லண்டன்: இங்கிலாந்தில் உள்ள சரே மாநிலம் எப்சம் நகரைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஆஸ்கர் செல்பி. இவன் ஸ்டேம்போர்டு தொடக்க பள்ளியில் படித்து வருகிறான்.
இங்கிலாந்தில் 14 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜெனரல் சர்டிபிகேட் ஆப் செகன்டரி எஜுகேஷன் (ஜி.சி.எஸ்.இ.) தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் ஆங்கிலம், அறிவியல், கணிதம் என்று தங்களுக்கு பிடித்த பாடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
நிர்ணயிக்கப்பட்ட வயதை விட பாதி வயது குறைவான ஆஸ்கர் இந்த தேர்வில் கணிதத்தை தேர்வு செய்து எழுதினான். அதில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளான்.
இளம் வயதிலேயே கணித மேதையான இவனின் மீது உலகின் பார்வை பட்டுள்ளது. இவன் ஆற்றலைப் பார்த்து வியந்த இங்கிலாந்து அரசு ஆஸ்கரை நிதித்துறை ஆலோசகராக நியமித்துள்ளது. இங்கிலாந்து அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்க இவன் ஆலோசனை அளிக்கவிருக்கிறான்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று அரசுக்கு ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளான். இங்கிலாந்து அரசின் ரூ. 12.46 லட்சம் கோடி பட்ஜெட் பற்றாக்குறையை போக்க என்ன ஆலோசனை வழங்க உள்ளான் என்று கேட்டதற்கு வரி உயர்வு மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று கூறினான்.
No comments:
Post a Comment