவில்லை. நான் வாயை திறக்கும் போது, பலர் ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும்.


ஒவ்வொரு விஷயத்தையும் நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நான் நிரந்தரமாகவே ஜெயிலிலேயே இருந்து விடுவேன் என்று நீங்கள் கருதி விடக்கூடாது. கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கட்டும் முதலில் கனிமொழி ஜெயிலில் இருந்து விடுதலை ஆகட்டும். அதன் பிறகு நான் ஜாமீன் மனுதாக்கல் செய்வது பற்றி யோசிக்கிறேன்," என்றார்.

13 November 2011

மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள்


தலைவாரி பூச்சூடி "டாடா' காண்பித்து, பாடசாலைக்கு அனுப்பி வைத்தாள், சேலம் மாதையன்குட்டையைச் சேர்ந்த அப்பாவி அம்மா. பத்தாம் வகுப்பு படிக்கும் தன் பெண், அதே பள்ளி உடற்கல்வி ஆசிரியருடன் ஓடிப் போவாள், என்று கனவிலும் நினைக்கவில்லை. சிறப்பு வகுப்புக்காக சென்ற மகள், சென்ற இடம் தெரியவில்லை.

உடற்கல்வி ஆசிரியர் கடத்திவிட்டதாக, தந்தை போலீசில் புகார் செய்தார். ஆசிரியரிடம் விசாரித்தபோது, சம்பவத்தன்று (நவ.6) காலை 7.30 மணிக்கு, சென்றாய பெருமாள் கோயில் கரடுக்கு அழைத்துச் சென்று, மதியம் மேட்டூர் பஸ்சில் அனுப்பி விட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், அம்மாணவியே வேறொரு மொபைல் போனிலிருந்து, உறவினரிடம் பேசியுள்ளார். போலீஸ் விசாரணையில், அந்த போன் எண் சேலத்தைச் சேர்ந்த பஸ் கிளீனருக்கு சொந்தமானது தெரியவந்தது, ஆனால் தலைமறைவாகி விட்டார். கிளீனருக்கும், உடற்கல்வி ஆசிரியருக்கும், மாணவிக்கும் என்ன வகையான தொடர்பு, மாணவி எங்கே... என போலீசாரே குழம்பியுள்ளனர். பெற்றோருக்கு எவ்வளவு பெரிய அவமானமும், வேதனையும் தரும் செயல் இது. இதற்காக தானா... மாய்ந்து மாய்ந்து படிக்க வைக்கின்றனர்.

படிக்கும் வயதில், வாழ்க்கையை தொலைக்கும் இந்த கேடுகெட்ட காதல் தேவைதானா? பருவக்கோளாறைத் தாண்டிய வயதிலும், மாணவிகளிடம் "சில்மிஷ' சேட்டையில் ஈடுபடும் ஆசிரியர்களை, கடுமையாக தண்டிக்க வேண்டாமா? நினைக்கையில் நெஞ்சம் குமுறுகிறது. 13 வயதில் காதலைக் கற்றுத் தரும் சினிமாவும், எப்பொழுதும் கள்ளக்காதலை கற்றுத்தரும் "டிவி சீரியலும்' தான், இத்தகைய கலாச்சார சீர்கேடுகளை பரப்பி வருவதாக, கோபத்தில் கொந்தளிக்கின்றனர், பெண்கள்.

ஜெ.நிஷாபேகம், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவி, மதுரை:

பெண்கள் "டிவி' சீரியலே கதியென இருப்பதால், பிள்ளைகளும் அதைத் தான் பார்க்கின்றனர். பிள்ளைகளுக்கான பிரத்யேக சானலில் கூட, தவறான உறவுகளை சித்தரிக்கும் "அனிமேஷன்' காட்சிகள் தான் ஒளிபரப்பப்படுகின்றன. புவியியல், நிலஅமைப்பு, உயிரினங்களைப் பற்றிய காட்சிகளை, யாரும் கண்டுகொள்வதே இல்லை. எது தவறோ... அதைநோக்கி வலியச் செல்கிறோம்.இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில், பிள்ளைகளின் பேச்சை கேட்கக்கூட நேரம் ஒதுக்குவதில்லை. இதனால் நலம் விசாரித்தால் கூட, வேறுவிதமான நேசம் என, மாணவிகள் தவறாக நினைக்கின்றனர். பிள்ளைகளிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்குங்கள். மாணவிகளை தனியாக அழைத்துப் பேசுவது, தனியறையில் அமர்ந்து பேசுவதை, பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்
.
டாக்டர் கே.மகாலட்சுமி, மனநலம், அரசு மருத்துவமனை, திண்டுக்கல்:

ஆசிரியர்களை கண்டால், மாணவர்களிடம் பயம் இருந்த காலம் மாறி, தற்போது நட்புறவு ஏற்பட்டுள்ளது. அதுவே தவறுகளுக்கும் காரணமாகிறது. பொருந்தா உறவை சித்தரிக்கும் "டிவி' சீரியல்களை, பெண்கள் பார்க்கின்றனர். கூடவே பிள்ளைகளும் பார்த்து, மனதை கெடுத்துக் கொள்கின்றனர். அரைகுறையாக தங்களுக்கு தெரிந்ததை, தவறான பயன்படுத்துவதால் தான் பிரச்னை ஏற்படுகிறது. மாணவர்களிடம் பாலியல் கல்வியை தெளிவுபடுத்த வேண்டும். முதலில் சங்கடமாகத் தெரியும். உண்மை கசப்பாக இருந்தாலும், அதன்விளைவு இனிமையானதாக மாறிவிடும். தப்பு செய்ய மனம் வராது. சினிமாவுக்கு கூட "சென்சார்' உள்ளது. கள்ள உறவுகளை சித்தரிக்கும் "டிவி'க்கு மட்டும் "சென்சார்' இல்லை. நமது வீட்டில் இத்தகைய சீர்கேடுகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள், பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துவர்.

கே. பார்வதி, கல்வி மாவட்ட அதிகாரி, உத்தமபாளையம்:

 ஆசிரியர்களால் ஏற்படும் பிரச்னைகளை தலைமை ஆசிரியர், கல்வித்துறைக்கு மாணவிகள் தெரிவிக்கலாம். மாணவிகளை எப்படி நடத்த வேண்டும் என கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கம், அடுத்து தான் கல்வி, என்பதை தலைமையாசிரியர் மூலம் விளக்கி வருகிறோம். மாணவியை தங்களது பிள்ளைகளைப் போல பாவிக்க வேண்டும். வகுப்பறை நடவடிக்கைகளை, தலைமை ஆசிரியர் தினமும் கண்காணிக்க வேண்டும். அதேபோல் பள்ளி செல்லும் தனது குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. வகுப்பறைகளில் ஏற்படும் பிரச்னைகளை பெற்றோர் அறிந்து, பள்ளிக்கு தெரிவிக்க வேண்டும்.

என்.ஹேமாமாலினி (குடும்பதலைவி, ராமநாதபுரம்):

குருவுக்கும், சிஷ்யனுக்கும் உள்ள உறவு, இறைவனுக்கும், பக்தனுக்கும் உள்ள உறவு போன்றது. புனித உறவு கெட்டுப்போகாமல் ஆசிரியர் பேணிக்காக்க வேண்டும். சமீப காலமாக ஆசிரியர்கள் மாணவர்களிடம் தவறாக நடந்து கொள்வது, திருமணம் செய்வது அதிகரிக்கிறது. சமுதாயத்திற்கு ஒவ்வாத இச்செயல்களை மன்னிக்க முடியாது. கல்விச்சாலையில் குழந்தைகளின் நடத்தை மாற்றம் குறித்து, ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்களும், நண்பனை போல யதார்த்தத்தை புரிய வைத்து, நல்வழி படுத்த வேண்டும்.

எஸ்.மீனாட்சி,(ஆசிரியை, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, காரைக்குடி):

இன்றைய கால கட்டத்தில் சினிமா, "டிவி' மீடியாக்கள் மாணவர்களை சீரழித்து வருகின்றன. குறிப்பாக, ஆசிரியர்கள் மாணவர்களிடையே ஏற்படும்"தகாத' உறவு முறைக்கு இது ஒரு காரணம். வகுப்பறையில் ஒழுக்கத்திற்கு புறம்பாக நடக்கும் ஆசிரியர்களை தனியாக அழைத்து, கண்டிக்க வேண்டும். இது அவர்களிடம் ஒரு மாற்றத்தை உருவாக்கும். மாணவர்களிடம் தேவையில்லா தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மீடியாக்களை புறக்கணிக்க வேண்டும். இது அவர்களை நல் வழிப்படுத்தும்,என்றார்.

ஏ.ரஜினி(பி.எஸ். சிதம்பரநாடார் மேல்நிலைப் பள்ளி முதல்வர்,விருதுநகர்):

ஆசிரியர் என்பவர் மாணவர்களின் இரண்டாவது தாய். ஆனால் தற்போது சிலரிடம் இந்த நிலை இல்லை. தவறான வழியில் செல்லும் ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு "கவுன்சிலிங்' கொடுத்தால் மனம் பண்படும். "டிவி', சினிமா தான், பெண்களை தவறாக சித்தரிக்கிறது. இதை பார்க்கும் ஆசிரியர்களும் மனதில் தவறான எண்ணத்தை வளர்க்கின்றனர். ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை தான் முதன்மையாக நினைக்க வேண்டும். மாணவிகள் மனம் சலனப்பட்டால் கூட, குருவாய் நின்று வழிநடத்த வேண்டுமே தவிர, வழிமாறி அவமானத்தை தேடிச் செல்லக்கூடாது.

12 November 2011

சருமத்தை மிருதுவாக்கும் சப்போட்டா


சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.
100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.
சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.

தோற்றப்பொலிவு தரும்

ஒல்லியாக தெரிவது சிலரது அழகுக்கு குறைச்சலாக இருக்கும். அவர்கள் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் மாற சப்போட்டா பழம் மிகுந்த உதவிபுரிகிறது. தோல் நீக்கியா சப்போட்டா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதுடன் 2 டீஸ்பூன் வெள்ளரி விதைப் பவுடன் கலந்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை விரல்களில் நன்றாக பூசி குளிக்கவும். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம் கைகளை பொலிவாக்கி, பூசினாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

கொழு கொழு கன்னங்கள்

கன்னம் ஒட்டிப்போய் எலும்பு தூக்கிக்கொண்டிருக்கிறதா? கொழு, கொழு கன்னங்கள் பெற சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல் கழுத்துவரை இட, வலமாக தடவ வேண்டும். காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் முகம் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர பளபளவென கன்னம் மின்னும்.

ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி, குளித்து வர அவை வறட்சி நீங்கி மென்மையாக மிளிரும். சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை கரைக்கிறது. இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. வயிற்றெரிச்சல், மலச்சிக்கல், மூலநோய்க்கு சிறந்த தீர்வாகிறது.

தூக்கம் தரும் சப்போட்டா ஜூஸ்

இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்கள், சப்போட்டா ஜூஸ் குடித்துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் நம்மை தாலாட்டும். பனைவெல்லம், சுக்கு, சித்தரத்தை மூன்றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகியம்போல சாப்பிட்டால், திடீர் ஜுரம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும்.

பித்தம் குணமாகும்

சப்போட்டா பழ ஜூசு டன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். இது பித்தத்தினால் ஏற்படும் வாந்தி மயக்கத்தை போக்குகிறது. சப்போட்டா பழத்துடன் உரு டீஸ்பூன் சீரகம் கலந்து சாப்பிட பித்தம் நீங்கும். 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.

முடி கொட்டுவது கட்டுப்படும்

'கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? கவலைவேண்டாம். உங்களுக்கு கைகொடுக்கிறது 'சப்போட்டா கொட்டை தைலம்'. ஒரு டீஸ்பூன் சப்போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். பின்னர் ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்த தைலத்தை சிறிதளவு பஞ்சில் நனைத்து படிப்படியாக தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும். சீயக்காய், கடலைமாவு தேய்த்து குளிக்க ஒரு மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும்.

World's new seven wonders of nature named, Bu Tinah Island loses race gracefully


    The Philippines' Puerto Princesa Underground River
    Dubai: The Amazon rainforest and the Philippines’ Puerto Princesa Undergound River were named among the new seven wonders of nature, while Abu Dhabi’s Bu Tinah Island settled for a place among the top 14 finalists of the global poll.
    Bu Tinah was the only finalist representing the Gulf region among 28 finalists in total, from an original 447 sites from around the world. Countries, especially the Philippines, have launched a massive vote campaign in hopes of dominating the poll.

    Vietnam's Halong Bay and Argentina's Iguazu Falls were also named among the world's new seven wonders of nature, according to New7Wonders organisers.

    The other four crowned the world's natural wonders are South Korea's Jeju Island, Indonesia's Komodo and South Africa's Table Mountain, said the New7Wonders foundation, citing provisional results.
    The New7Wonders Foundation in Zurich, Switzerland, the organiser of the global vote, explained in a statement posted on its website that the names of the seven wonders have been announced in alphabetical order and they do not have any ranking.
    Final results will be announced early 2012, said the Swiss foundation, warning however that there may yet be changes between the provisional winners and the final list.
    Article continues below

    The results come after a long consultation process lasting from December 2007 to July 2009, when world citizens were asked to put forward sites which they deemed were natural wonders.
    More than a million votes were cast to trim the list of more than 440 contenders in over 220 countries down to a shortlist of 77.
    Campaign for Bu Tinah
    The Environment Agency-Abu Dhabi (EAD)  had conducted an extensive campaign to encourage  people to vote for Bu Tinah. The campaign received support from the UAE rulers and  every section of the society.
    Bi Tinah  Island is a habitat for seven groups of plant and animal species such as coral reefs, dugongs, natural mangroves, hawksbill turtles, dolphins, ospreys and socotra cormorants.
    Located around 130km west of Abu Dhabi, it was established as a natural reserve in 2001 and then accepted by Unesco as a core area within the Marawah Marine Biosphere Reserve in 2007 — the first such reserve in the region.
    The EAD officials already said they did not bother the results of vote because the campaign for Bu Tinah Island had already born the fruits in terms of the awareness about biodiversity and environmental conservation.
    "People who thought the UAE's natural environment was not beyond desert were astonished to know that the country has the second largest population of dugongs, globally significant presence of endangered hawksbill turtles, 13 types of dolphin species and significant presence of mangroves," a senior EAD official told Gulf News.

    The new world wonders

    Amazon rainforest:  The forest covers over a billion acres, encompassing areas in Brazil, Venezuela, Colombiam Ecuador and Peru. At least 40,000 plant species, 3,000 freshwater fish species and more than 370 reptile species exist in the Amazon.
    Halong Bay: Vietnam's attraction is made up of 1,600 islands and islets. The islands are dotted with caves, most of which can only be reached by a charter boat. It was first listed as a Unesco World Heritage Stie in 1994.
    Iguazu Falls: The site in Argentina is a network of 275 different waterfalls spanning an area that is 3 kilometres wide. The part with the largest volume of water is the narrow horseshoe of the Devil's Throat, which cradles between Argentina and Brazil. Unesco declared the Iguazu Falls as a World Heritage Area in 1986.
    Jeju Island: South Korea's subtropical volcanic island is located 130 kilometres off the southern coast of the Korean Peninsula. It is known for its scenic mountains, waterfalls, forests, caves and beaches. In 2002, Unesco declared Jeju a "biosphere reserve", and listed it as a World Natural Heritage Site in 2007. In 2010, it was awarded "geopark" status.
    Komodo: Indonesia's Komodo island is famous for its unique fauna and its unusual inhabitant, the Komodo dragon, which is considered the world's largest living lizard. Komodo island also features a beach with pink sand - one of only seven in the world.
    Puerto Princesa Underground River: The Philippines' tourist spot can be reached through an organised boat ride. To enter the river, one needs to go on a short hike from Sabang town in Puerto Princesa. One of the river's distinguishing features is that it emerges directly into the sea, and its lower portion is subject to tidal influences. The area has some of the most important forests in Asia and is home to more than 250 bird species, 800 plant species and at last 295 types of trees. It was declared a World Heritage Site in 1999.

    Table Mountain: This tourist hotspot in South Africa is a level plateau edged by impressive cliffs. The plateau forms a dramatic backdrop to Cape Town. The mountain's vegetation landscape, home to at least 2,200 plant species, is a protected area and is a World Heritage Site.


    09 November 2011

    துபாயில் பெருநாள் சந்திப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு கூட்டம்


    துபாய்: கடந்த 6ம் தேதி துபாய் ஸ்டார் சர்வதேச பள்ளி அரங்கில் தியாகத் திருநாள் சந்திப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    இந்த நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ஏ.எஸ். இப்ராகிம் தலைமை தாங்கினார். ஷார்ஜா பிளாக்துளிப் நிறுவ‌ன‌ நிர்வாக‌ இய‌க்குந‌ர் யஹ்யா முன்னிலை வகித்தார். மேலத்திருப்பூந்துருத்தி துக்காச்சி காஜாமைதீன் துவக்க‌வுரை நிக‌ழ்த்தினார்.

    முகம்மது பந்தர் ஹாபிஸ் முகம்மது முஸ்தபா இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். மேலத்திருப்பூந்துருத்தி லியாகத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து ஸ்கைசீ இய‌க்குந‌ர் செய்ய‌து அப்துல் காதர் காக்கா ( சீனா தானா ),சென்னை தானிஷ் அஹ‌மது பொறியிய‌ல் கல்லூரி செய‌லாள‌ர் காதர்ஷா, ஈமான் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாளர் திருப்பனந்தாள் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாயத் ஆகியோர் கல்வி விழிப்புணர்வு குறித்து பேசினார்கள்.

    அதை தொடர்ந்து நடுக்கடை ஏ.பி. முகம்மது, தம்பி ராஜா, ஹ‌ஸ‌ன் அலி, இக்பால் ம‌ற்றும் அப்துல் க‌பூர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலத்திருப்பூந்துருத்தி அஹ‌மது நன்றியுரை நிகழ்த்தினார்.
    இந்த நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா நடுக்கடை, முஹ‌ம்மது பந்தர், கண்டியூர், திருப்பூந்துருத்தி ஜமாஅத்தார்கள் ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.

    துபாயில் மார்க்கக் கல்வியுடன் கூடிய ஒரு பொதுக்கல்வி நிறுவனம் விரைவில் அமையப்போகிறது என்ற அறிவிப்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!


    கணவன் மனைவி என்று இருந்தால் அங்கு பிரச்சனை இல்லாமலா இருக்கும். ஆனால் அவ்வப்போது எழும் பிரச்சனைகளை அப்பொழுதே மறந்துவிட்டால் இல்லறம் நல்லறமாக இருக்கும். இல்லை என்றால் திருமண வாழ்க்கை கசந்துவிடும்.

    மனைவிகளிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்,

    1. எப்பொழுது பார்த்தாலும் நை, நை என்று நச்சரிப்பது. என்னங்க வீட்டுக்கு ஒரு புது டிவி வாங்கலாம், புது டிசைன் நகை வாங்கலாம் என்று பெரிய பட்டியல் போடுவது. கணவன் வரவுக்கேற்ப செலவழித்தால் நல்லது.

    2. கேள்வி கேட்டே கொல்வது. அலுவலக்ததில் இருந்து வீ்ட்டுக்கு வர நேரமாகிவிட்டது என்றால் அவ்வளவு தான். ஏன் லேட், எங்கே போனீங்க, யாரைப் பார்த்தீங்கன்னு பல கேள்விகள். ஏற்கனவே எரிச்சலில் வந்திருக்கும் கணவனை இந்த கேள்விகள் மேலும் எரிச்சலூட்டும்.

    3. நான் செய்வது தான் சரி என்கிற எண்ணம் கணவன்மார்களை கடுப்பாக்கும்.

    4. என்னை ஸ்போர்ட்ஸ் சேனல் பார்க்க விட மாட்டேன் என்கிறாள். ஆனால் அவள் மட்டும் எப்பொழுது பார்த்தாலும் சீரியல் பார்த்து என்னை வதைக்கிறாள் என்று கணவன்மார்கள் புலம்புகிறார்கள்.

    5. நிம்மதியா கார் ஓட்ட விட மாட்டேன் என்கிறாள். அப்பொழுது கூட ஏதாவது பிரச்சனையைப் பற்றி பேசி இம்சிக்கிறாள்.

    6. அவளுக்கு உதவலாமே என்று சமையல் அறைக்குள் சென்றால், நீங்க வேலைப் பார்த்து கிழிச்சீங்க. எனக்கு ஒன்னுக்கு இரண்டு வேலை வைக்காம போங்க என்று விரட்டுகிறாள்.

    7. நான் அவளுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறாள். என் பெற்றோரைக் கூட அண்டவிட மாட்டேன் என்கிறாள். என்னையே என் பெற்றோருக்கு எதிராகத் திருப்ப முயற்சி செய்கிறாள்.

    8. உடன் பிறப்புகளுடன் பேசவிட மாட்டேங்கிறா. பேசினால் இட்டுகட்டி ஏதாவது குற்றம்குறை கூறுகிறாள்.

    9. நண்பர்களுடன் வெளியே செல்ல முடியவில்லை. நான் முக்கியமா, இல்லை உங்களுக்கு நண்பர்கள் முக்கியமா என்கிறாள்.

    10. திடீர், திடீர் என்று கோபப்படுகிறாள். காரணம் கேட்டால் திட்டித் தீர்த்து விடுகிறாள்.

    என்ன பெண்களே, இந்த தவறுகளைத் திருத்திக் கொண்டு கணவன் மெச்சும் மனைவியாக நடக்க முயற்சி செய்வீர்களா?

    கண்டிப்பான மேலதிகாரியை சமாளிக்கனுமா?



    Boss
    வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது பழமொழி. அது அலுவலகச் சூழலுக்கும் பொருந்தும். எந்த பணி செய்தாலும், அது எத்தனை சிறப்பானதாக இருந்தாலும் விமர்சனம் செய்ய மேலதிகாரிகள் ரெடியாக இருப்பார்கள் சிறப்பான பணி என்று பிறர் பாராட்டும் பட்சத்தில் அந்த வெற்றியை தனதாக்கிக் கொள்வது அநேக மேலதிகாரிகளின் செயலாக உள்ளது. இந்த சூழலில் தமது உரிமை பறிக்கப்படுவதாக நினைக்கின்றனர் பலர்.

    இத்தகைய இறுக்கமான சூழலில் பணி புரிவது, உங்களால் மட்டுமின்றி, பெரும்பாலான பணியாளர்களால் சகிக்க முடியாதுதான். இச்சூழல் உங்கள் பணிகளின் தரத்தைப் படிப்படியாக நாளடைவில் குறைத்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உங்களைத் தன் ஆளுகைக்கு உட்படுத்தும் ஒருவரோடு தொடர்ந்து பணி புரிய முடியாதுதான். ஆனால், சில கட்டாயத்தினால் அவருக்குக் கீழ் வேலை செய்தே ஆகவேண்டிய சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டு விடுகின்றீர்கள். சவாலாக நிற்கும் அலுவலக மேலதிகாரிகளை சமாளிக்க சில எளிய டிப்ஸ்.

    திறமையின் மீது நம்பிக்கை

    உங்கள் பணித்திறமையின் மீது உங்களுக்கு நூறு சதவிகித நம்பிக்கை இருக்கவேண்டும். ஏனெனில் அப்பொழுதுதான் பிறரால் உங்களை எளிதில் டாமினேட் செய்ய முடியாது. சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு எளிதில் நீங்களே தீர்வுகாண முயலவேண்டும். எதற்கெடுத்தாலும் மேலதிகாரியை எதிர்பார்ப்பதனால்தான் அவர் உங்களை அடக்கியாள நினைப்பார்.

    கடுமையான உங்கள் ‘பாஸ்’ உங்களுக்குக் கட்டளையிட வருவதற்கு முன், அவருடைய முகபாவங்களைக் குறிப்பால் உணர்ந்து, உங்களை அவரிடமிருந்து சற்றுத் தொலைவாகவே வைத்துக்கொள்ள வேண்டும். உங்களின் மற்ற வேலைகளில் முனைப்பாக இருப்பதாகக் காட்டிக்கொண்டால், அவர் உங்களிடம் வருவதையேகூடத் தவிர்த்துக் கொள்ளலாம். இதைவிட பழமையான - இலகுவான முறை ஒன்று உள்ளது அது கட்டுபாடான மேலதிகாரியை உங்கள்மீது கட்டுப்பாடு விதிக்க விடக் கூடாது.

    நேர விரயம் தவிர்க்கலாம்

    எப்பொழுதுமே தான் செய்வதுதான் சரி என்பது மேலதிகாரிகளின் கருத்து. அத்தகைய எண்ணம் கொண்ட நபரிடம் விவாதம் செய்வது நேரவிரயம்தான். அடக்கியாளும் தன்மையுடைய மேலதிகாரியுடன் தர்க்கம் செய்வது, நம் நேரத்தை வீணடிப்பதாகும். தர்க்கம் தொடர்ந்தால், அதற்கு முடிவே இல்லாமலாகி, இறுதியில் அவருடைய அதிகாரமே நிலைபெறும் அளவுக்குப் போய்விடும். அவருக்கு எதிராகச் சவால் விட்டால், அதுவே பெரிய ஆபத்தானதாகி, உங்களுடன் அவர் எவ்விதப் பேச்சுவார்த்தைக்கும் முன்வர மாட்டார்.

    தேவையற்ற விவாதம் வேண்டாம்

    இருவருக்கிடையே மோதல் ஏற்படும் சூழலில், நீங்கள் உங்களைக் குறையற்றவராக வாதிட முற்பட்டால், இந்த டாமினேசன் பாஸ் உங்களை அடக்கி ஒடுக்கப் முனைவார், இதானல் அவருடைய வலிமைதான் கூடும். எனவே, சற்றே நிதானிப்பது உங்களுக்கு நல்லது. உங்களைக் குறை கூறித் தாழ்த்த முற்பட்டாலும் அச்சுறுத்தினாலும், அதனால் நீங்கள் பாதிக்கப்படப் போவதில்லை என்பதை வெளிப்படுத்தாதீர்கள். இந்த உங்களின் நிதானம், அவரை முட்டாளாக்கும்; அல்லது, அவரே தனது போக்கை மாற்றிக்கொள்வார்.

    வெற்றி பெற வழி

    மேலதிகாரி கூறுவது சரிதான் என்று காட்டிக்கொள்வதே நாம் வெற்றி பெற ஓர் எளிதான வழி என்கின்றனர் உளவியலாளர்கள். ஏனெனில் எந்த ஒரு மேலதிகாரியுமே தான் கூறுவதை நீங்கள் கேட்க வேண்டும் என்றுதான் விரும்புவார். அவர் கூறுவதைச் செவி தாழ்த்திக் கேட்பதுவே, இந்தப் போராட்டத்தில் பாதி வெற்றி கிட்டியதாகும். செயல்பாட்டுத் திட்டங்களில் முடிவெடுக்கும் உரிமையை முழுமையாக அவருக்கே விட்டுக்கொடுக்க வேண்டும் ‘இல்லை, முடியாது, சாத்தியமில்லை’ என்பவை போன்ற சொற்களை அவர் உங்களிடமிருந்து வருவதை அவர் விரும்பமாட்டார் என்பதால், அவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் உங்களுக்குத் தேவையானதும் தவிர்க்க முடியாததும் ஒன்றே ஒன்றுதான். அதுதான் - தன்னடக்கம்.

    அச்ச உணர்வே அடிப்படை

    உங்களுடைய திறமையை ஒப்புக்கொண்டால் எங்கே மேலதிகாரியை முந்தி சென்றுவிடுவீர்களோ என்ற அச்சம் எல்லா அதிகாரிகளுக்கும் வருவது இயற்கை. எனவே கெடுபிடியான மேலதிகாரியின் செயல்பாடுகள் அனைத்தும், அவரிடத்தில் உள்ள அச்சத்தினாலும் ஆத்திரத்தினாலும் பாதுகாப்பற்ற தன்மையினாலுமே வெளிப்படுகின்றன என்பதை நீங்கள் மனத்தில் பதிய வைக்கவேண்டும். தன்னைப் பாதுகாக்கவே அவர் பிறரை அடக்கியாள முற்படுகிறார் என்ற உண்மை உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் கண்டிப்பான மேலதிகாரியை எளிதில் சமாளிக்க முடியும்