17 June 2012

பான் (PAN) கார்டின் முக்கியத்துவம்

நம்மில் பலரிடமும் பான் கார்ட் உள்ளது (Permanent Account Number-PAN). ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. பான் கார்ட் பற்றிய சில விளக்கங்கள் இதோ...


பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை. இந்த அட்டை கோரி விண்ணப்பித்து இதைப் பெறலாம். சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.


ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான் கார்ட் உதவுகிறது.


பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் AFZPK7190K என்று வைத்துக் கொள்வோம்.


முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.


“P” என்றால் அது தனிப்பட்ட நபருடையது. “F” என்றால் Firm, “C” என்றால் Company, “T” என்றால் டிரஸ்ட் (அறக்கட்டளையுடையது) என்று பொருள்.


5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும்.


அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.


பான் கார்ட் வைத்திருப்பது கட்டாயமா?


ஆமாம். பான் கார்ட் மிக மிக அவசியமானதே. வங்கியில் பணப் பரிமாற்றத்துக்கும், வருமான வரித்துறைக்கு நமது கணக்குகளை சமர்பிக்கவும் இது கட்டாயமாகும்.


எப்படி இதைப் பெறுவது?


வருமான வரித்துறையின் Form 49 விண்ணப்பத்தில் இதைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தை www.incometaxindia.gov.in, www.utiisl.co.in or tin-nsdl.comஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம்.


உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற 
https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையத்தளத்தை நாடலாம்.


இந்திய குடிமகன்கள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.


1. பள்ளி டிசி
2. பிளஸ் டூ சான்றிதழ்
3. கல்லூரி் சான்றிதழ்
4. வங்கிக் கணக்கு விவரம்
5. கிரடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்
6. வாட்டர் பில்
7. ரேசன் கார்ட்
8. வீட்டு வரி ரசீது
9. பாஸ்போர்ட்
10. வாக்காளர் அட்டை
11. ஓட்டுனர் உரிமம்
12. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்


அதே போல விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.


1. மின் கட்டண ரசீது
2. தொலைபேசி கட்டண ரசீது
3. வங்கிக் கணக்கு விவரம்
4. வீட்டு வாடகை ரசீது
5. பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்
6. பாஸ்போர்ட்
7. வாக்காளர் அடையாள அட்டை
8. வீட்டு வரி ரசீது
9. ஓட்டுனர் உரிமம்
10. ரேசன் கார்டு
11. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்


விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.

12 June 2012

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்தேன் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் முஹம்மது இஸ்மத்




முஹம்மது இஸ்மத், மணிப்பூரைச் சேர்ந்த மாணவர். அகில இந்திய பள்ளி கல்வித் தேர்வான சி.பி.எஸ்.இன் 12ஆம் வகுப்பு தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளார். இவர், எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றி நாட்டுக்கும்; மக்களுக்கும் சேவை செய்வதே தனது எதிர்கால லட்சியம் என தெரிவித்துள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் உள்ள தவ்பல் மாவட்டத்தில் லைலாங் ஹையோரபி என்ற குக்கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த முஹம்மது இஸ்மத்தின் வீட்டில் மின்சார வசதி கிடையாது.

ஐ.ஏ.எஸ். தேர்விலும் இந்தியாவிலேயே முதலாவதாக தேர்வாவது தனது லட்சியம் என்று கூறிய இஸ்மத், அந்தப் பதவியின் மூலம் நாட்டு மக்களின் அமைதி மற்றும் சமாதானத்திற்காகப் பாடுபடுவேன் என்கிறார். புதுடெல்லியின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை அறிவியலில் (இயற்பியல்) சேர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்மத் 18 மாத குழந்தையாக இருக்கும் போதே அவரது தாயார் இறந்துவிட்டார்.

இஸ்மத்தின் தந்தையார் மவ்லவி பசியுர் ரஹ்மான் ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியராகவே பணியாற்றி தனது ஏழு குழந்தைகளையும் வளர்த்து வந்தார். ஆறு பெண் குழந்தைகளுக்குப் பின்னர் கடைக்குட்டி ஆண் குழந்தையாய் பிறந்தார் முகமது இஸ்மத். வறுமையிலும் செம்மை பேரணி ஆறு பெண்களை பட்டதாரிகளாக்கினார் மவ்லவி பசியுர் ரஹ்மான். வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் மெழுகுவார்த்தி வெளிச்சத்தில் படித்த முஹமது இஸ்மத், சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்றார். கணிதம், வேதியியல், ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் ஹோம்சயின்ஸ் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 98 மதிப்பெண்μம், இயற்பியலில் 97 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தினமும் எட்டு மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை படித்து தேசிய அளவில் முதலிடம் பிடித்த முஹமது இஸ்மத் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துவோம்.



--அபுசாலிஹ்

25 April 2012

தமிழ் மாணவர்களின் தற்கொலைகளை கொச்சைபடுத்திய அண்ணா பல்கலைகழகம்


தமிழகத்தின் நம்பர் ஒன் கல்வி நிலையம் என்று பெருமைப்படக்கூடிய அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமபுற வரும் மாணவர்களின் தொடர் தற்கொலைகளும்,தற்கொலைகளின் காரணம் கண்டுபிடிக்காமல் மாணவர்களின் சாவை கொச்சைபடுத்தும் போக்கை தொடர்ந்து செய்கிறது காவல்துறையும்,அண்ணா பல்கலைகழகமும்..
 
இந்த பல்கலைக்கழகத்தில் படித்த மணிவண்ணன் என்கிற மாணவர் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியிலிருந்த நமக்கு அடுத்த சில நாட்களில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த மடப்பட்டுக்கு அருகேயுள்ள கருவேப்பிலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தைரியலட்சுமி தற்கொலைசெய்துகொண்டார் எனும் தகவல் கிடைத்த நிலையில் தைரியலெட்சுமி, மணிவண்ணன் ஆகியோரின் வாழ்க்கைஅ பார்ப்பதற்கு முன்னால் ..! அண்ணா பல்கலைகழகத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் செத்தபிறகு கொச்சைபடுத்தபட்டதை பார்ப்போம்..

நாமக்கல் மாவட்டத்திலுள்ளமுள்ளுக்குறிச்சியை சேர்ந்த ஜோதி (வயது 18).. 10-ம் வகுப்பு தேர்வில் 475 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1105 மதிப்பெண்கள் பெற்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி இ.சி.இ. படித்து வந்தவர். கடந்த 2010 செப்டம்பர் மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்போதைய பத்திரிக்கைகள்,தொலைக்காட்சிகள், எல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது... ஆனால் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் ஜோதி தனது அண்ணன் தீபக்கிடம், தன்னை மாணவர்கள் கேலி கிண்டல் செய்து மிரட்டுகிறார்கள் அதனால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை, இனி சென்னைக்கு படிக்க செல்லமாட்டேன் என்று கூறி கதறி அழுதுள்ளார். அப்போது தீபக் சொன்ன வார்த்தைகளில் ஆறுதல் அடையாமல் அவசரப்பட்டு தூக்கில் தொங்கிவிட, ஜோதியின் மரணத்திற்கு காவல்துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் சொன்ன காரணம் கேவலமானது .

ஜோதி மரணம் நிகழ்ந்த அன்று எவ்வித விசாரணை நடத்தாமலேயே துணைவேந்தர் மன்னர்ஜவகர்பல்கலைகழகத்தில் ராகிங் நடக்கவேயில்லை என்றதும், அப்போதைய மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி.சிவனாண்டி, ஜோதியின்செல்போனிலிருந்து, சக மாணவருக்கு,உன்னை ஏற்றுக்கொள்வதாக, எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும், அதை அந்த மாணவன் சக நண்பர்களிடம் சொல்லிவி, சகமாணவர்கள் கேலி செய்யும்போது, ஜோதி தனது செல்போன் ஹாஸ்டலில் இருப்பதாக கூறியிருக்கிறார்ஆனாலும் எஸ்.எம்.எஸ் மேட்டர் வெளியே தெரிந்துவிட்டதால் ஜோதிதற்கொலை செய்து கொண்டதாக சிவணாண்டி பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஆனால் கல்லூரி வகுப்பில் இருக்கும் ஜோதி,ஹாஸ்டலில் இருக்கும் செல்போனில் எப்படி எஸ்.எம்.எஸ்.அனுப்பி இருக்க முடியும்அப்படியானால் அவரின் செல்போனிலிருந்துஎஸ்.எம்.எஸ் அனுப்பியது யார்ராகிங் கொடுமையால் மற்ற மாணவர்கள் ஜோதியின் செல்போனை எடுத்து எஸ்.எம்.எஸ். ஏன் அனுப்பி இருக்க கூடாது?இதுபோன்று, எவ்வித விசாரணையும் நடத்தாமல் ஒரே நாளில் இறந்து போன ஜோதி இனி உயிருடன் வர மாட்டார் என்ற தைரியத்தில், ஜோதி காதலால் தற்கொலை செய்துகொண்டார் என பைலை மூடிவிட்டனர்.

ஜோதியின் தற்கொலையை மனதில் வைத்துகொண்டு, தைரிய லட்சுமி,மணிவண்னன்தற்கொலைக்கொலைகளை படியுங்கள்…
 
பலரின் வாழ்க்கையை காப்பாற்றிய மாணவன் மணிவண்ணன் தற்கொலை:
 
கடந்த 2000-ம் ஆண்டு தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த அபூர்வாகுழந்தைத் தொழிலாளிகளை மீட்டெடுக்கும் போது,மணிவண்ணனையும் மீட்டுப் பள்ளியில் சேர்த்துவிட்டார். பொ.மல்லாபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு சேர்ந்த மணிவண்ணன் நன்றாகப் படிக்கத் தொடங்கினார். வறுமை விரட்டிக்கொண்டே இருந்தாலும்,10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 461 மதிப்பெண்களும் 2 தேர்வில் 1,159 மதிப்பெண்களும் எடுத்தார்.

குழந்தைத் தொழிலாளியாக இருந்த என்னை மீட்டெடுத்த அபூர்வா கலெக்டரைப் போலவே,நானும் ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும்என்று அரசு மற்றும் பல தனியார்களிடம் கல்வி உதவித் தொகை பெற்றுஅண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் பிரிவில் சேர்ந்தார். தனக்கு வரும் கல்வி உதவித் தொகையைக் கொண்டுசேலத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்த கனிஷ்காசக்திவேல்சிவகுமார் மூவரையும் தத்து எடுத்துப் படிக்க வைத்திருக்கிறார். வறுமை காரணமாக யாரும் படிக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகள் செய்துவந்த மணிவண்ணன்தான்கடந்த 27-ம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். என்பதுதான் பரிதாபமாக இருக்கிறது.

 
'அபூர்வா செந்தமிழன்’ என்ற புனைப்பெயரில் 'தாய்ப்பால் வாசம்’ என்ற கவிதைத் தொகுப்பை ஏப்ரல் 4-ம் தேதி வெளியிட இருந்தவர்.. 'கருவறை விதைகள்’ என்ற அமைப்பின் மூலம் ரத்ததானம்கண்தானம் குறித்து கல்லூரியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியவர் மணிவண்ணன்.யாருக்கு எப்போது ரத்தம் தேவைப்பட்டாலும்... தகவல் தெரிந்தால் உடனே ஓடிச்சென்று உதவுவார். தன்னுடன் படிக்கும் கல்லூரி மாணவர்கள் கட்டணம் செலுத்தக் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, 'சிறு துளிகள்’ என்ற அமைப்பை ஏற்படுத்திகல்லூரி வளாகத்தில் உண்டியல் ஏந்தினார். மூன்று மாதங்களில் 85 ஆயிரம் ரூபாய் சேகரித்து 14 மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைத்தார்.
 
படிப்பது இன்ஜினீயரிங் என்றாலும் மணிவண்ணன் முழுக்கமுழுக்க தமிழ் மாணவனாகத்தான் இருந்தவருக்கு, ஆங்கிலம் தடுமாற்றத்தைத் தறவே,இன்ஜினீயரிங் பாடம் படிக்க விருப்பம் இல்லாமல் இருந்த மணிவண்ணன் 26 பேப்பர்கள் அரியர்ஸ் வைத்திருந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக சொல்கிறார்கள்..

ஜோதியை போல் சாவுக்கு பின் கொச்சைபடுத்தப்படும் தைரிய லெட்சுமி:

தைரிய லெட்சுமியின் அம்மா உமா சில வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட, மூன்று பெண்பிள்ளைகளையும் கூலி வேலை செய்து காப்பாற்றி வருகிறார் அப்பா சக்திவேல், குடும்ப கஸ்டத்தை உணர்ந்த லெட்சுமி,10-ம் வகுப்பில் 465மதிப்பெண்களும், 2 தேர்வில் 1012மதிப்பெண்கள் பெற்று அண்ணா பல்கலைக் கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங் தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்துள்ளார்.இரண்டு செமஸ்டர்கள் கூட முடியாத நிலையில் சுத்துப்பட்டு கிராமத்துலயே அண்ணா யூனிவர்சிட்டியில படிக்கிற ஒரே பொண்ணு, லெட்சுமியை முன்னுதாரணமா காட்டி ஊர்க் குழந்தைகளைப் படிக்கச் சொல்லும் ஊர்காரர்களுக்கு தைரிய லெட்சுமி தூக்கில் தொங்கி விட்டார் என்பது பேரதிர்ச்சிதான்.
 
''சிவில்மெக்கானிக்கல் இரண்டையும் தமிழ்வழிக் கல்வியில் கொண்டுவந்துவிட்டாலும்,புத்தகங்கள் சரியான மொழியாக்கத்தில் இல்லை.மிகக்கடினமான மொழி நடையிலும்,நிறைய வார்த்தைகள் தமிழ்ப்படுத்தாமல் ஆங்கிலத்தில் இருந்த நிலையில், தமிழ் அல்லது இரண்டும் கலந்து பரிட்சை எழுதலாம்னு சொல்றாங்க. ஒரு சிலர் தூய தமிழில்தான் எழுதணும்னு சொல்றாங்க.மாணவர்கள் குழம்பி கிடக்கிறார்கள் இதில்தான் தைரியலட்சுமி தோற்றுப்போனாள்''.

ஜோதியின் சாவை போல தைரிய லெட்சுமியின் சாவையும் கொச்சைபடுத்த நினைத்த நிர்வாகம் மீண்டும் ஓர் வதந்தியை பரப்பியிள்ளது..
 
ஏழ்மையில் கல்லூரிக்கு வந்த மணிவண்ணனின் குடும்பசூழலும்,தைரியலட்சுமியின் குடும்பச்சூழலும் ஒத்துபோக இருவரும் அண்ணன் தங்கையாக பழகினார்கள்.மணிவண்ணனின் 'தாய்ப்பால் வாசம்’ கவிதைத் தொகுப்புக்குப் பிழை திருத்திய தைரியலட்சுமியையும்,மணிவன்னன் தற்கொலைக்கு காதல் தான் காரணமென கொச்சைப்படுத்துகிறது...

 
கிராமப்புறங்களில் நன்கு படித்து, நகரங்களிலுள்ள கல்லூரிகளுக்கு படிக்கச் செல்லும், மாணவர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். இந்த பிரச்சனைகளை களைய அரசு கவனம் செலுத்த வேண்டும். அதுபோலவே ஜோதி, மணிவண்ணன், தைரியபிரியா ஆகிய மரணத்திற்கான காரணங்களை கண்டறிய, விருப்பு வெறுப்பில்லாமல் முழுமையான விசாரணை மேற்கொண்டு மாணவ-மாணவியர் தற்கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...
லேப்டாப்புகளை வழங்குவதிலேயே கவனம் செலுத்தும் தமிழக அரசு, என்ன செய்ய போகிறது பார்ப்போம்.............
 
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
மாணவர்கள் தற்கொலையைப் தடுப்போம்
தன்னம்பிக்கையுள்ள சமூகம் படைப்போம்
STUDENTS HELP LINE 9698151515

திருட்டு போன அல்லது காணாமல் மொபைலை திரும்பப் பெற.. வழிகள் என்ன?


உங்கள் மொபைல் போன் திருட்டு போய்விட்டதா….?
அல்லது கவனக் குறைவாகத் தொலைத்து விட்டீர்களா…?
இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.

எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும்.

இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.

இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net.
இதில் கீழ்க்காணும் தகவல்களை தர வேண்டும்:-
பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண்.
காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.

அந்த மொபைல் போன் பயன்படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்.

சாதி வாரியாக கணக்கெடுப்பு: முஸ்லிம்கள் `இஸ்லாம்' என்று குறிப்பிட வேண்டும்: இ.யூ.முஸ்லிம் லீக்


சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து வரும் சாதிவாரியாக கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் `இஸ்லாம்' என்ற மதத்தை மட்டும் குறிப்பிட வேண்டும் என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் முழுவதும் சாதிவாரியாக கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இதில், முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். வெளிநாடுகளில் வேலை செய்கின்ற தங்கள் உறவினர் பெயர்களையும் தெரிவிக்க வேண்டும்.

இதற்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் நிர்வாகிகள், உதவியாக இருக்க வேண்டும்.

மேலும், முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் `இஸ்லாம்' என்ற மதத்தை மட்டும் குறிப்பிடவும். கணக்கெடுப்பில் நம் பெயர்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், நம் உரிமைகளைப் பெற முடியும் என்று கூறியுள்ளார்.