பிலிப் குரோய்சனுக்கு தற்போது வயது 42. கடந்த 1994-ம் ஆண்டு ஏணியில் ஏறி டிவி
கை, கால்களை இழந்தாலும் அவர் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. வாழ்வில் தன்னால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று நம்பினார். இதையடுத்து தனக்குப் பிடித்த நீச்சலில் உலக சாதனை படைக்க எண்ணி அதற்கான பயிற்சி மேற்கொண்டார்.
இங்கிலாந்தின் போக்ஸ்டோனில் இருந்து புறப்பட்டு பிரான்ஸில் உள்ள விசான்ட் நகரை ஆங்கிலக் கால்வாய் வழியாக நீந்தி வந்தடைந்தார். இவர் 34 கி.மீ தூரத்தை நீந்திக் கடந்துள்ளார்.
இந்த தூரத்தை 24 மணி நேரத்தில் கடக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அவர் 13 மணி நேரத்திலேயே கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
தன்னம்பிக்கையை துடுப்பாகப் பயன்படுத்தி ஆங்கிலக் கால்வாயை இவர் நீந்திக் கடந்துள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
No comments:
Post a Comment