டெல்லி: செல்போன் சந்தையில் புதிதாக நுழைந்துள்ள அரோமா மொபைல்ஸ் நிறுவனம், புதிய டச்ஸ்கிரீன்செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
செல்போன்கள் மற்றும் உதிரி பாக விற்பனையில் புதிதாக நுழைந்துள்ள நிறுவனம் அரோமா மொபைல்ஸ். இது முதல் டச் ஸ்கிரீன்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் அரோமா ஏடி 335.இரட்டை சிம்களைப் பொருத்தக் கூடிய இந்த போனில், 2.0 இன்ச் டிஎப்டி டச் ஸ்கிரீ்ன் உள்ளது. ப்ளூடூத், டிஜிட்டல் கேமரா, வீடியோ பிளேயர், ரெக்கார்டர் போன்ற வசதிகள் உள்ளன. 1000 போன் எண்கள் வரை சேமிக்கலாம். மெமரி 4 ஜிபி வரை வைத்துக் கொள்ள முடியும்.ஜிபிஆர்எஸ், வாப், எம்எம்எஸ் ஆகிய வசதிகளையும் இதில் பெற முடியும். மொபைல் டிராக்கர், டார்ச், வாய்ஸ் சேஞ்சர்/பின்னணி இசை, ஆட்டோ கால் என சகல வசதிகளும் நிறைந்த போனாக இது உள்ளது. மொபைல் போனின் விலை ரூ. 2299 ஆகும்.
போனை வெளியிட்டுப் பேசிய நிறுவனத்தின் இயக்குநர் பவன் சத்தா பேசுகையில், வாடிக்கையாளர்களுக்கு புதியவற்றைத் தரும் நோக்கிலேயே இந்த புதிய வகை செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளோம். அந்த வகையில் டச்ஸ்கிரீன் வசதி கொண்ட போனாக அரோமா ஏடி335 விளங்குகிறது.விலையும் அதிகம் இல்லை. இதனால் சகல தரப்பினரும் இதை வாங்க முடியும் என்றார்.
ரூ. 3500க்கு லெமன் மொபைல்ஸின் 3ஜி போன்.இதேபோல லெமன் மொபைல்ஸ் நிறுவனம் ரூ. 3,500க்கு 3ஜி ஹேன்ட்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் மாதத்திலிருந்து இது விற்பனைக்கு வருகிறது.இதுகுறித்து பாஸ்ட்டிராக் கம்யூனிகேஷனின் இயக்குநர் கோபால் கர்லா கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு அதிக அம்சங்களைக் கொண்ட செல்போன் சாதனங்களை வழங்குவதே எங்களது நோக்கமாகும். அதிலும் 3 ஜி ஹேன்ட்செட் விற்பனை வரும் நாட்களில் பெரிய அளவில் அதிகரிக்கும். எனவேதான் புதிய வகை 3ஜி ஹேன்ட்செட்டை குறைந்த விலையில் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.
No comments:
Post a Comment